விஜய ராவணனின் பச்சை ஆமை- வாசிப்பனுபவம்.

 

தெற்கு ஹாங்காங்கில் உள்ள அபெர்டின் தீவில் வசிக்கக்கூடிய “டாங்கா” (Tanka) எனும் மீனவப் பழங்குடியினரின் வாழ்க்கைச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்களை பச்சை ஆமை எனும் குறுநாவல் நம் கண்முன்னே ஒரு வாட்டர் கலர் பெயிண்டிங்காக காட்சிப்படுத்துகின்றது. வாங் மற்றும் அவரது மனைவியின் வருகையில் டாங்கா இன மீனவர்களின் அன்றாட வாழ்வியல், நாட்டுப்புற கதைகள் மற்றும் திருவிழாக்கள் பற்றிய கதை சொல்லல் எழுத்தில் ஒரு சுற்றுலா தலம். 

கடற்கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகளில் தன் இருப்பிடத்தைக் கொண்டு, மீன்பிடித்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள “டாங்கா” இனப் பழங்குடி மக்களில் சிலர் இயற்கை சீற்றத்திற்காகவும், எதிர்கால வாழ்வாதாரம் குறித்த கேள்விகளுடனும் மீன்பிடித் தொழிலை கைவிட்டு கரையிலுள்ள அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கட்டிடங்களுக்கு இடம் பெயர்கின்றனர். பொருளாதாரம், சமூக மற்றும் அரசியல் காரணிகளுக்காக புலம்பெயர்வை நோக்கி செல்பவர்கள் அடிப்படையில் ஒரு சுற்றுச்சூழல் அகதிகள் என நார்மென் மையர்ஸ் கூறுகிறார். 

இக்கதையில் வரும் கதாபாத்திரமான ஆ கி (எனும் லீ) எனும் மீனவனின் வாழ்க்கை ஒரு இயற்கை சீற்றத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கைச்சூழலாக மாற்றமடைகின்றது. அதாவது, இச்சீற்றம் ஏற்படுத்திய பாதிப்பை உணர்ந்த  ஆ கி, அவன் பூர்விக இடமான அபெர்டினை கைவிட்டு வெளியேறுகிறான். இத்தகைய இடப்பெயர்வை எகலாஜிக்கல் ரெஃபுயூஜி என கூறலாம். 

அதாவது, சுற்றுச்சூழல் சீர்கேடு (இயற்கையாகவோ அல்லது மக்களால் தூண்டப்படுவதனாலோ) மக்களின் வாழ்க்கைத்தரத்தில் உருவாக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலால், மனிதன் பூர்வீகத்தைவிட்டு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வெளியேற வேண்டிய கட்டாய ஏற்படுகின்றது. சீற்றத்திற்கு பிறகு, அத்தகைய கட்டாயத்தில் தன் பூர்விக இடத்தைவிட்டு வெளியேறும் ஆ கி(எனும் லீ), ஒரு ”எகலாஜிக்கல் ரெஃபுயூஜியாக” மலேசியாவிலுள்ள ரெடாங் எனும் தீவில் தனக்கான குடும்ப வாழ்க்கையை உருவாக்கி கொள்கிறான். 

இயற்கைப் பேரிடரான கடல் சீற்றம் ஒரு திருப்புமுனையாக இந்நாவலில் கருதப்படுகிறது. நாவலில் இயற்கை சீற்றத்தால் பறிபோன உயிர்கள், அதன் சேதாரங்கள் என சீற்றத்திற்கு பின்  காண நேர்ந்தவை யாவும் நன்கு கடத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் இச்சீற்றத்தின் தீவிரம் “சூறைக்காற்று” என்று ஒற்றைச் சொல்லாகக் கொண்டுள்ளது. அதாவது நாவலில் சூறைக்காற்றின் தீவிரத்தை பற்றி குறிப்பிடாமல் அதன்பின் நடந்த விளைவுகளை மட்டுமே காண நேர்கிறது. “சூறைக்காற்று” எனும் பேரழிவின் தீவிரத்தை பற்றி ஒரு வாசகனுக்கு நடந்தது என்ன என்று அறிய இயலாமல் போய்விடுகின்றது. மனிதனின் இருப்பை முன்நிறுத்திக் கொள்ளும் ஒரு நாவல், காலநிலை மாற்றத்தால் நிகழக்கூடிய இயற்கை பேரழிவுகளின் தீவிரத்தைப் பற்றி கூறுவது இன்றியமையாதது. 

