வெள்ளம் வருகிறது
என் கால்கள் இரண்டில் ஒன்று
ஆற்று மண்ணில் புதைகிறது
மற்றொன்றதன் நீரில் கரைகிறது
என் இரத்தம் சிவப்பை இழக்கிறது
ஆறு என்னில் கலக்கிறது
என்னை ஆறு கொள்கிறது
என் தொண்டை அறுகிறது
என் கடைசி மூச்சுக் கொப்பளம்
இந்த ஆற்றில் மிதக்கிறது
எல்லாம் கொள்கிறதே
அது சீற்றம் கொள்கிறதோ
கோபம் கொள்கிறதோ
பித்தே கொள்கிறதோ
இல்லை இல்லை
அது தன் நிலத்தைக் கொள்கிறது
தன் இடத்தைக் கொள்கிறது
தன் வீட்டிற்கு வருகிறது
ஒட்டடை கழிக்கிறது
நீலம் அடிக்கிறது
மீண்டும் வாழ வருகிறது
கொஞ்சம் அழுகிறது
வடிய மறுக்கிறது
மயிர்
ஆசிரியர்: இராயகிரி சங்கர்
மயிர்
ஆசிரியர்: இராயகிரி சங்கர்