ஞாயிற்றுக்கிழமைத்தான்… அந்த தேவை இப்போது எப்படி வந்த்துது இனியும்ய வரும்.. நான் என்னை சுற்றி நடப்பதை பெரிதாக நினைக்கப்போவதில்லை நினைவுபடுத்தியும் பார்பதில்லை ஆனால் எனக்கு என்ன பெயரை வாங்கி கொடுத்திருக்கிறது என்று பார்த்தால் அதை நினைத்தால் என்னால் ஜீரணம் செய்யாமல் இருக்க முடியவில்லை அவ்வளவு எரிச்சலாக இருக்கிறது,, கேவலம் ஒரு நாய் இப்படி செய்யலாமா,, நாய் தான் அதற்கு இடம் கொடுத்தால் எதைத்தான் செய்யாமல் இருக்கிறது. இது எப்படித்த தெரியுமா? என்று அவன் அவனையே அவன் அஜாக்கிரதையின் மீது பல காரணங்களை அடுக்கிக்கொண்டிருந்தான்.. எவ்வளவு சார்ப்… அந்த நாய் பின்னாலே வந்து அந்த கறிபொட்டலத்தை லவட்டிக்கொண்டு ஓடிவிட்டது,, ஏய் சு ஏய் சு என்று சொல்லி வார்த்தைகளுக்கு அர்தத்தோடு அந்த நாய் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டது,, அப்படியே வீட்டிற்கு சென்றான்.. இந்த தகவலை எப்படி சொல்வது நாயின் புத்திசாலித்தை சொல்வதா.. அல்ல அவனது சோம்பலை சொல்வதா என்று ஏய்.. கறிய நாய் புடுங்கிட்டு போய்டுச்சு என்று மட்டும் சொன்னான்.. அதுவும் கடன் சொல்லி வாங்கி வந்த ஒருகிலோ கறி அவ்வளவு தான் ஆனால் என்ன பெயரை வாங்கொடுத்து விட்டது இந்த ஞாயிற்றுக்கிமை..
அந்த கறிகடைக்காரனும் அக்கம்பக்த்துக்காரர்களும் அதை பேசிகொண்டார்கள் அவனுக்கு அந்த வீதியில் மறுபடியும் செல்வதே கூச்சமாக இருந்த்து எப்படியா மீண்டும் சொல்லி தனது கையாலாகதனத்தை பெருமையாக பேசி சிரிப்பவர்களின் கண்களுக்கு தன்னை சோம்பேறியாக கட்டிக்கொண்டு அவன் மீண்டும் கறி வாங்கி வந்தான்.. ஏய் இதயு நாய் இழுத்துட்டு போகலாய என்றால் அவள்… அவன் புடுங்கிட்டு போய்டுச்சு என்றான்.. இவள் இழுத்துட்டு போகலாயா என்றால்.. ஆமாம் இழுத்துட்டு போனா என்ன செய்யவ… இத புடி என்று போட்டு விட்டு அவன் கடைத்தெருவிற்கு சென்றான்.. அப்படித்தான் அந்த நாயின் இறுதி உணவாக அது இருக்கும் என்று அந்த நாய் நினைத்திருக்குமா,,, அவன் சந்து பொந்துகளில் எல்லாம் தேடிக்கொண்டே சென்றான்… குப்பு வின் வீட்டிற்கு பின்புறம் உள்ள சந்தில் அது அமைதியாக ருசித்து சாப்பிட்டிக்கொண்டிருந்த்து இரண்டு பக்தில் எப்படி ஒரே ஆள் அடைக்கட்டுவது என்று அவன் ஒருகணம் யோசித்தான்… அதை கொல்ல வேண்டும் அவ்வளவு தான் தார்மீக தண்டனை அவ்வளவு தான்.. என்ன? ஆனால் அவன் நெருங்குவதை அது பாரத்து விட்டது,,, இன்னொரு சந்தில் ஒரு ஆள் உச்சா அடிக்க வந்துதும் அது பதறிக்கொண்டு இவன் இருக்கும் வழியாக தப்பிக்க ஓடிவந்த்து வந்த்து ஒரே அடியில் அதனை வீழ்த்தி விட்டான்.. அந்த நாய் ஈனக்குரலில் கத்திக்கொண்டு அங்கேயே விழுந்து விட்டது.
என்ன கதியோ அதை ஊரே பார்க்கும் படி அவன் இழுத்துச் செல்லும் செய்தி பரவிவிட்டது. சில குழந்தைகள் சந்தோஷத்தில் ஓடி வந்தார்கள் அதை தரதரவென்று அவன் இழுத்து செல்லும் போது பெரிய காரியத்தை செய்து முடித்தவன் போல பெருமைப்பட்டுகொண்டான்.. அதை ஊரின் கடைகோடியில் தூக்கி யெறிந்து விட்டு வரும்போது என்ன மாப்பல என்று அந்த கறிகடைக்காரன் மறித்த்து அவனுக்குள் எழுந்த கேவல்களை மறைக்காத்தான் ஒரு கணம் புருவங்களை உயர்த்தி மாமா போட்டு தள்ளிடேன் என்றான்…
வீட்டில் ஏச்சு பேச்சுகளைத் தாண்டி அதை கொண்டுடேன் என்று சொல்லிய பிறகு தான் அவன் சோற்றில் கையை வதைதான்.. அவளுக்கு அது தாங்க முடியாத சந்தோஷத்தைக் கொடுத்த்து .. என்ன பன்ன? ஏய் பாவம் விடாமில்ல என்றால் ..பின்ன எங்கிட்டவே வாலாட்டுச்சு அதான் போட்டு டேன் என்றான்… அவள் இரண்டு கரெண்டி கூடுதலாக கறியை போட்டால்… அவன் சாப்பிடவாரம்பித்த போது எல்லாம் நன்றாக்த்தான் போய்க்கொண்டிருந்தது அவள் உப்பு உறைக்கிறாதா என்றால் .. எவ்வளவு சகஜமான கேள்வி.. அவனுக்கு நினைவுகள் பின்னால் ஓடியது உப்பு மூட்டையைக்கொட்டி அந்த உடலைக்கிடத்தி அடக்கம் செய்வது நியாபத்திற்கு வந்தது எல்லாம் சரியாகத்தான் இருக்கு அவன் வயிறார உண்டுவிட்டு அப்படியே ஞாயிற்றுக்கிழமையை அனுபவிக்கத் தொடங்கினான்…. அந்த தொலைக்கட்சியல் இளையராஜாகிவின் பாடல்கள் ஓடிக்கொண்டிருடந்தது அவள் பல்துலக்கி குளித்து உன்பதற்காக வந்தவள் அவனது கும்மாளத்தை பாரத்து அவளுக்கும் குறுநகை வந்தது.. சரியாக ஐந்து இட்டிலி கொஞ்சம் போல கறி.. அவ்வளவுதான் … வாயில் வைத்ததும் உப்பு கொஞ்சம் கம்பியா இருக்கே என்றால்… அவனுள் அந்த நாயின் கடைசி முனங்கல் தான் நினைவுக்கு வந்தது எனக்கு சரியாபோச்சு என்ற சொல்லிவிட்டு அவன் தொலைக்காட்சிக்குள் மூழ்கிவிட்டான்.
என்ன ஏச்சோ பேச்சோ என்று அவன் அமைதியானான்.. ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் உணவிடும்போது உப்பு என்ற பதார்த்த்தை விடுவாதா இல்லை அவனது மனமும் அந்த நாயினை நினைவுப்படுத்தாமலில்லை..
ரெயில் வே கேட்டினைக் கடந்து அவன் வண்டியில் விரைந்துக்கொண்டிருந்தான் ஒரு ஆறுமாதக் குட்டி நாய் அடிப்பட்டு சாலையின் வலது புறம் தனது பூத உடலை பரிதாப்பதில் விட்டு சென்றிருந்தது அதை அவன் கவனித்தான்… அலுவலக நேரம் வேறு விரட்டிக்கொண்டிருந்த வண்டி அதுபாட்டிற்கு சென்றது அதற்கும் அலுவலகத்திற்கு செல்ல அவ்வளவு குஜால்… ஆனாலும் அவனது மனம் இன்னொரு வண்டி அதன் மீது ஏறி அது ரோட்டோடு ரோடாக ஒட்டக் கூடும் அதற்குள் அந்த இறந்த உடலை அப்ப்புறப்டுத்தாலம் என்று திரும்பிட்டான்… இருபது நிமிடங்கிள் எத்தனை எத்தை வண்டிகள் அந்த சாலையில் என்ன என்ன சூழலில் மனித ஜீவன்கள் சென்றுக்குமோ என்று வண்டியை விரட்டின்னான் குறுக்கே அந்த வேகதில் இடைப்பட்ட நாய்களையும் ஜாக்கிரதையாக கடந்து விட்டு அந்த ரெயில்வே கேட்டினை அடைய கொஞ்ச தூரம் இருக்கையிலே பாரத்தான் அந்த இறந்த குட்டி அங்கே இல்லை என்ன அதிசயம் மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா என்று அவன் மீண்டும் அலுவகத்திறகு புறப்பட்டான் அந்த நாயின் மீது இன்னொரு வண்டி ஏறாதது அவனுக்குள் மகிழ்சியை கொடுத்தது.
