தேவி போற்றுதும்

தேவி போற்றுதும் ! தேவி போற்றும் !

மாமலை மருள் கொண்டு

மத்தகத்தின் இருளை 

நிறைக்கும் 

தேவி போற்றுதும்! தேவி போற்றுதும்

சுதர்சனுக்கு மாலையில் இருந்து மனம் சரியில்லாமல் இருந்தது. பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக பெருவடிவு கொண்டு மனதினை ஆக்கிரமித்து நின்றது. இரண்டு மூன்று நாட்களாக தூக்கம் இல்லை. கண்களை மூடினால் ரௌத்திரம் கொண்ட காளி கபால மாலை அணிந்து நீல உடலில் சிவந்த நாய் நாக்குக்கு வெளியே தொங்க கூரிய பற்கள் மின்ன நின்றிருந்தாள். காலின் கீழே ஆலகாலம் அருந்திய சிவன். கையில் அவனின் ஆணுருப்பு

இதை முதன்முதலாக கண்டபோது கனவிலிருந்து அலறி எழுந்தமர்ந்தார். இதுபோன்ற கனவுகளை அதன் முன் கண்டதில்லை. கொஞ்ச நாட்களாக தான். அதுவும் அந்த நிகழ்வுக்கு பின் தான்.

மீண்டும் மீண்டும் அந்த காட்சி தான். ஊழிக்கூத்தாடும் தேவியின் அகோர முகம் சினத்தில் வெறுமையில் என புரிந்து கொள்ளவே முடியாத உக்கிரத்தில் அசைந்தாடும் கருமுழிகள். சிவந்த நாய் நாக்கு. கருமுகில் போன்று திரண்ட மார்பில் சிந்தும் பால். அதைக் குடிக்க தவழ்ந்து ஊறி வரும் சர்ப்பம். ஓநாய்கள்

இதுவே தொடர்ந்து இரண்டுவாரங்களுக்கு மேல் வரவும் பொறுக்க முடியாமல் தலைப் பற்றி எறிய கிளம்பினார். மண்டியிட அல்லது மடிந்து சாக. ஆனால் அவள் தான் இங்கு இல்லையே. இறந்தாலும் அவளின் நினைவில் உயிரோடு தானே இருப்பேன். அவள் இறந்து வருடம் முப்பதுக்கும் மேல். தன்னம்மா வந்தாள். அவள் அவளுக்கு நேர் எதிர்

சுந்தரியை கிழித்துக் கொண்டு அவன் வந்தான். ஆலகால விஷத்தை உண்டவன். அவன் பேசியதெல்லாம் நஞ்சு மட்டுமே. அல்லது அவர் கண்டதா அது. மற்ற யாரிடமும் அவனுக்கு குரோதம் வெறுப்பு கிடையாது. அவரிடமும் இல்லை. ஆனால் மனம், அவர் தனித்திருக்கும் போது அல்லல்படுத்தும் தன்னின் பாவ மூட்டை. தான் சுமக்க  கையில் கொடுத்து சென்ற பாவ மூட்டை

அன்று நல்ல வெயில். வையையில் தண்ணீர் இல்லாமல் மணலில் இருந்து எழுந்த வெக்கை நிரம்பியிருந்தது. அக்கரையில் இருந்தது சுந்தரம் செட்டியார் தோப்புவாரத்தில் ஒரு நாள் என்ன வேலை இருந்தாலும் அங்கு சென்றிடுவார். தோப்பில் பல பழ வகைகள் வைத்திருந்தார். சொக்கி குளம் மண்டகப்படிய ஒட்டியத் தெருவில் தாத்தா காலத்தில் கட்டப்பட்ட ஒரு பங்களா இருந்தது. அது போக மதுரையை சுற்றி பல இடங்களில் சொத்துக்கள் இருந்தது. வரும் பல தலைமுறை அமர்ந்தே செலவழிக்க தக்க சொத்துக்கள் இருந்தாலும் செட்டியாருக்கு இன்னும் வேண்டும் என்ற ஆசை இருந்தது

சொக்கிகுள வீட்டில் கண் இமைகள் சேவல் குஞ்சம் போல பெருத்து தொங்க விகாரமாக முகத்தை காண்பிக்க அமர்ந்திருந்தவர்  அறைக்குள் சென்று கைலிக்கு மாறினார். மயிரடர்ந்த தொடைகளை தேய்த்தபடி அமர்ந்து சுருட்டு புகைத்தார்