Non-Human forces have the ability to intervene directly in human thought – Amitav Ghosh, The Great Derangement

ஏனெனில்,காலநிலை மாற்றத்தால் உருவாகும் இத்தகைய இயற்கை பேரழிவுகளுக்கு மனிதனாகிய நாம் மிக முக்கிய காரணம் என்பது நாம் அறிந்த ஒன்றே. மேலும், இயற்கையால் மட்டுமே மனித எண்ணங்களில் நேரடியாக தலையிட முடிகின்றது. அபெர்டின் தீவைவிட்டு வெளியேறும் லீ, பேரிடர், இனக்குழு, அரசியல், பொருளாதாரம் போன்ற பேரலைகளால் அங்கு மீண்டும் செல்லவில்லை என கருதலாம்.

 மனிதனும், மற்ற பிற உயிரினங்களும் இயற்கையை சார்ந்தே இருக்கின்றோம். இந்நிலையில் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மனிதர்களை மட்டுமின்றி இன்ன பிற உயிரனங்களையும் பாதிக்கின்றது. இக்கால நிலை மாற்றங்கள் மனிதர்களோடு மட்டுமல்லாமல், இன்னும் பிற உயிரனங்கள் இடம்பெயருவதற்கு காரணமாக இருக்கின்றது என நாவலில் குறிப்படப்படும் “பச்சை ஆமை”, எகலாஜிக்கல் ரெஃபுயூஜியாக (or Eco Victim)அபெர்டின் தீவைவிட்டு, மலேசியாவிற்கு, புலம்பெயர்ந்துவிட்டது என்று உணர முடிகின்றது.

7 Comments

  1. Raja raja cholan g

    சிறப்பான கட்டுரை
    வாழ்த்துக்கள்

  2. V. கலியபெருமாள்

    மிகச் சுருக்கமான படிக்கத் தூண்டும் எழுத்து. மேலும். நாவலின் தன்மைகளை சுட்டிகாட்டியதும் நன்று.

  3. Raja raja cholan g

    சிறப்பான கட்டுரை

  4. யது நந்தன்

    புத்தகத்தைப் படிக்கத் தூண்டுகிறது இந்தக் கட்டுரை. வாழ்த்துகள்.

  5. RajiAchuthan

    அருமையான பதிவு … அழகான புரிதல் Mr. Achuthan…நல்ல நாவல்… படிக்காமலேயே புத்தகத்தை படித்து விட்டேன்…!
    என்ற உணர்வு…

  6. Raji

    அருமையான பதிவு … அழகான புரிதல் Mr. Achuthan…நல்ல நாவல்… படிக்காமலேயே புத்தகத்தை படித்து விட்டேன்…!
    என்ற உணர்வு…

  7. SANTHANAKRISHNAN P

    சிறப்பான வாசிப்பு அனுபவக்கட்டுரை. கதை சுருக்கம் சொல்வதும், கதையை அதீதமாகப் புகழ்வதும், கதையை அதீதமாக இகழ்வதும், மற்றும் கொடுக்கல் வாங்கல் என்பதாய் இப்போது புத்தக அறிமுகங்கள், விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு நடுவே நாவலின் Back drop பற்றியும், ஊடே Amitav Ghosh ன் Quotes ம் ஒரு பருந்துப் பார்வையை வாசிப்பவர்களுக்கு இக்கட்டுரை அளிக்கிறது. உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன் அச்சுதன். வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *