நோய் உண்ணும் நிறமிகள்
ஹீமோகுளோபின்வெடிலேறி
ரத்தம் கருங்குழம்பானது
நகக்கண்ணின் இளஞ்சிவப்பு
வெளிறிபழுப்பேறியதூவெள்ளையிலிருந்தது
யூமெலனின்தோலுரிந்து
மயிர்கால்கள்மஜ்ஜையாகியிருந்தது
பட்டகமானமழைத்துளியொன்றில்
என் வயதின்அந்திமத்தை
மெல்ல தொட்டுப்பார்த்தேன்
அது தொடுதலைஉணராதஅமானுஷ்யம்போல்
ஊனின் ஒவ்வொரு நிறமிகளையும்
லயித்து மோப்பம் பிடிக்கும்
நோய்களின்அண்டிப்பருவத்தோடு
சல்லாபித்துக்கொண்டிருந்தது
என் ஏதோதொருஎதிர்வினையுணர்ந்து
அப்பாய்ன்மென்ட் வாங்கி மருத்துவரை
காலத்தோடுநெருங்குவதற்குள்
என் நிறப்பிரிகையின் நிறம்
ஒவ்வொன்றையும் குடித்து
கடைசிச் சொட்டு கடவாயில்ஒழுகியபடி
காட்சியளித்துக்கொண்டிருந்தது நோய்.
மருத்துவரிடம்பதகளிப்போடு
‘ என்ன இதெல்லாம்’ என்றேன்,
‘ஒன்றுமில்லை வெள்ளைக்கூட்டில்
வண்ணங்கள்நீர்த்திருக்கின்றன
அவ்வளவுதான்
நிறமிகள்எழுதித்தருகிறேன்
மற்றபடி நலம்’ என்றார்.
சுயநிறங்களை இழக்கும் கையறுநிலையில்தான்
மேலும் புதுப்புதுநிறங்களை
ரசிக்கும் அனுபவமும்பக்குவமும்
கொண்டிருப்பதை அறிந்திருந்தேன்
மருந்து கொலுவோடுவீடடைந்தேன்
ஒவ்வொரு ஒளடதமும் அதனதன் நிறத்தில்
என்னைப்பார்த்துப்புன்னகைத்தது
நானும் பிரயுத்தரமாக
புன்முறுவியபடி முதலில்
வேலியம்மாத்திரையொன்றை எடுத்து விழுங்கிக்கொண்டேன்.
2. இப்படியே அவள்
முகம் சுழிக்கும்படி
அவன் ஆசையைச் சொன்னான்
தலைகுனிந்துவெட்கப்படும்படி
அவனுக்கு மறுமொழி உதிர்த்தாள்
காதலை விட்டுக்கொடுக்க
மனமின்றி நடந்ததை மறந்தாள். தம்பதியினராயினர்
இரண்டு வருடமாக
நல்ல செய்தி கேட்கிறார்கள்
அவள் மீது காதல் மட்டும் தான்
இருக்கிறது அவனுக்கு
இப்போதெல்லாம்
முகம் சுழிக்கும்படியான
ஆசைகள் அவளுக்குத்தான்
அவன் மீது அதிகம்.
நடந்ததை எண்ணியெண்ணி
அவனை
தலைநிமிர வைக்கும்
வார்த்தைகளைச் சொல்ல
காதலையும் தாண்டி
துழாவிக்கொண்டிருக்கிறாள்
அவன் நிலைநின்று
குழப்பமாகவே இருக்கிறது.
மன்னிப்பை விட
ஏதோ ஒன்றது
அவன் கேட்டதைவிட
மேலான ஒன்று
ஒருவேளை அவன்
கேட்டதேவாகக் கூட இருக்கலாம்.
இல்லை இல்லை
அப்படி இருக்காது
வேறு எதுவாக இருக்கும்?
3
உருவம் சிருஷ்டிக்க வராமல் புள்ளிகளை மட்டும் நீர்நிலையில்
வடித்துக்கொண்டிருக்கும் மழை போன்ற மனம்
கடவுள் வனப்பில் காதலானாது
பின்னாட்களில் அது அன்பாக,
பட்டும்படாமல்பட்டது.
வெகுநேரம் வாய்த்த பொழுதுகளைக்
கோவிலில் கழிப்பதும்
‘இருப்பளிங்குவாரா’ வண்ணம் தரிசிப்பில்லயிப்பதுமாய்கழிய,
ப்ரியம் பொருட்டு நாளடைவில்
தேர்ந்த சேவகனானதது
நாட்பட்டதனதன்பைப்புறனடைமயக்கத்தில்
ஒரு பிரிவின் பயத்தால் இறுக அணைப்பதாய் அணைத்து,
முத்தம் பயந்தது கடவுளை.
அப்போது.
அது கடவுளாகலாம்
அல்லது
கடவுள் நாரிகையாகலாம்
◆
அகராதியைபுரட்டிக்கொண்டிருக்கிறான்
ஒரு குருடன்
தேடுபொறியை தடவித்தடவி
விக்கிபீடியாவின் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறான் ஒரு குருடன்
புத்தகங்களில் குறிப்பெடுத்து
நோட்பேடினைபெட்டகமாக்குகிறான்
மற்றுமொரு குருடன்
சில குருடர்களுக்கு சட்டென பார்வை கிடைத்துவிடும்
இன்னும் சிலர்க்கு மூன்றாவது கண்ணும்
சேர்த்து கிடைத்துவிடும்
சிலர்தான் பாவம்
கொஞ்சமும் சாவதானமடையாமல்
கூப்பிட்டாலும்வாராமல்
உண்மையின்தரிசனத்தைகண்டறியும் வரை அல்லது
நான் போகும் பாதையில் எதிர்படும் வரை வருவதே இல்லை
என் குருடர்கள்
வானாந்திரத்தில் தான்தோன்றித்தனமாக
அலையத்தான் செய்வார்கள்
ஒருவேளை
வரலாம் வராமலும்போகலாம். பிடிவாதமானவர்கள்.
சிலபொழுது போராடி சலித்து அவர்கள் முதுகில் என் அறிவீனத்தை பொதி சுமத்தி நான் மேலும் அறிவிழந்துஇலகுவாவேன்.
அவர்கள் விஸ்வாசமானவர்களாகவே
வாழ்கிறார்கள்
எனக்காக என் காட்சியை
ஒரு நாடோடியாக
சிறு துரும்பைபுதையலாக தேடுகிறார்கள்
இதையெல்லாம் சொன்னால்
யாரும் நம்பமாட்டார்கள்
அவரவர் குருடர்களைத்தவிர.
◆◆◆◆