என்னா இன்னிக்கி மேலு ஒருமாறி உலுப்புதேஎன்றார்

வெய்ய காலம்ல அதான்

அத சொல்லலயாஎன்றார் கண் சிமிட்டியபடி. நீரில் மிதக்கும் கோலி குண்டு போல கண்கள் குழிகளைத் தாண்டி வெளியேறி விகாரமாகத் தெரிந்தது

என்னா  சந்திரா, தோட்டத்துல போயி சாத்துவோமாஎன்றார்

தோட்டத்துக்கா, இந்த வேக்காட்டுலயா:

அதான் சொல்றேன் மயிரு, இந்த வேக்காட்டுல போறதுக்குத்தான் அத வச்சுருக்கேன்என்றார்

சேரின்னே’ 

செட்டியாருடனான சந்திரன் உறவு இப்படித்தான். அவருடைய நிழல். சில நேரம் கண்ணாடி. சில நேரங்களில் அவர் வெட்டி தள்ள விழையும் அசிங்கம். காறி உமிழ பயன்படும் பானிகரம்

செட்டியாருக்கு சொந்தமாக நான்கு கடைகள் இருந்தது. முதலில் சுந்தரம் துணிக்கடையில் சுதர்சன் பதினெட்டு வயதில் வேலைக்கு சேர்ந்தான். முதலில் கூட்டவும் டீ வாங்குவதும் வேலை. அப்போதெல்லாம் ஏன் இவ்வளவு டீ குடிக்கிறார்கள் எனத் தோன்றும். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி துணி அளந்து வெட்டி கொடுக்கும் வேலைக்கு சென்றேன். அதற்கு வர ஆறு வருடம் ஆனது. கணக்கெழுத மேலும் ஒன்பது வருடம் காத்திருக்க வேண்டி வந்தது. ஆனால் ராம் இரண்டே வருடத்தில் துணி வெட்ட தொடங்கினான். மதுரைக்கு வரும் வடஇந்திய பயணிகளிடம் இந்தி பேச அவன் தேவையாக இருந்தான். அவனைப் பார்த்தால் பற்றி எறியும். கூடவே இளக்காரமும். அவன் முகம் ஒன்றுமே அறியாதது போல வெள்ளந்தியாக இருக்கும்.

ஒருமுறை செட்டியாரை தன் வீட்டு விருந்திற்கு அழைத்திருந்தான். செட்டியார் யார் வீட்டிற்கும் போகும் வழக்கமில்லை. செட்டியாரம்மாவின் மேல் உள்ள பயம் தான் காரணம். அப்போதுதான் முதன்முதலாக இந்திராவை பார்த்தார். முதலில் அவர் கண்ணில் விழுந்தது அவள் கண்களை சுற்றியிருந்த கருமை தான். ஒரு ஒவ்வாமையாக தெரிந்தது. உடலின் வனத்திற்கும் பொலிவுக்கும் கொஞ்சமும் சம்மந்தமில்லாமல் காலம் பூசிய களிம்பாய் கண்ணில் சோகம் அப்பியிருந்தது. அதை மட்டுபடுத்தி சிரிக்க முயன்றாள். ஐந்தடி இருந்தாள். தொட்டாள் சிவந்து விடும் நிறம். புதிதாக மலர்ந்த மலராய் நின்றிருந்தாள்முதல் முறைக்கு பின் அவள் சிந்தனையில் வரவில்லை.

சாப்பாடு திருப்திகரமாக இருந்தது. வயிறு நிறைந்ததும் கண் சொக்கி கிடந்தார். அப்போது அவள் பேரழகியாக தோன்றினாள். தோள்களை குறுக்கி விரித்து அவள் சிரிப்பது, வெண்டக்காய் மூக்கு விடைக்க பேசுவது , குழைந்த குரலில் இழையோடும் மயக்கும் மாயம், கொசுவத்தை பிடித்திருக்கும் பாங்கு இதில் அனைத்திலும் அவள் கண்களின் கருமையை மறந்து போனார்.  

