1. தேர்வாகும் படைப்புகளுக்கு ஊக்கத்தொகை
2. நாஞ்சில் நாடன் சிறப்பிதழ்
3. வரப்பெறும் புத்தகங்களுக்கு விரிவான அறிமுகப் பதிவுகள்
1.எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் முதல் எண்ணத்தை தோற்றுவித்தார். பின்னர் நானும் விசாரித்த போது ஆச்சரியம் அடைந்தேன். எந்த மின்னிதழும் எவருக்கும் மிகச்சிறிய தொகையைக் கூட அளிப்பதில்லை என்று. இதற்கு தயங்கியே நான் இதுநாள்வ ரை யாரிடமும் மயிர் மின்னிதழுக்கு படைப்புகள் கோரத்தயங்கினேன்.
டிசம்பர் 24 முதல் மயிர் மின்னிதழில் பிரசுரத்திற்கு தேர்வாகும் அத்தனைப் படைப்புகளுக்கும் எங்களால் இயன்ற அளவில் ஒரு சிறிய தொகையை ஊக்கத் தொகையாக வழங்க உள்ளோம். நண்பர்கள் சேர்ந்து இந்த முடிவிற்கு வந்திருக்கிறோம்.
இது ஒரு தன்னிலை விளக்கம் சார்ந்த ஒரு அறிவிப்பே. சிறந்த படைப்புகளுக்கு விலைநிர்ணயம் செய்ய முடியாது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் மனித உழைப்பிற்கு குறைந்த பட்ச மரியாதை அளிக்கும் முயற்சி இது. ஒரு சிறுகதைக்கு குறைந்த பட்சம் நான்கு ஐந்து மணி நேர உழைப்பு தேவைப்படுகிறது. தமிழில் மின்னிதழ் வரலாற்றில் இது முதல் முறையாக அமைய வேண்டும் என்கிற ஆசை. எத்தனைக்காலத்திற்கு சாத்தியம் என்பதை எதிர்காலம் சொல்லும்.
ஒரு கவிதை, சிறுகதை, கட்டுரை என ஒவ்வொன்றிற்கும் ஒரு தொகையை நிர்ணயம் செய்திருக்கிறோம். நண்பர்கள் ஒத்துழைப்போடு இக்காரியத்தை ஆரம்பித்துள்ளோம்.
2.டிசம்பர் 31 நாஞ்சில் நாடனின் பிறந்த நாள்.
கடந்த சில ஆண்டுகளாகவே நாஞ்சிலுக்கு மயிர் மின்னிதழ் வழியாக ஒரு சிறப்பிதழ் கொண்டு வரும் எண்ணம் இருந்தது. 2024 தென்காசி புத்தகக்கண்காட்சி மேடையில் அமர்ந்திருக்கும்போதுதான் நாஞ்சிலின் ஒரு சிறுகதை நினைவுக்கு வந்தது. நான் அச்சிறுகதையை- மிக நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் – மேடையில் சொன்னபோது என் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. உணர்ச்சி வசப்பட்டு அழ இருந்தேன். ஒரு பிற்பகல் காட்சி என்கிற தலைப்பிலான கதை. கடன் வாங்க வந்தவள் வைத்த மீன் குழம்பினால் வீடே மணக்கும் அற்புதம். கிராம வாழ்வின் அத்தனை ரூபங்களையும் நாஞ்சில் நாடன் மிகச்சிறப்பாக படைப்புகளாக்கி உள்ளார்.
நாஞ்சிலுக்கு சிறப்பிதழ் வெளியிட உள்ளோம். டிசம்பர் 31-ல் பதி வேற்றம் செய்யப்படும். ஆர்வம் உள்ள நண்பர்கள் தாங்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். அவரின் சிறுகதைகள் நாவல்கள் கட்டுரைகள் கவிதைகள் குறித்த படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
3. நுால் அறிமுகம்
மயிர் மின்னிதழ் சார்பாக எங்களுக்கு கிடைக்கப்பெறும் எந்த ஒரு நுாலுக்கும் மிக விரிவான அறிமுக உரைகளை வெளியிட உள்ளோம். நம் தமிழ் சூழலில் எந்த நுாலுக்கும் உடனடி எதிர்வினைகள் இருப்பதில்லை. முன்பு புத்தக அறிமுகத்திற்கென்று மாத வார நாளிதழ்களில் சில பக்கங்கள் இருந்தன. அவையும் பாமரர்கள் எழுதும் அறிமுக உரைகள். இலக்கியத்திற்கும் அவற்றை எழுதியிருப்பவர்களுக்கும் எள்ளளவு தொடர்பு இருப்பதில்லை. அவை ஒரு வகையில் வீணடிப்பு.
எங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் ஒவ்வொரு புதிய –பழைய படைப்புகளுக்கு வந்து சேர்ந்த ஒரு மாதத்திற்குள் மயிர் மின்னிதழிலில் அறிமுக உரை கட்டுரையாக வெளியிடப்படும். ஆர்வம் உள்ளவர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். புத்தகங்கள் அனுப்ப வேண்டிய முகவரியை அனுப்பி வைக்கிறோம்.
டிசம்பர் 24 இதழ் 31.12.24 அன்று பதிவேற்றம் செய்யப்படும்.
தொடர்புக்கு [email protected]