அந்த அறையில் யாரும் இல்லை என்று உறுதியாக தெரிந்த பொழுது விடிந்த பிறகு எத்தனையோ முறை அந்த அறையினை கூட்டியாகிவிட்டது. ஆனாலும் புழுதிகள் இருப்பதாகவே அவன் நினைத்துக்கொண்டான். மீண்டும் துடப்பத்தை எடுத்தான் பெருக்கினான்.

அந்த வீட்டில் உள்ள மற்ற அறைகளை யார் சுத்தம் செய்வார்கள் என்ற யோசனை அவனுக்கு இல்லை. மீண்டும் கூட்ட ஆரம்பித்தான் எங்கு தொடங்க வேண்டுமோ அங்கு தொடங்கி எங்கு முடிக்க வேண்டுமோ அங்கேயே முடித்தான். நிதானம் தான் அவனை அப்படிச் செய்ய வைத்தது.

யாரிடம் பேசி என்ன? பயன் நான் என் வேலையை செய்கிறேன் அவ்வளவு தான் என்ற தெளிவு அவனிடம் இல்லை, அதனால் பெருக்குகிறான். மாலையாகியது, அவனிடம் பேசுவதற்கு யாரும் இல்லை அவனைப்போன்றவர்கள் என்ன செய்ய போகிறோம் என்று தெரிந்து செய்தால்? தெரியமால் செயதால் எப்படி செய்யதால் என்ன? அந்த அறை மட்டும் சுத்தமாகவே இருக்கிறது,. அந்த போர்வைகள் பலவந்தமாக மடிக்கப்பட்டு அதனிடத்தில் உறங்குகிறது, அந்த தலையணைகளுக்கு சீரான தூக்கம் இருக்கிறது, அந்த அறை வௌசித்தில்  தன்னை பாரத்து சிரிக்கிறது..

எப்படி இருந்தாலும் அவன் இருக்கும் வரை தான் இந்த சுத்தம், ஆமாம்.. அந்த அறைக்குதான் தெரியும்

அது அதனிடத்தில் தன்னை ஏகபோக சுந்திரக்காரனாக இநத உலக அறைகளிலேயே சுத்தமான அறையாக இருக்கும் என்று அந்த அறை நினைக்கிறதோ இல்லையோ,, அதன் பக்கத்து அறை கண்டிப்பாக நினைத்துக்கொள்ளும்.
யாராவது வந்தால் நிதானத்தை இழந்துவிடுகிறான். அவர்களை மேலும் கீழுமாக நோட்டமிடுகிறான். அவர்களின் பாதம் தான் அவனது இலக்கே அங்கே பல பூட்ஸ்கள் வந்துபோயிறுக்கின்றன.. பல செருப்புகள் வந்துபோயிருக்கின்றன, வெறும் பாதங்கள் வந்து சென்றிருக்கின்றன.. எல்லோரும் அந்த அறையை அசுத்தம் தான் செய்தார்கள் அவன் மட்டும்தான் அதனை சுத்தம் செய்தான்.. அது தவறா,, ஆமாம் தவறு தான் ஒரு அறையை ஒரு நாளைக்கு எத்தனைமுறை சுத்தம் செய்வது,, அதற்கு ஒரு வரையறை இருக்கும் பொழுது,, அதை மீறுவது என்ன? ஒழுங்கீனம்..

இப்படித்தான் அவன் அந்த அறையில் மாட்டிக்கொண்டான் அவனுக்கு வேலைக்கு உணவு கிடைக்கிறது, அதனால் சுத்தம் செய்கிறான்… என்ன பேசுவது என்று தெரியவில்லை கடிகாரம் சுற்றவது போலத்தான் அந்த அறை சுத்தமாகிறது,, துடபத்தை அவன் கைகளில் தறிக்கும் பொழுது அவன் வீரனாகிவிடுகிறான். அதை உபயோகிக்கும் பொழுது தன்னை மறந்துவிடுகிறான் சுத்தமாகியதும் மீண்டும் கூட்டுகிறான் .. அதனால் அவனை பைத்தியம் என்று சொல்வது சாத்தியம் தான்.. ஆனால் அவள் இருக்கும் பொழுது சொல்லிவிடாதீர்கள்

உங்களுக்கு துடப்பத்தில் அடி கிடைக்க சாத்தியம் தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *