நாவல் வாசித்து முடித்த பிறகு யோசிக்கும் போது மனதில் முதன்மையாக நிற்பவர் திருஷ்டத்யும்னன்தான் , அடுத்து சாத்யகி , பிறகு கிருஷ்ணர் செய்த திருமணங்கள் , அவரது மனைவிமார்கள் மனதில் வருகின்றனர் . இன்னொருவர் கிருஷ்ணரின் தங்கை , வெண்முரசு வரிசையில் இதற்கு முந்திய நாவல்களில் இருந்து இந்திரநீலம் வரை வந்த பெண் பாத்திரங்களில் ஒரு அதிரடி கதாநாயகி அம்சம் கொண்டவள் இவர்தான் , திரௌபதி பற்றி நிறைய முந்திய நாவல்களில் இருந்தாலும் இவளை போல ஆண்கள் போல போரிடும் , கொல்லும் , வாளெடுக்கும் காட்சிகள் இல்லை , சுபத்திரைக்கு அது கிடைத்து இருக்கிறது ,கிட்டத்தட்ட பெண்பீமன் போல தோன்றினார் !
நாவலில் ஈர்த்த இன்னொரு அம்சம் துவாரகை நகர் , நாவலில் விரிவாக காட்டப்படுகிறது , அந்த நகர் பற்றிய சித்திரம் மனதில் விரிவாக தங்கி விடுகிறது , துவாரகை நகர் மீண்டும் எழுப்ப வேண்டும் என்றால் இந்த நாவல் அளிக்கும் சித்திரமே போதும் என்ற அளவுக்கு ! எனக்கு குறைத்த பட்சம் இந்த நாவலில் வரும் மாளிகைகள் , தோரண வாயில் இரு மலை குன்றுகள் ,சுற்றிச்சுற்றி மேலே செல்லும் பாதைகள் , துறைமுகம், பெரிய கப்பல்கள் ,வணிக சந்தை , அதன் நடுவில் இருக்கும் சதுக்க பூதம் , முக்கியமாக பொருள்தூக்கி போன்றவை மினியேச்சர் வடிவிலாவது பார்க்க , உருவாக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது .
வடிவ ரீதியாக இந்த நாவல் மிக சிறப்பாக வந்துள்ளது , ஆரம்பத்தில் வந்த முணிகர்க்கர் கதை கிருஷ்ணரின் திருமணங்கள் கதைக்கு அது பேசும் ஏதோ ஒரு விசயத்திற்கு தொடர்பு கொண்டவையோ என்று தோன்றியது . திருஷ்டத்யும்னன் பாத்திரத்தின் துவக்கம் , அவன் மனநிலையை பேசும் விஸ்வாமித்திரர் கதை , அந்த கதையே அவனது மன இயல்பாகவும் , அதில் நடித்த பெண்ணே அவன் நாயகியாகவும் வருவது தொடங்கி மெல்ல மெல்ல அவனது மனம் ,உடல் எல்லாம் நிகழ்வுகள் வழியாக தெளிவாகி வரும் சித்திரம் என , நாவலில் கொண்டு செல்லும் சரடு இவன்தான் , ஆரம்பத்தில் மலையில் சுற்றி சுற்றி மேலே செல்லும் இவன் நாவலின் முடிவில் சுற்றி சுற்றி கீழிறங்கி வரும் பொழுது முற்றிலும் குழப்பங்கள் நீங்கியவனாக , உடல் ,மனம் தெளிவு கொண்டவனாக மாறி இருப்பான் . மேலும் நாவலில் இவனது நட்பு மிக அழகான ஒன்று , சாத்யகி ! முந்திய நாவலில் பூர்வசிரவஸ் உடன் இவன் பேசுவது நாவல் முடியும் , இந்த நாவலில் அதை போல இவனுக்கு திருஷ்டத்யும்னன் அமைகிறான் , மூவரும் இளைஞர்கள் , இதில் திருஷ்டத்யும்னன் சாத்யகி நட்பு மிக அழகாக வந்திருக்கிறது, அந்த இளம் துடிப்பு ,பெண்கள் மீதான ஈர்ப்பு , நாணம் எல்லாம் , ஆரம்பத்தில் திருஷ்டத்யும்னன் யாதவ பெண்களிடம் மாட்டி கொண்டு மோதிரம் அணிவிக்க முயலும் இடங்கள் எல்லாம் சுவாரஸ்யமானவை , இந்த நிகழ்வில் ஒரு யானையில் ஐந்து பெண்கள் தங்கள் மேலாடைகளை உற்சாகத்தில் கழட்டி வீசி குதூகளித்து செல்லும் காட்சி ஒன்று வரும் , அப்போது யானை எப்படி நிதானமாக வருவது பற்றி சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் பேசி கொள்வார்கள் , இந்த காட்சி கற்பனை செய்த பார்க்கும் போது சுவாரஸ்யமாக இருந்தது , நடந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி கொண்டேன் !