மதிய உணவிற்கு அன்று அலுவத்தில் எல்லோரும் ஓட்டலுக்கு சென்றார்கள்.. இலை பரிமாறப்பட்டது தேவையான உப்பு முதில் அந்த இலையில் வைத்ததும் பிற இரங்கங்களை முடித்து கடைசியாக தயிருக்கு உப்பிட்டு திருப்பதியாக உண்டான் மீதி நேரம் அலுவலகம் அந்த தேய்ந்த கணங்கள் அப்படித்தான் ஓய்ந்த்து சாலையில் இந்த முறை அமைதியாக சென்றான்… அந்த இடத்தில் அந்த குட்டியின் இரத்தம் தோயிந்திருந்த்து … வீட்டிற்கு சென்று இரவுணவு…. இந்த முறையும் அவள் கேட்பாள் என்று நினைத்தான் அவள் அதை கேட்க்கவில்லை பேசும் பேச்சுகள் உள்ளர்தம் வாய்ந்த்து என்று நினைத்தால் நாம் எந்த சொல்லைத்தான் பொறியில்லாத சொல் என்று நினைக்க தூண்டும் .. அவள் ஐந்து நாட்களில் உறைக்கிறா என்று? எந்த சொற்றொடையும் பயன்படுத்த வில்லை என்ன விநோதம் அவள் அவளாக இருக்கிறாள்… திட்டமிட்டான் இந்த ஞாயிற்றுக்கிழமை அவனாக சமைக்க வேண்டும் என்று திட்டமிட்டான்.. சனி கோயிலுக்கு சென்று சைவத்தில முடிந்து ஞாயிறு அன்று வழக்கம் போல கறி எடுத்து அவனே சமைக்க ஆரம்பித்தான் அவளுக்கு சொல்ல முடியாத சந்தோஷம் இதை எங்கெல்லாம் எடுத்துச் செல்வாளோ… ஆனால் உப்பினை சரியனா பத்தில் இட்டு குழம்பினை செய்து முடித்தான் அவர்கள் உணவு உன்ன தயரானாகர்கள்.. ஏன் .. ?
உன்னவாரத்பித்ததும் அவள் உப்பு ஒரக்கல என்றால்,,, அவனுக்கு அது போதும் ஆனால் அவளுக்கு அது போதவில்லை உப்பினை எடுத்து வந்து அவளுக்கு மட்டும் தான் அவள் போட் கலக்கி உண்ணவாரம்பித்தாள்…. என்ன சொல்ல ? இந்த பழக்கத்தை அவள் எப்போது விட்டொழிப்பாளோ… அந்த உப்பின் சுவையில் அப்படி என்னதான் உள்ளது என்று அவன் யோயிக் ஆரம்பதித்தான்.. இந்த பெண்கொடுக்கும் மாமனார்கள் கொஞ்சம் வஞ்சகமாவர்கள் தான் அவர்கள் சொல்லி அனுப்புவாரகளோ என்று அவன் அவளது அப்பனை திட்டாவாரம்பித்தான் மனதிற்குள்.. ஒரு நாளும் ஒரு நாளும இந்த இருபத்து ஐந்து வருடங்களில் அவனது அம்மா இந்த கேள்வியைக் கேட்டதும இல்லை ..ஆனால் இந்த உப்பினை அவன் பெரிதாக நினைத்த்ம இல்லை அதை பாரத்தே ந்த இருபது வருடங்கில் ஒன்றோ இரண்டோ முநைத்தான ஞாபகம் வந்த்து ஏன் அம்மா இந்த கேள்வியைக் கேட்டதில்லை ஆனால் அப்பா.. உப்பு உறைக்க வில்லை என்று உணவருந்துவார் எல்லோருக்கும் தகுந்தாற்போல உப்பிட்டுக்கொடுப்பார்… என்று
அம்மா அப்பாவிடம் கேட்டதே இல்லை உப்பு உறைக்கிறாதா என்று ஆனால் இந்த சின்ன பொண்ணு வந்த இரண்டாவதுது நாள் சமையில் இருந்தே உப்பு உறைக்கல என்று சொல்கிறாளே ஏன்? உப்பிட்டிவரை நினைத்து என்ன பிரயோஜம்..