இப்போது ராம் கடையில் கணக்கெழுதுகிறான்.

சுதர்சனமும் செட்டியாரும் போகும் போது இந்திரா குளித்து தலையை விரித்து போட்டு அமர்ந்திருந்தாள். முகம் கூர்ந்திருந்தது. அவளுக்கு மட்டும் தெரிந்த அவளின் இருளை நினைத்து துக்கப்பட்டது போல அமர்ந்திருந்தாள். சுதர்சனத்திற்கு உற்று பார்க்கும் விழி. எல்லாவற்றையும் உற்று பார்ப்பார். செட்டியார் குளிக்க சென்றிருந்தார். அவளும் எழுந்து உள்ளே செல்ல முனைந்தவள் கைளால் முடி கற்றையை விசிறி கட்டினாள். அறையில் அற்புதமான வாசனைப் பரவியது.

 ஜன்னலோரத்திற்கு சென்று திரும்பி அவள் சென்ற வாசலை நோக்கி நின்றிருந்தார். அங்கு பார்க்க கூடாது என்ற எண்ணம் இருந்தாலும் அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி அங்கேயே கண்கள் சென்றன. ஜன்னல் வழியாக தெரிந்த ஆற்றில் நீர் ஒழிக்கிக் கொண்டு ஓடியது. வெள்ளை சாமரம் தலையில் சூடியது போல் காற்றில் சிலிர்த்துக் கொண்டிருந்து நாணல் புதர்கள். அக்கரையில் தூரமாக அடர்ந்திருந்தன தென்னந் தோப்புகள். அணில் ஒன்று விடாது அணத்திக் கொண்டிருந்தது. திடீரென செம்போத்து ஒன்று பாடியது. மெல்ல மெல்ல காது கூர்மை கொள்ள அது ஒலிகளான பிரதேசம் எனத் தோன்றியது

இடையே அவள் தலைமுடியை உதறிய காட்சி விரிந்ததுதிரும்பி நிற்கும் விரிந்த ஈரக் கூந்தல் சித்திரம் வந்து அலைக்கழித்தது. இன்று ஏன் இங்கு வந்தேன். ஏதோ தவறாக நிகழப் போகிறது என மனம் சொன்னது. ஆனால் அவள் முகத்தில் தீ எறியும் அசைவு. அவள் இருப்பே ஒரு நிகழ்வாகியது. இப்படி ஒரு அழகியை இதுவரைப் பார்த்ததில்லை. அனைத்து மரங்களும் பூத்திருக்கும் வசந்த காலக் காட்டை வானத்தில் இருந்து பார்த்தால் மனம் கொள்ளும் பூரிப்பே அவளை பார்க்கும் போதுத் தோன்றியது

கொஞ்ச நேரம் நடந்து வெளியே செல்லலாம் என திரும்பியவர் அவள் உள்ளே இருந்து வந்து அமர்வதைப் பார்த்தார். வரும் போது கண நொடியில் அவள் முகத்தில் இருந்த சிரிப்பு அவரை வெளியேற விடவில்லை. கூந்தலை கொண்டையாக போட்டிருந்தாள்.

அநிச்சையாக வலது கை இணையாமல் தனித்து ஆடிய முடி கற்றைகளை காதுக்கு பின் விட்டு அதையே மெல்ல வருடிக் கொண்டிருந்தது. காதில் தொங்கிய தோடை ஆட்டுவிட சதர்சனத்தின் மனம் தடம் புரண்டது. மெல்ல காது மடல்களை நீவி ஆட்காட்டி விரலால் காதுத் துளையுள் தீண்டினாள். காதோரம் சூடாகிக் கொண்டு வந்தது. தன்னையறியாமல் எழுந்தவர் அவள் அருகில் சென்று நின்றார். அருவருப்பு சுழித்த முகத்துடன் புழுவைப் போல் அவரைப் பார்த்துக்யாஎன்றாள். சுதர்சனத்திற்கு வெறி உச்சத்தில் ஏறி நின்றது. அசிங்கமாக இருந்தது. தண்ணி என்றார். உள்ளே என காண்பித்தவளின் கையை பிடித்தார். உறுதியாக உதறி எழுந்து நின்று கத்தத் தொடங்க செட்டியார் வர சரியாக இருந்தது. அன்று எல்லா கோளும் சுதர்சனத்திற்கு எதிராக இருந்தன.

