ஜப்பானிய மொழியில் 1961 ல் வெளியான நாவல். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் யசுனாரி கவபட்டா எழுதியது. இந்நாவல் நிச்சயம் ஒரு ஆவணம். இது போன்ற படைப்பினால் சமுதாயத்தில் ஏற்பட்ட உண்மையான, அவசியமான நிழ்வுகளை வரலாற்றில் பதிவு செய்வதாகும்.
எகுச்சி என்ற கதாப் பாத்திரத்தின் மூலம் எழுபது வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள் தங்கள் உளநிலை, உடல் நிலையை பற்றி தாங்களே தெரிந்து கொள்ள இது ஒரு வழியாக பயன் பட்டுள்ளது என ஜப்பானில் நம்பப்பட்டதாக எடுத்துக கொள்ளலாம். உண்மையாகவும் இருக்கலாம்.
எகுச்சி ஐந்து இரவுகள் உறங்கும் அழகிகள் இல்லத்தில் தங்குகிறார். தங்கும் ஒவ்வாரு இரவிலும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களே இந்நாவல்.
பொதுவாக அறுபது வயதுக்கும் மேலே ஆண்களின் பாலியல் வேட்கையும் உடல், உளநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதாகவும், பாலியலில் நாட்டம் அதிகமாகி உடல் ஒத்துழையாமல் போகவும் வாய்ப்பு அதிகம். அம்மாதிரியான வயதானவர்களுக்காகவும், அதை விட அதிக வயதானவர்களும் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது உறங்கும் அழகிகளின் இல்லம். இல்லத்தில் உறங்கும் அழகிகள் பயன்படுத்தும் வாசனை திரவியங்களும், இயல்பாகவே உடலுக்கு என்ற மணமும் நபருக்கு நபர் மாறுபடுவதும், அந் வாசானாதி மணத்தினால் கிளறப்படும் நினவுகள் மனதின் நுழைய முடியா ஆழங்களில் உள்ள பல சிடுக்கான நிறைவேறாத வக்கிரமான ஆசைகளையும், உண்மையான முகத்தை வெளிக்கொண்டு வரவும். முதல் முறை எகுச்சிக்கு பால் வாசனையால் கிளறப்பட்ட இளமை கால நினைவுகளை பதிவு செய்திருப்பதும் அதன் வழியே உள உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களும் முதியவர்களுக்கு உண்டாகும் அவஸ்தைகளை சொல்வதும் அற்புதம்.
அறுபத்தியேழு வயது முதிர்ந்த மூன்று பெண்களின் தந்தையுமான எகுச்சி அவ்வில்லத்தில் முழு நிர்வாணமாக உறங்கும் அழகிகளோடு ஐந்து இரவுகள் தானும் நிர்வாணமாக தங்கும் நாட்களில் தனக்குள் ஏற்படும் உள நிலை, உடல் நிலையில் மாற்றங்கள், பழய மறக்கப்பட்ட நினைவுகள் கிளர்ந்தெழுந்து உறங்கும் அழகிகளோடு உணர்ச்சி மேலிட்டால் விபச்சாரம் செய்யாதிருக்க தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி உறங்குவதும் காலையில் எழும் நேரம் புத்துணர்வாகவும், தன்னை பற்றிய தன் வயது பற்றிய சிந்தனைகளை ஒழுங்கு படுத்த இம் முறை பயன்படுவதாக ஜப்பானியரின் ஒரு வித முற்போக்கு எண்ணம் என்றும் சொல்லலாம்.
ஐந்தாவது இரவில் தங்குற்கு முன்பு அவரை விட வயதான புகுரா என்ற பணக்காரார் மாரடைப்பில் அங்கு இறந்ததை நாளிதழில் படித்திருப்பதும் அதை பற்றி விசாரிக்கையில் உணர்ச்சி மேலிட்டால் அவர் இறந்து நள்ளிரவில் அவர் உடலை இடம் மாற்றியதை தெரிந்து கொள்கிறார். கடைசி இரவில் கருப்பு, வெள்ளை நிறத்தில் நிர்வாணமான இரு பெண்களுடன் தங்கும் வேளையில் அவருக்கு தானறிந்த முதல் பெண் தன் தாயென ஆழ்மனதின் மூலம் அறிந்து கொள்கிறார். ஒவ்வாரு ஆண்மகனும் முதன் முதல் அறிந்து கொள்ளும் பெண் தன் தாய் தான் என உளவியில் பூர்வமாக நிரூபிக்கபட்ட ஒன்று.
இவ்வில்லங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் உயர்வானவை . மிகவும் வயது முதிர்ந்த ஆண்கள் தங்குவதற்காக இரவு முழுவதும் விழிக்காத ஏதோ ஒரு விதத்தில் தூக்கம் தரும் பானம், மாத்திரை பயன்படுத்தி இளம் பெண்களை நிர்வாணமாக உறங்க வைத்து முதியவர்களை மட்டும் இவ்விலங்களில் அவர்களுடன் முழுநிர்வாணமாக உறங்க வேண்டும் , இயற்கையாக உறங்க முடியாமல் போனால் தூக்க மாத்திரைகள் மூலம் உறங்க வேண்டும் , விபச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்பது உறங்கும் அழகிகளின் இல்ல சட்டம். இவ்வில்லத்தில் தங்கும் முதியவர்கள் உறங்கும் நிர்வாண அழகிகளிடம் விடுதியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே தங்க வேண்டும். இரவில் தங்கும் பெண்களுடன் பகலில் சந்திக்க வே கூடாது எனவும், ஒரு முறை தூங்கிய பெண்ணுடன் மீண்டும் தூங்குவதை அனுமதிப்தில்லை. இச்செய்கையின மூலம் வயதானவர்களின் பாலியல் வேட்கையின் தீவிரத்தன்மை, செயல்படும் விதமும், அவர்களின் வீரியம் ,பல மறந்த ஞாபகங்களை ,சிறு வயது நினைவுகளை மீட்க உதவுதாக நம்பினர் , (சொல்கிறார்கள்)
கடைசி இரவில் கருப்பான இளம் பெண் இறந்து விட்டதாக கூச்சலிட்டு விடுதி உரிமையாளரை அழைத்து சொல்லுவதும் , புகுரா என்ற மனிதர் ஞாபகம் வருவதோடு நாவல் நிறைவு பெறுகிறது.
உறங்கும் அழகிகள் இல்லத்தினால் வயதானவர்களின் சிகிச்சைக்கு பயன்பட்டாலும், இருபது வயது இளம் பெண்கள் இச் செயலில் ஈடுபடுத்தப்படுவதும் . அவர்களுக்கு தன்நிலை மறந்து உறங்க அளிக்கப்படும் வீரியம் மிக்க மருத்துகளால் பிற்காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், பெண்களுக்கு இழைக்கப்படும் மறைமுக கொடுமையாகவும் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. ஆண்பெண் உறவில் இருவருக்கும் பங்கிருக்க வேண்டும். காலம் காலமாக பெண்களே பாலியல் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். வயதான ஆண்களின் கடைசி ஆசையாக கூட இருக்கலாம். அதற்காக இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கையை பாழடித்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
காந்தியே ஆன்ம பரிசோதனை , பிரம்மச்சரியம் என்ற ஆராய்ச்சியில் இளம் பெண்களை பயன்படுத்தியதாக அவரே பதிவு செய்துள்ளார். அவரும் விமரிசிக்கப்பட்டதை உலகம் அறியும்.