வீட்டு சமையலே வெறுப்பாகிப்போனது அவள் சரியாக எந்த பதார்த்துற்கு உப்பினை பயன்படுத்துவால் என்று அவன் கண்காணிக்கத் தொடங்கினான்.. அவன் அதிக செலுவு செய்த பண்டத்திற்கு மட்டும் தான் அவள் சொல்வது மெதுவாக அவனுக்கு புலப்பட்டது அவளுடன் ஓட்டலுக்கு செலும் போது பரிமாறப்படும் உப்பிற்கு அவளுக்கு அது தேவைபடவில்லை குழப்பு இரசம் கடைசயில் ஊற்றிக்கொள்ள வைக்கட்ட தயிர் மட்டும் அப்படியே இருக்கும். அவள் உன்பதை கண்காணித்து என்ன செய்ய? இப்படி வரும்போது இரசத்துக்கு உப்ப் கொஞ்சம் கமியா இருந்துச்சியில்ல என்னால் இன்னொரு நாள் சாம்பாருக்கு ஆனால் அவள் உப்பிட்டு உண்ணவில்லை அது ஏன்?
அவனும் வெளிப்படையாக ஏதும் சொல்வதில்லை .. என்ன பயம் உப்பினால் என்ன பயம்.. அவனது தந்தையை மாமானர் அடக்கம் செய்யும பொறுப்பனை பார்த்து அதிசயித்து போன்னான்.. மாமன் மச்சான் எல்லோம் ஒன்று சேரந்து அவர் கால்கடுகளையும்.. இடுப்பு கயிற்றையும அறுத்து ஏதாவது பொருட்கள் உள்ளதா என்று அவரது கைகளையும் விரித்து பாரத்து உடலை சுற்றி உப்பினைக் கொட்டி இறுதி சடங்கினை செய்யும்போது…. என்று அந்த காட்சிகள் வந்து வந்து சென்றது,,
மாமா வீட்டில் சாப்பிடவே அவன் அச்சப்பட்டான் ..அவர்கள் அவர்கள் யார்.. இந்த பெண்பிள்ளைப் பெற்ற பெற்றோர்கள் இப்படித்தான் இருப்பாரகளாட.. வாங்க மாப்பள சாப்பிடுங்க என்று மட்டும் அவர் நிறுத்திக்கொள்வார்… ஆமாம் எத்தனை அடக்கம் அது? ஆனால் அத்தை அப்படி அல்ல என்ன பதற்றம்.. எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று ஏய்க… எல்லாம் சரியாக இருக்கிறது என்று இவள் கேட்டாள் எத்தை சந்தோஷம் என்று அவன் நினைத்துக்கொண்டி ருப்பான் ஆனால் அவள் சரியாக ஒரைக்குதா என்று கேட்க்கும்போது அவனுக்குள் உள்ள பயம் எட்டிபார்க்கும் .. என்ன விநோதம் இது… ஐநூறு ரூபாய்கு மேல் செலவு செய்து காஷ்டிலியான குழ்பை ஏன் செய்ய வேண்டும் …சைவத்திறகு இவள் இந்த கேளியை கேட்பதில்லை…என்று ஒரு மாதம் அவன் வீட்டு சமையலை நோட்டம் பார்க் ஆரம்பித்தான் ..அவள் சாம்பார்.. பருப்பு குழப்பு இப்படி எதற்கும் அளேவோடுத்தான் உப்பிட்டாள்.. இரவு நேர சமையில் தான் உப்பு இருக்கா? என்ற கேள்வி எழும்… அசைவமாக இருந்தால் அது காலை நேரத்திலேயே வந்துவிடும்.. அந்த கேள்விக்கான பதிலை அவன் இன்னும் கண்டியில்லை விநோதமான ஆண் பெண் உறவு…