நாயேஎன வந்து அலறிய செட்டியார் முதல்முறையாக அவரை அறைந்தார். இருபத்தைந்து வருட பழக்கத்தில் ஒரு வார்த்தைக் கூட தடித்து வந்ததில்லை. இருவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது

விசனத்துடன் வீட்டிற்கு வந்தவரின் மனம் போதையிலும் நனையாமல் கொதித்து கிடந்தது. மீண்டும் மீண்டும் அவளின் புருவ சுழிப்பும் காதை தீண்டும் விரல்களும் தோன்றி மூளை வேகமாக கொதித்தது. இயந்திரம் போல் தறி கெட்டு ஓடியதுவீட்டின் கதவை பெயர்த்துவிடுவது போல தட்டினார்

கல்யாணி தூக்க கலக்கத்தில்எதுக்கு இப்டி கதவ ஒடக்கிறங்கிஎன மூஞ்சியை காண்பித்தது அவரை மேலும் எரிச்சல்படுத்தியது. இரண்டு நிலைக்கதவையும் தாங்கிபிடித்து நின்றிருந்தவரைப் பார்த்ததும் விபத்தில் இருந்து தப்பி வந்தவரை போல் தோன்றினார்.

தொங்கிய தலையுடன்ஒங்காத்தா வீட்டு கதவாடி, தொறடிஎன்றார்

பேயறைந்தவள் போல பார்த்தவள்இப்ப என்ன கேட்டேனு, ஆத்தாவ இழுக்குற, கண்ட கருமத்தையும் குடுச்சுட்டு, நடுராத்திரில வந்து பேய்மாறி ஏய்யா கதவ ஒடக்கிறேனதான்ன கேட்டேன், இப்படி எந்த வீட்லயும் உண்டா

அவளை அடிக்க பாய்ந்தவர்ஆரமிச்சுட்டா முண்ட, எடுபட்ட முண்ட, ஒன்னோட பெரிய்ய தரித்திரியதாண்டிஎன்று கண்களை துருத்தி நின்றார்.

யோவ், இந்த மாதிரி பேசிட்டிருந்தேன்னா, மரியாத கெட்ரும், அடிக்க வர்றா, ஏன்யா இப்படி குடுச்சுட்டு வர்றன்னு கேட்டது தப்பா

ஆமாமா பெரிய கோளாறு சொல்ல வந்துட்டா, போடி, முண்ட, தேவுடியா முண்ட

டேய், ஒங்காத்தாதா அது, போடாஎன்றாள்

வெறி கொண்டு பாய்ந்தவன் தலையில் அடித்தான் அதை கை கொண்டு மறைத்தவள் கை எடுத்துவிட்டு மறுபடியும் போடா என்றாள்.

இத்தனைக்கும் இடையில் சிவனேஷ் தூங்கிக் கொண்டிருந்தான்.

வெறி கொண்டவனாய் அவளை கீழே தள்ளி சேலை உருவி எறிந்தான். அவள் கால்களை உதறி அவளை எத்த முயல கால்களை லாவகமாக பிடித்து அழுத்திமேலேறி கண்மண் தெரியாமல் அடித்தான். அந்த வெலத்தை எதிர்பாராதவளாய் நிராதரவாய் கிடந்தாள். உடையை பிய்த்து எறிந்து வலுக்கட்டாயமாக புணர்ந்தான்.

அன்று தான் முதல்முறை அந்த காட்சி மனதில் எழுந்து நின்று ஆடியது. ஆணுறுப்பு அறுந்து ரத்த ஆறு ஓடுவது போன்ற கனவு வர அலறி விழித்தான். கல்யாணி இருளில் அவன் முன் வெறித்த கண்ணுடன் நின்றிருந்தாள். கலவியில், அவள், முகத்தில் உழிந்த எச்சில் இப்போதும் வழிவது போலத் தோன்ற கைகள் முகத்தை துடைத்தன

