அந்த நகரத்தின் கடைசி தெரு, ஏன் கடைசி வீடு என்று கூட சொல்லிவிடலாம் மஞ்சள் வண்ணத்தில் தெரிகிறதே அது தான் அந்த வீடு இதற்கு முன்பு எப்படியோ, அப்படியே அந்த வீடு இருக்கிறது இன்னும் இருக்கும் அதன் ஆயுசு முடிய, சிரிப்புகள் பல, செய்கைகள் பல, எல்லாவற்றிலும் அந்த வீட்டிற்கு அதிர்ஷ்டம் தான். கொஞ்சம் முன்னாடி எட்டிப்பார்க்கும் தூரத்தில் போலீஸ்டேசன்… அதற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது போலத்தான் அந்த வீட்டில் ரொம்ப நாளாக வெளிப்புறம் ஒரு சைக்களில் கேட்பாரற்று கிடக்கிறது அதை சுற்றி எந்த வட்டமும் இல்லை, அதன் தற்காப்புக்கு எந்த அந்நியமும் இல்லை, அந்த சைக்களில் தவழும் ஜுவன் இன்றில்லை, உண்மையில் அந்த சிறிய குழந்தை இறந்து விட்டாதாக அவன் நினைத்தான அதற்கும் இந்த இயற்கைக்கும் காரணம் இல்லை.
அது அவனுக்கு மட்டும் சம்பந்தப்பட்டதா, என்பது தான் இப்போது உள்ள விஷயம் என்று அந்த வீட்டிற்குள் மூவர் கூடி பேசிக்கொள்கிறார்கள்.. பேசிக்கொண்டிருப்பார்கள் அவர்ரவர் தேவையை பொருயத்து, அவளிள் வாய் வீச்சை பொறுத்து அந்த உரையாடல் நீளலாம்,, அப்படியே அற்று போகலாம் அந்த பொழுதில் மட்டும்.. எனக்கு என்ன? என்று அந்த சைக்கிள் அப்படியேத்தான் இருக்கிறது. அந்த இளம் பச்சை நிறம் பார்பதற்கே பரிதாமாக இருக்கிறது என்று அவள் நினைத்தாள்.. அந்த நிறத்தை தேர்ந்தெடுத்தவன் அவன் தான்.. அவன் அப்போது சொன்னாது தான் அவளுக்குள் மீண்டும் மீண்டும் நினைக்க தோன்றியது, டேய்.. இங்கபார்,, இத இப்படித்தான் “யூஸ் பண்ணனும்” தெளிவான கருத்து தான் அவள் அதை சரியாக பயன்படுத்த வில்லை,, சின்ன பொன்னுக்கு என்ன? தெரியும் என்று அவன் நினைக்கலாம் இல்லையா? கொஞ்சமாவது மன்னிக்கலாம் அல்லவா? அதற்கவாக இந்த போராட்டாம் ஏன்? சின்ன சின்ன விஷயத்திற்காக அவன் இப்படி பழி வாங்கு வது என்ன?
அந்த சைக்கிளை சுற்றி! இரண்டு இரு சக்கர வாகனங்கள் அடைப்புக்காக நிற்கிறது அந்த பாதுகாப்பு தான் பயம்..
விடியற்காலையில் அது செல்லாம்? இப்போது கூட ஆனால் அவள் உறங்குகிறாள் என்று அவர்கள் நினைப்பது சரித்தான்.. அவனுக்குள் ஆனந்தம் அந்த கரெண்ட மரத்தின் சந்தில் இதை பாரத்துக்கொண்டிருப்பது என்ன பயித்தியக்காரத்தனம்? அந்த குழந்தைக்கு வேண்டிய தொகை, பெரிதா,, ஆனால் இந்த இருப்பு அதை விட சந்தோஷத்தைக் கொடுக்கிறது,, அந்த இரவில் இது அவன் வரும் நேரம் என்பதை அவள் எப்படி கணித்தால் சரியாக ஜன்னல் ச்நதில் இரண்டு விழிகள் அவனை நோக்கிக்கொண்டிருப்பதை அவன் அறிவானா… எந்த அந்நியம் அவ்ள இருகிறாள்.. அவளை மறந்தான் அவளை நினைக்கிறான் இந்த சந்தோஷம் எப்படிப்பட்டது? நான் நானாக இருக்க அவளும் ஒரு காரணம். அவன் கதவைத்தட்டினான்.. எப்போதும் போலவே வெளியில் அந்த வெளிச்சம் முதலில் எறிந்த்த்து கொஞ்சம் நேரம் கழித்து திற்நத கதவிற்கு பின்னாடி இரண்டு ஜீவன்கள்.. அப்பா, எங்கப்பா போனா,, என்று அவள் சினுங்கிளால் ந்தாம்மா வந்துடுடேன்ன… நான். இங்கா பாரு,, போப்பா,, அப்பா,, எனக்கு,, இதுவேணுனம் என்று அந்த விலையுயரந்த பைக்க காட்டினால்,, அந்த ஸ்போர்ட்ஸ் பைக்கை எப்படி? சரிம்மா வாங்கி தரேன்.. என்று அன்றே வாங்கி இந்த பைக்கை ஒரு நாளும யாரும் எடுத்திருக்கமாட்டார்கள்…….. அதை என்றும் துடைக்காத நாளில்லை, அதனுடன் பேசாதா நாளில்லை..
சரியாக பனிரெண்டு வயதிலேயே அதை அவள் இயக்க கற்றுக்கொண்டாள்.. அதற்க்கான காத்திருப்பு பத்து வருடங்கள்… அவளுக்கு இன்னும் என்ன வேண்டுமா அதையெல்லாம் செய்ய த்தான் நான் இருக்கிறேன் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன் .. நான் சொல்லிக்கொள்வேன்.. இதில் உனக்கு என்ன? பங்கு இருக்கிறது.. அந்த சைக்கிளை எப்படி நீ தூக்கியி எறியலாம் என்று அவன் கேள்விக்கேட்டான்.. கேட்டாபன் கேட்டுக்கொண்டே தான் இருப்பான்… இது இப்படியான ரகம் என்ற அவளலாம் ஒதுக்கி தள்ள முடியவில்லை,,,
அவள் பிரிந்து சென்றால், அவளும் பிரிந்து சென்றால், அந்த வண்டியை தள்ளி நிறுத்த இப்போது வயது போதவில்லை,, ஆனாலும் அந்த வ்ண்டிக்குறியவள் இன்று அந்த வீட்டில் படுத்துறங்குவாள்… இயல்பாக எனை மறந்து…