சியமந்தகம் , இது இந்த நாவலில் தொடர்ந்து வரும் ஒரு பொருள் ,படிமம் . இது படிமம் எனும் அளவில் இரண்டு பொருளை காட்டுகிறது .ஒன்று காமம் ,குரோதம் ,மோகம் கடந்த நிலை , இன்னொன்று கிருஷ்ணரின் இருப்பு , அதாவது இதைக்கொண்டு கிருஷ்ணர் ஒவ்வொருவரின் நிலையையும் அவர்அவர்களுக்கே காட்டுகிறார் . சியமந்தகம் ஒரு கவர்ந்திழுக்கும் இந்திரநீல வைரம் , இதை எழுதும் கணத்தில் உலகியல் மீதான ஈர்ப்பை இந்த கல் சுட்டுகிறதோ என்று தோன்றுகிறது . இந்த கல்லை முதலில் கண் இல்லாத வீரசேனர் நீரில் விழுந்து பிலத்தில் மாட்டி அவருக்கு இந்த கல் கிடைக்கிறது , இது அவருக்கு விழி அளிக்கிறது . நாவல் இவர் நீரில் செல்லும் வழி என காட்டுவது தியான படிநிலைகள் என்று எண்ணினேன் காம குரோத மோக நிலையை சுட்டும் அந்த இடத்தின் பெயர்களும் அதைத்தான் காட்டின , ஆனால் இந்த நிலை அடைவது மிக கடினம் என இந்நாவல் காட்டியது , சாத்யகி உட்பட யாரும் இந்த கல் வைத்த தேர்வில் வெல்ல இயல வில்லை , காலிந்தி மட்டுமே இதை ஒரு கல்லாக உணர்ந்தாள் , இது அளித்த ஈர்ப்பு எதுவும் அவளை தாக்க வில்லை .
இந்த நாவல் ஒரு இந்திய பண்பாட்டு களஞ்சியம் என்று சொல்ல முடியும் , இந்நாவல் வரிசையை முடிக்கும் தருணத்தில் அநேகமாக அனைத்து இந்திய படிமங்களை, தெய்வங்களை பற்றி அறிந்து கொண்டு விடுவேன் என்று எண்ணுகிறேன் . எனக்கு முன்பு சப்த கன்னிகள் பற்றி தெரியாது ( பெயர்கள் , பின்னணி என ) இந்நாவலில் அவர்கள் இருமுறை வரிசையாக வந்து தரிசனம் அளிக்கின்றனர் , ஒருமுறை இன்முகத்துடனும் ,இன்னொருமுறை கோபத்துடனும் ! அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் , அவர்கள் லட்சனங்கள்,அழகு எல்லாம் நாவல் காட்டுகிறது , தரிசிக்க வைக்கிறது .