அன்று கிளம்பியவள் தான். மகன் பிறந்தபோது பேற்றிலேயே இறந்துவிட்டாள்

அந்த குழந்தையை கருவிலேயே அழிக்க கல்யாணி எவ்வளவோ முயன்றாள். அதன் நினைப்பு ஒவ்வொரு முறை வரும்போது வேண்டாததை தின்ற ஒவ்வாமை வரும். அது தன் கொடுங்கனவு பழிப்பு காட்டுவது போல தோன்றியது. தன் சீழ்கட்டியப் புன்னை கிழறி ஆனந்தம் பெறுவது போல அது வளரத் தொடங்கியது. எந்தவித மாத்திரை மருந்துக்கும் அது கட்டுப்படவில்லை. மற்றொன்று முரட்டு வைத்தியம் கேள்விப்பட்டுள்ளாள். பிறப்புறப்பின் வழியாக கத்தாழை முள்ளை செலுத்தி அதனை நஞ்சாக்கி கொல்வது. அது கலங்கி வெளியேறும். கொடூரமானது என்றாலும் முடிவு எதிர்பார்ப்பை தரும் என செல்லம்மா கிழவி சொன்னது. அதன் கண்களைப  பார்த்தாள். குற்றத்தின் சிறுகூற்றும் அதன் மீது நிழலாடவில்லை. ஆனால் அதன் சாத்தியப்பாட்டின் பாதகங்களை அவள் கூறவில்லை

அதையும் செய்து பார்த்த முயன்ற போது அன்று அந்த கனவு வந்தது. மதிய வெயிலில் கம்மாய் கரையில் நின்றிருந்தாள். சுற்றிலும் வெக்கை. வானின் வாள் போல இறங்கும் ஔிப் பிழம்பு எங்கும் நிறைந்திருந்தது. ஒதுங்குவதற்கு ஓரிடமும் இல்லை சுற்றிலும் முட்காடு. எங்கு திரும்பினாலும் கூரிய முட்கள் கீறுகின்றன. தலையை மறைக்க போர்த்திய சேலை தலைப்பு நழுவி விழுந்தபடியே உள்ளது. கம்மாய் நிறைந்து தளும்பும் சத்தம் கேட்கிறது. ஏறி கரையில் நின்றுப் பார்த்தால் வரண்ட நிலம் வெம்பிய காய் போல பிளந்து கிடக்கிறது. துக்கமும் தாகமும் எழுந்தது. நடந்துபடி அழகு நாச்சி கோவிலுக்கு வந்தாள். கோவிலைச் சுற்றி கத்தாழைக் காடு போல மண்டிய பாதையை மறைத்தது. தவிர்க்க முடியாமல் காலில் குத்தி ரணம் ஏற்படுத்த கடந்து செல்கிறாள். உள்ளே தரையில் நாட்டிய பீடத்தில் அமர்ந்திருந்தாள் அழகு நாச்சி. சோர்ந்த முகம். முகம் வெக்கையில் சிவந்துள்ளது. உடல் முழுவதும் புள்ளியாக அரும்பி நிற்கும் முத்துக்கள் சிவந்து நின்றன. பின்னால் மறைந்து நின்ற குழந்தையை எடுத்து மடியில் வைத்து பொத்திக் கொண்டாள். அவள் உடலின் அணவில் அமர்ந்த குழந்தை வாயில் வைத்திருந்த விரலை அவளைப் பார்த்து நீட்டியது

அம்மா, தொண்ட வறண்டு கெடக்குஎன்றாள்

அவள் வேர்வை முத்துக்கள் ஊறி நின்ற திரவத்தை ஏந்தி குழந்தை கையில் நீட்டியது. குருதியின் வீச்சத்துடன் இருந்த நீரை ஒமட்டியபடியே அருந்த கண் தெளிந்தது. காலியான பிடத்தில் சென்று அழகு நாச்சி அமர்ந்தாள், குழந்தை அவளை வெயிலில் நின்று பார்த்து சிரித்தது. அதன் தலைக்கு மேல் காகக் கூட்டம் குடையாகி நின்று வாலை தாழ்த்தி உயிரின் விசையுடன் கரைந்தது. அந்த காகத்தின் கண்கள் தன்னை போல தோன்ற எழுந்துவிட்டாள்

அதற்கு பின் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை. தினமும் குளித்து அழுகு நாச்சிக்கு பொட்டு வைத்து கழுமரத்திற்கு செல்பவனின் தீவிரத்துடன் காத்திருந்தாள். அவனை ஈந்து நிலத்திடம் கொடுத்த திருப்தியில் மயங்கி இருந்தவளின் உடலில் குருதி நிற்காமல் வெளியேறியது

