
‘ஆகாசம் நீலநிறம்’, ‘ஊருங்காலம்’, ‘உள்வாங்கும் உலகம்’ தொகுப்புகளுக்குப் பிறகு வெளியாகும் விக்ர மாதித்யனின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது.
‘உள்வாங்கும் உலகம்’ தொகுப்பிலுள்ள கவிதைகளைப் படித்தவர்களுக்கு இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் புதிய அனுபவமாக இருக்காது; அதில் இல்லாத வக்ரமான கவிதைகள் சில இதில் இருக்கின்றன என்பதைத் தவிர.
விக்ரமாதித்யனுக்கு வாசகனைப் பற்றி எந்த அக்கறையும் கிடையாது என்பதை இதிலுள்ள கவிதைகள் உணர்த்துகின்றன. கவிதை ஒரு கூட்டுச் செயல்பாடு. இதில் வாசகன் தன் பங்கிற்குப் பூர்த்திசெய்ய வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன என்பது போன்ற அடிப்படை உண்மைகளில் அவருக்கு அக்கறையில்லை. இவரது பல கவிதைகளில் வாசகனுக்கு எந்தப் பங்கும் இல்லை. ‘நான் வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டவன். நான் சொல்கிறேன். நீ கேள்’ என்ற மேடைப் பிரசங்கியின் தோரணை இவரது பல கவிதைகளில் வெளியாகிறது. இது கவிதையின் அடிப் படைக்கே எதிரானது.
ஒரு கவிஞன் தனிமனிதன் என்ற அளவில் வாழ்க்கையில் வெற்றி தோல்விகள், துக்கங்கள், இழப்புகள் இவற்றை எதிர்கொண்டிருக்கக்கூடும். ஆனால் தனது அனுபவம் அசலானது, பட்டறிந்தது என்பதாலேயே அது கவிதையாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
‘எண்ணெய் பதார்த்தம் உடலுக்குக் கேடு’ என்பது அனுபல அடிப்படையில் எழுந்தது என்பதாலேயே அது கவிதையாகி விடாது.
வாழ்வனுபவம் எப்படிக் கவிதையனுபவமாக உருக்கொள் தனதாக உணர வைக்கிறது, எப்படி அது பன்முகம் கொள்கிறது -கிறது, அது எப்படி வாசகனைத் தூண்டி அவ்வனுபவத்தைத் இவைதான் கவிதையின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவை
கவிதையனுபவமாக மாற்றப்படாத, பன்முகம் கொள்ளாத அனுபவம் எவ்வளவு அசலானது என்றாலும் அது கவிதையாகி விடாது. மாறாக, கவிதைகள் சுயப் புலம்பல்களாகப் போய் விடும் அபாயமும் உண்டு. இத்தொகுப்பிலுள்ள விக்ரமாதித்யனின் கவிதைகளுக்கு நேர்ந்த கதி இதுதான்.
முன்னுரையாளர், பாலுணர்வு அடிப்படையில் எழுதப் பட்டபோதிலும் உண்மையான உணர்வு எழுச்சியின் அடிப் படையில் சொல்லப்பட்டிருப்பதால் பொய்மை, போலித் தன்மையற்ற நிர்வாண உண்மைகளைச் சொல்வதன் மூலம் கவிதையாகியிருப்பதாகச் சில கவிதைகளைக் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் ‘நிர்வாண உண்மைகளைப்’ பார்ப்போம்.
பாவாடைகளின் உலகம்
எனக்கு
ரொம்பப் பிடிக்கும் (பக். 13)
லிங்கம் தொடாத
யோநிக்கு
அலையோ அலையென்று
அலைகிறது மஹாலிங்கம் (பக். 17)
எந்த மன முதிர்ச்சியுள்ள கவிஞனும்
எதிர்த்த வீட்டில்
சமைந்த பெண்
மனசில்
தீ (பக். 13)
என்ற கவிதையை எழுதமாட்டான்.
விக்ரமாதித்யனுக்குப் பெண், புணர்ச்சிக்குரிய ஒரு சாதனம்தான். புணர்ச்சியும் உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் நிகழும் ஒரு உறவு என்ற உண்மை அவருக்குத் தெரியாது அல்லது அதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. தன் வெறி தீர்த்துக்கொள்ளும் வடிகால்தான் பெண். இதுதான் அவரை
இருவர் உறவு
ஒருவர் அடிமை (பக். 14)
என்று எழுத வைக்கிறது. மேலும்
பெண்ணடிமை பெண்ணடிமையென்று
பெரிதாகப் பேச வேண்டாம்
யார் அடிமை என்பதற்கு
ராத்திரிகளே சாட்சி (பக். 19)
என்று இளம்பிள்ளைத்தனமாக, பெண்ணடிமைப் பிரச்சினை பின் ஆழம் உணராத, கொச்சையான, பிற்போக்கான ஒரு அறிவிப்பை முன்வைக்கச் செய்கிறது.
சில ‘பேருண்மைகளை’க் கண்டுகொண்டுவிட்ட பரவசத் தோடு சில கவிதைகளை எழுதியிருக்கிறார்.
போதையில் தலை சுற்றித் திரிகையில்
பட்டது ஒரு விஷயம்
உழைத்துக் குடிப்பதே
உத்தமம் (பக். 22)
தினமும்
தண்ணீரில்
ஒரு நாள்
தீயில் (பக். 37)
சர்வாதிகாரிகள்
அடிமைகளைத்தான் தேடுகிறார்கள்
சிநேகிதர்களை அல்ல (பக். 38)
கலைஞர்களாவதற் கில்லை
குமாஸ்தாக்கள் (பக். 38)
மனத்தடையில்லாத மனுஷனும் இல்லை
கலைக் குறையில்லாத கலைஞனும் இல்லை (பக். 47)
ஓய்ந்த நேரத்தில்
எழுதுகின்றார் ஒழிந்த சமயத்தில்
இலக்கியம் செய்கின்றார்
உருப்படுமா தமிழ்
இலக்கியம் (பக். 41)
பேசி
பிழைப்பது திராவிட இனம்
எழுதி வாழ ஏது இங்கே இடம் (பக். 41)
இவை எப்படிக் கவிதை ஸ்தானம் பெற்றன என்பது விக்ரமாதித்யனுக்கே வெளிச்சம்.
விக்ரமாதித்யன் தன்னை இலட்சியக் கவிஞனாகவும் தனது கவிதைகளை இலட்சியக் கவிதைகளாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும்.
அவன்
படைப்பது
உன்னத இலக்கியம்
தேடிப்
படிப்பது
சரோஜாதேவி புஸ்தகம் (பக். 18)
உலகுக்கு
கவிஞன்
ஊருக்கோ
குடிகாரன் (பக். 31)
ஒரே மாதிரியான வடிவத்தில் வெளிப்படும் கவிதைகள் நமக்குச் சலிப்பை ஏற்படுத்துகின்றன.விக்ரமாதித்யனின் கவித்துவம் இவ்வளவுதான் என்று நமக்குத் தெரிந்துபோவதால், பல கவிதைகள் எந்த அதிர்ச்சியும் தராமல் போய்விடுகின்றன. பல கவிதைகள் எப்படி எப்படி முடியப் போகின்றன என்பதைக்கூட நம்மால் முன்னுணர்ந்து கொள்ள முடியும்.
உதாரணமாக, முட்டையிடும் பறவை (பக். 9), பசிக்கு சோறு (பக். 52), பறவை பறக்கும் ஆகாயத்தில் (பக். 53).
‘உள்வாங்கும் உலகம்’ தொகுப்பில் உள்ள குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு கவிதை:
பாதங்கள் பட்டுப் பட்டுப்
பூமி நிறமாயிற்று
கைதேர்ந்து கைதேர்ந்து
செய்நேர்த்தி வாய்த்தது
நடுவில்
நான் மாட்டிக்கொண்டேன்
இங்கேதான்
தேக்கும் நாற்காலியும் (பக். 14)
இதன் ‘கருத்துரை’ கவிதையாக்கப்பட்டிருக்கிறது ‘எழுத்து சொல் பொருள்’ தொகுப்பில்:
தொழிலில்
விரைவு கிடைக்கும்
நேர்த்தி வாய்க்கும்
நுட்பமும் வந்து சேரும்
ஆனாலும்
அது தொழில்தானே. (பக். 38)
முன்னுரையாளர் ‘தீக்கிரை போட்டு முடியுமா’ (பக்.31 என்ற வரி ‘சுடர்மிகும் அறிவுடன் ஏன் படைத்தாய்’ என்ற பாரதியின் வரிக்கு ஒப்பானதாகக் கூறுகிறார். (எனைச்/சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்’ என்ற வரி படும் பாடு!) நமக்கு அவ்வரி மிகச் சாதாரணமான சலனங்களைக்கூட ற்படுத்தாத ஒன்றாகத்தான் இருக்கிறது.
இத்தொகுப்பில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும் முழுக் விதை ஒன்றுகூட இல்லை. அவரது தொகுப்புகளில் அங் கொன்றும் இங்கொன்றுமாகச் சில கவித்துவமிக்க வரிகள் காணக் கிடைத்தாலும், தமிழின் தரமான கவிதைகளோடு வைக்கத்தக்க கவிதையை இனிதான் விக்ரமாதித்யன் தர வேண்டும். அவரால் தரமான கவிதைகளைத் தர முடியும் என்ற நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன இத்தொகுப்பி லுள்ள கவிதைகள்.
எழுத்து சொல் பொருள்: விக்ரமாதித்யன்; விற்பனை உரிமை: வயல், 5, கச்சேரி சந்து, மைலாப்பூர், சென்னை – 4.
விலை ரூ.7
நன்றி -கே. கங்காதரன்
நன்றி -காலச்சுவடு இதழ் 5, ஜனவரி -மார்ச் 89