நாவலில் கிருஷ்ணரின் எட்டு மனைவியர்கள் வருகிறார்கள் , அறிமுகம் ,திருமணம் , அந்நேர சூழல் , இந்த பெண்களை கிருஷ்ணர் அடைந்த விதம் எல்லாம் விரிவாக காட்டபடுறது . சில நாட்களாக என் பகுதியில் மழை, மழை தூவ ஆரம்பித்ததும் எனக்கு உடனே சத்யபாமா ஞாபகத்திற்கு வந்தார், அதிகாலை மழைக்கு ஏங்கும் சிறுமியாக அவள் நாவலில் வர தொடங்குவார் . அவள் வரும் பகுதிகள் , அவளது தன்னை கிருஷ்ணரித்திடம் கூட தலை தாழ்த்தி கொள்ளாத பண்பு , உறுதி எல்லாம் நாவல் அழகாக காட்டுகிறது . அடுத்து எனக்கு நாவலில் ஜாம்பவியை பிடித்தது , அவளின் வெடித்து சிரிக்கும் பண்பும் , நகரியல்பு ஒட்டாத மனமும் ஈர்க்க காரணம் என எண்ணுகிறேன் . இவரது தந்தை ஜாம்பவான் உடன் கிருஷ்ணர் மோதும் இடமும் நாவலில் முக்கியமானது . சத்யபாமாவை மணக்க கன்யாசுல்கம் தர அருகில் தன் தந்தை இல்லாத போது கிருஷ்ணர் ஜாம்பவானை தந்தை ஸ்தானத்தில் இருக்கும் பட வேண்டுவார், தந்தையாகவே உங்களை எண்ணுகிறேன் என்று சொல்வார் . சமூக அந்தஸ்தில் பார்த்தால் ஜாம்பவான் இடம் பழங்குடிகள் , ஆனால் இந்த பகுப்புகளை எல்லாம் கிருஷ்ணர் உடைக்கிறார் . எல்லா தரப்பில் இருந்தும் பெண்களை மணந்து கொள்கிறார் , அது தனக்காக மக்களை, அரசை திரட்ட என்று சொல்லப்பட்டாலும் அதை தாண்டி அவர் சமூக அந்தஸ்துகளை உடைப்பதுதான் முக்கியமானதாக உணர்ந்தேன்.
காளிந்தியை கிருஷ்ணர் மணக்கும் பகுதி அழகானது , அவளை அர்ஜூனனால் கூட ஈர்க்க இயல வில்லை . துறவியாக ஆக இயல்பாகவே துறவி மனநிலை இருந்தால் மட்டுமே நீடிக்க இயலும் என்பார்கள் , அதுபோல இயல்பு கொண்டவள் காளிந்தி கிருஷ்ணரை அடைவது , அவளுக்கு பதட்டம் இல்லை , இயல்பாக உலகியல் ஈர்ப்புகளை கடந்தவளாக இருக்கிறாள் . அவளுக்கு எளிதாக ஒன்றை புரிந்து கொள்ள முடிகிறது . மீன்களின் எண்ணிக்கை ஒன்று என்று சொல்வது ஒரு உதாரணம் . இந்த பகுதியில் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் வேதாந்தம் சார்ந்து பேசும் பகுதியில் அதை விளக்க இவர் இருவரும் பயணம் செய்யும் பகுதியும் அழகானது .
நாவலில் வரும் இன்னொரு முக்கிய பாத்திரம் சிசுபாலன் , ஆரம்பத்தில் சத்யபாமாவை பெண் காண வருவான் , அப்போது சப்தகன்னியர்களின் உக்கிர ரூபம் கண்டு மயங்கி விழுவான் , அந்த சமயத்தில் அந்த கன்னியர்கள் சொல்லும் வார்த்தைகள் ஆச்சிர்யம் தந்தது , விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திலும் அவரை எதிர்த்த அரக்கர்கள் எதிரிகள் எல்லாமே சிசுபாலனின் முந்திய பிறப்புகள் என்று சொல்லும் , இந்த கிருஷ்ணர் அவதாரத்தில் கூட மாண்ட கம்சன் கூட அவன்தான் என்று சொல்லும் . நாவலில் ருக்மிணி வரும் இடமும் அழகானது , இங்கும் சிசுபாலன் மணக்க இருந்த ருக்மிணியை கிருஷ்ணர் தூக்கி சென்றுவிடுவார் !
போர் சமயங்களில் கிருஷ்ணர் முகம் எப்படி இருந்தது என்று சொல்லப்படுகிறது , அது கீதையில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் போரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லும் படி இருந்தது .
பிரசேனரை சிங்கம் கொல்லும் பகுதியும் முக்கியமான இடம் , அவரை அந்த இடத்தில் கொண்டு செல்வது சியமந்தகம்தான் , சியமந்தகம் என்பது ஒருவனின் ஆழ்விருப்பம் என்று இப்போது தோன்றுகிறது . நாவல் ஒரு காட்சியில் சிங்கம் கொல்வது போலவும் இன்னொரு காட்சியில் நரசிம்மர் கொல்வது போலவும் காட்டுகிறது . இது மேலும் பல எண்ணங்களை உருவாக்குகிறது .