சுதர்சனைப் பார்க்க கூட வரவில்லை சந்திரன். அவன் நினைவை வலுக்கட்டாயமாக செரிக்காத உணவை வெளியேற்ற திணறுவதைப் போல் அல்லாடிக் கொண்டிருந்தார். தன்னம்மா தான் கவணித்துக் கொண்டாள். காரியத்திற்கு வந்தவரின் கண்கள்  குழிந்து திக்கற்ற பறவை போல தவித்துக் கொண்டிருந்தது. எல்லோரும் எவ்வளவோ தடுத்தும் தன்னம்மா அவரை மணமுடித்து கொண்டாள். இத்தனை நாட்களில் ஒருமுறைக் கூட சுதர்சன் கைகளால் தீண்டியதில்லை சந்திரன்.

கயிற்றை பிடித்து எழுந்தமர்ந்த சத்தம் கேட்டு சுதர்சன்அறைக்கு ஓடி வருவதை பார்த்ததும் மனம் கூசி உடல் ஓடுங்கியது.

என்ன வேனும்ப்பாஎன்றான்

இல்ல ஒன்னுமில்ல சும்மா எந்திரிச்சு ஒக்காரனும்னு தோனுச்சுஎன்றார்

அவன் அவர் தோள்களையும் முதுகையும் பிடித்து நிமிர்த்தி அமர வைத்தான். உடல் கூசியது.

ஏதாவது சாப்ட்றீங்களா

அவரால் எதுவும் பேச முடியவில்லை. அவனை பார்ப்பது கூட தன்னை புழுவாக நினைக்க வைத்தது. உள்ளே துடிப்பே இருப்பாக ஆடிக் கொண்டிருக்கும் லட்ச புழுவில் ஒன்றாக. அவன் கண்கள் கணிந்து ஊறி நின்றது. இதற்கு எள்ளளவிலும் தகுதியற்றவன் அல்லவா நான் என்று தோன்ற உடல் கூசியது. அவனிடம் அன்று நிகழ்ந்தததை சொல்லிவிடலாமா. ஒரு தந்தையால் பகிரவே முடியாத அந்தரங்கம் அல்லவா அது

அம்மாவ வர சொல்லுப்பாஎன்றார்

எதுன்னாலும் சொல்லுப்பா, நானே பண்றேன்என்றான்.

எரிச்சலும் இயலாமையும் தோன்றி கண்ணில் நீர் ஊறியது. குரல் தன்னையறியாமல் கடுமை கொண்டது

அவள கூப்புடு’. அவன் நகர்ந்ததும் கரை கட்டியிருந்த அழுகையை தளர்த்தினார்

தன்னம்மாகொஞ்ச நேரம் நிம்மதியா ஒக்கார விடறியா, எப்பப் பாரு ஒனக்கு மொற பண்றதுதான்ன எனக்கு வேல, சனியம் பிடுச்ச பொழப்பா இருக்குஎன அவள் பாட்டைத் தொடங்க சுதர்சனுக்கு நிம்மதியாக இருந்தது

விரித்த கூந்தல் தோளில் புரண்டு அசைய வாழிப்பான அந்த தோள்களும் புறா போன்று படபடக்கும் கண்களும் தோன்ற அதை நினைவில் ஓட்டியபடி படுத்துக் கொண்டார். தீயும் இருளும் சூழ்ந்த தனிமையில் சென்று தன்னை புதைக்க விரும்பி கண்களை மூடிக் கொண்டார்

பத்து தலைகளில் வேறு வேறு ரூபம் காட்டி காலில் கிடக்கும் சிவத்தின் மீது நெடுங்கால் நிலைக்க ஊன்றி சூலாயுத்தை நெஞ்சில் பாய்ச்சி உக்கிர உருத்திர ரௌத்திர அகோர கொடு ரூபம் காட்டி ஆடினாள் காளி. தாய்க் கோழியின் காலில் கிடக்கும் குஞ்சை போல மனம் எல்லையில்லா ஆனந்தத்தில் லயித்திருந்தது சுந்தரத்திற்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *