தி. ஜானகிராமனின் முழுத் தொகுப்பில் கொட்டுமேளம் என்ற பகுதியில் உள்ள சிலிர்ப்பு கதையை படித்தேன். தி.ஜா. ஒரு முறை இரயில் பயணத்தில் ஒரு சிறுமியை பார்த்தார். பொறுப்பான குழந்தை படிக்கும் வயதில் படிக்க முடியாமல் வீட்டு வேலைக்காக செல்கிறாள்.
அந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் சிலிர்ப்பு கதை எழுதினார் என்று அவர் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளார். கதை இரயில் பயணத்தில் தொடங்குகிறது. இரயில்களிடம் கூட ஏற்ற தாழ்வுகள் உண்டு.
கதை சொல்லி உறவினர் வீட்டுக்கு சென்ற தன் மகனை அழைத்து கொண்டு ஊர்
திரும்புகிறார் இரயிலில். அப்போது அவர் சந்திக்கும் சிறுமி அவளை பற்றியது தான்
கதை. சிறுவன் அடம் பிடித்து வாங்கும் ஆரஞ்சு பழம். குடும்ப வறுமை காரணமாக
வீட்டை விட்டு பிரிந்து வேலைக்காக கல்கத்தா செல்லும் சிறுமி. கதையின் முடிவில் சிறுமி பிரிந்து செல்வது ஏதோ நம்மையே விட்டு பிரிந்து செல்வது போல் மனது கனக்கிறது.
கதையின் பல இடங்களில் நட்சத்திரங்கள் மின்னுகிறது. ஒரு சில இடங்களில் இடி
இடிக்கிறது. கதையில் தி ஜா எழுதி இருப்பார் இரண்டு குழந்தைகள் தாயை பிரிந்து
அநாதை போன்று இருக்கின்றன. ஒரு குழந்தை கொஞ்ச நேரத்தில் தாயுடன் சேர
போகிறது. மற்றொரு குழந்தை அதாவது சிறுமி தாயை விட்டு பிரிந்து போகிறாள்.
மீண்டும் அவள் எப்போது தன் தாயுடன் சேர போகிறாள். யாருக்கு தெரியும்.
எனக்கு இதில் சிலிர்ப்பு ஏற்பட்ட இடம் ஆரஞ்சு பழத்தை ஆசையாக அம்மாவிடம்
கொடுத்து உரித்து சாப்பிட இருந்த சிறுவன் என்ன நினைத்தானோ இரயிலை விட்டு
இறங்க போகும் முன் அந்த சிறுமியிடம் கொடுத்து விடுவான்.
சிறுமியும் சிறுவனும் சாப்பிட செல்வார்கள் அப்போது அவனுடைய சாதத்தை
அக்கரையுடன் தாய்போல பிசைந்து கொடுப்பாள். சிறுமியை தன்னுடன் அழைத்து
செல்லலாம் என்று நினைக்கும் கதை சொல்லியின் எண்ணம் ஈடேரவில்லை. நமக்கும்
அவள் கல்கத்தாவுக்கு போகாமல் இருந்தால் நல்லது என்று தோன்றுகிறது. இது சரியா
என்று தெரியவில்லை. அவனுடைய வாழ்க்கைப்பாடு அவனால் ஒரு ரூபாய் மட்டுமே தர
முடிகிறது. அதனையும் அவள் வாங்க மறுத்து பின்பு வாங்கி கொள்வாள்.
பணம் படைத்தவர்கள் ஏனோ அடுத்தவரை ஏழ்மையாக தான் வைத்து கொள்கிறார்கள்
போல.
குழந்தையின் மழலை பேச்சுகள் கதையில் ஓடி விளையாடுகிறது. இறுதியாக அந்த
சிறுமியின் கண்களை வெளிச்சத்தில் மட்டுமே பார்க்க முடியும். கதையில் ஒரு முறை
மட்டுமே சிரிப்பாள் குழந்தையின் கேள்விக்கு.