தொடர்புக்கு

எழுதும் ஆர்வம் கொண்டிருக்கும் புதியவர்களை படைப்பாளிகளாக அறிமுகம் செய்ய வேண்டும் என்பது இவ்விதழின் நோக்கங்களில் ஒன்று.  இளம் படைப்பாளிகள், அறிமுக எழுத்தாளர்களிடம் இருந்து படைப்புக்கள் எதிர்பார்க்கப்டுகின்றன. ஒரே நிபந்தனை மட்டுமே. படைப்பு தங்களின் சொந்த ஆக்கமாக இருக்கவேண்டும். பிற படைப்புக்களின் தழுவலோ, நகலோ தவிர்க்கப்படுகிறது.

தீவிர இலக்கியம் இங்கே கிட்டத்தட்ட ஒரு நுாற்றாண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. உள்ளங்கையில் தேங்கிய நீரில் எழும் ஆழிப்பேரலைதான் என்றாலும் தமிழின் அடுத்தக்கட்டப் பாய்ச்சல் இடைவிடாது நிகழும் களம் அது. அக்கடலில் ஒரு துளியளவு  கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இம்முயற்சியின் பேராசை.

[email protected]க்கு படைப்புகள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.