இந்த குறிப்புகள் எழுதி முடிக்கும் போது சாத்யகி இந்த நாவலில் பிடித்த பாத்திரம் என்ற எண்ணம் வருகிறது . அவன் இளைஞன் என்று தோன்றாமல் வளர்ந்த சிறுவன் என்ற எண்ணம்தான் உருவாகிறது .
பிரமோதியன், ஹெர்மியர் இந்த இரண்டு பெயர்கள் இந்திரநீலம் நாவலில் இருந்தது , மாளிகையில்( சத்யபாமா மாளிகை கதவில், கடற்கரை மண்டப வெண்பளிங்கு கைப்பிடியில் ) யவன சிற்ப வடிவாக .. இந்த சிற்பங்கள் பார்த்த போது கிரேக்க தத்துவமும் இங்கு அப்போது அப்போது வந்திருக்குமோ என்று தோன்றியது , இணையத்தில் பிரமோதியன்(Prometheus) பற்றி தேடிய போது கிரேக்க பழமையான தெய்வம் ( டைட்டன் .. ) என்று தெரிந்தது .
இந்த நாவல் ஆசிரியரான ஜெயமோகன் ஒரு உரையில் ஆட்டிடயன் படிமம் வைத்து கிருஷ்னர் மற்றும் கிறிஸ்து வைத்து ஒப்புமை கூறினார் , எனக்கு அதை கேட்டபோது காலத்தினால் மிக பின்னால் வந்த கிறிஸ்துவுடன் ஒப்பிடுகிறார் என்று தோன்றியது , கிறிஸ்து பதிலாக ஹெர்மியர் கிருஷ்ணனுடன் பொருத்துவது ( வெண்முரசு )தான் சரியானது என தோன்றியது .
கோவர்த்தனகிரிக்கு இந்த நாவலில் இருந்த பெயர் ஆவளர்குன்று ! நாடக அரங்கு போன்ற மேடைகளில் பயன்படுத்தப்படும் திரைச்சீலைக்கு எழினி என்ற பெயர் இருந்தது , அதிலும் அகன்றுவிரி எழினி , கரவெழினி என பயன்பாட்டுக்கு ஏற்ப பல பெயர்கள் இருந்தன !
பாமாவின் தந்தை யாதவர்களில் உள்பிரிவான தங்களது அந்தகர் குலம் விசேஷமானது , மற்ற யாதவ குலங்களை விட மேம்பட்டது என்று முன்வைப்பார் , துவாரகை அரசு அப்படியான எந்த விசேஷ தகுதியும் ஒரு குலம் முன்வைப்பதை ஏற்காது . அனைவருக்கும் ஒன்றாக இருக்கும் போது அடையாளத்தையே ஏற்க வேண்டும் என்று சொல்லும் , இந்த பகுதிகளை வாசித்த போது சமகாலத்தில் முன்வைக்க படும் சாதிய பெருமை பேச்சுகள் பற்றிய ஞாபகம் வந்தது . இப்படியான சாதி பெருமிதங்களை எப்படி களைவது என்பது பற்றிய விரிவான அளவில் வழிகளை இந்நாவலின் பகுதி நமக்கு காட்டுகிறது .
நாவலின் துவக்கத்தில் திருஷ்டத்யும்னன் ஒரு நடன மங்கை மீது ஆர்வம் கொண்டு இரவுக்கு அழைப்பார் , அங்கு நடக்கும் ஒரு தருணத்தில் அவள் தன் மீது கொண்டிருக்கும் ஆழமான காதலை உணர்வார் . பிறகு அவளை மணந்து கொள்ள விரும்புவார் , ஆனால் அரச குடும்பத்தில் பிறந்த , எதிர்காலத்தில் அரசு அமைகும் வாய்ப்புள்ள தனக்கு இந்த திருமணம் எந்த அளவு சிக்கல் தரும் , பெற்றோர் , பிறர் எல்லோரும் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற குழப்பம் வரும் . பிறகு கிருஷ்ணரின் நடத்தை அவருக்கு தெளிவை தரும் , தனது எட்டு மனைவிகளில் மிக பிரியத்திற்கு உரியவள் , தகுதி வாய்ந்தவள் காளிந்திதான் என்பார் , ஒருவரை அடைய எண்ணுவது அவரது தகுதி பொருட்டே தவிர பிற விசயங்கள் ஒரு பொருட்டல்ல என்பதை திருஷ்டத்யும்னன்க்கு சொல்லாமல் உணர்த்துவார் கிருஷ்ணர் .
