பள்ளி முடிந்து வந்த ராணி தனது அறையிலேயே அமர்ந்திருந்தாள். பள்ளி முடிந்து பசிக்குதும்மா என்ற அடுக்களைக்கு ஓடிவருபவள் எந்தச் சலனமுமில்லாமல் தன் படுக்கையில் அமர்ந்திருந்தாள். அவள் பார்வை எதிர்ச்சுவரில் கூர்மையாகி, மையமிட்டிருந்தது. அம்மா மதிவதனி அவளை ஏனென்று கேட்கவுமில்லை. அவளும் அடுக்களையிலிருந்து வெளியே வரவில்லை.அவள் அங்கு எந்த வேலையிலும் ஈடுபடவுமில்லை.
கதிரவன், ராணியின் தந்தை வேலை விட்டு வீட்டுக்கு வந்தவர் “ராணி சாப்பிட்டாளா?” என்று மதியைக் கேட்டார், இது மாமுலான கேள்விதான். கண்கள் ராணியைத் தேடின.
“ ஏதும் சாப்பிட்டுருப்பா போலருக்கு. பசிக்குதுன்னு வரல,” என்றாள். அவ வரலன்னா நீ கூப்டமாட்டியா?” என்று கடிந்துகொண்டே ராணியைத் தேடி அவள் அறைக்குள் நுழைந்தார். பள்ளிச் சீருடையைக் கழற்றி வீட்டு உடைக்கு மாறியிருக்கவில்லை! ராணி ஏதோ கோபத்தில் இருப்பதுபோலப்பட்டது கதிரவனுக்கு. அவள் மூக்கு விடைத்து துவார நுணிகள் சிவந்திருந்தன.
.” ராணி ஸ்கூல் யுனிபோர்ம கழட்டல, சாப்பிடல, என்னாச்சு ஒனக்கு?” என்று அவள் அருகில் அமர்ந்து, தோளில் அன்பொழுக கைவைத்தார். அந்ததொடுதல் அவள் இருப்பைக் குலைத்துவிடவில்லை. அப்பாவின் சொற்களும், தொடுகையும் அவளை ஆசுவாசப்படுத்தக் கூடியவை. ராணி இந்த ஸ்தம்பிப்பை உணரும்போது கதிரவன் ஒரு கணம் விதிர்த்துப்போனார்.
“சொல்லும்மா ஸ்கூல்ல ஏதும் நடந்துச்சா?”
………………………….. .
“பசங்க யாரும் தொல்லை பண்ணானுங்களா?’
………………………….
“என்னதான் நடந்துச்சி? நீ இப்டி இருக்க மாட்டியே?” அவள் கதிரவனின் எந்தக் கேள்விக்கும் பதிலிறுத்தவில்லை.கேள்வியின் பக்கம் பார்வையைக்கூடத் திருப்பவில்லை.
“மதி என்னா இது. எந்நேரமும் நொய் நொய்ன்னு பேசிட்டே இருப்பா, உனக்கும் ராணிக்கும் சண்டையா? ராணிய திட்டினியா? நீ வாய வச்சிக்கிட்டு சொம்ம் இருக்க மாட்டியே!” மதி இல்லை என்று தலையாட்டினாள்.
தனியா விசாரிச்சு பாரு. அவளுக்கு நடக்கக்கூடாதது ஏதும் நடந்திருக்கப்போவுது!. நான் ரூம விட்டு வெளியே நிக்கிறேன். என்னா ஏதுன்னு கேளு!”. ராணி பேசாமலிருப்பது மதிக்கு அச்சுமூட்டியது.
கதிரவன் வெளியே போனதும் அறைக்கதைவை அடைத்துவிட்டவள் ராணியிடம் எதுவும் விசாரிக்கவில்லை!
ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து கதவைத் திறந்தாள் மதி.
விரலிடுக்கில் புகைந்துகொண்டிருந்த சிகெரெட் துண்டை வாசலிலிருந்து சுண்டி எரிந்துவிட்டு மதியை நோக்கி வந்தார்.” ஏதும் பேசுனாளா? நீ நல்லா விசாரிச்சியா?”
“அவ ஒரு பதிலையும் சொல்லமாட்டேங்கிறா.: என்று சுருக்கமாகவே பதில் சொன்னாள்?
“என்னா சொல்ற மதி. இப்படி இருந்ததில்லையே ராணி!
“எத்தன தடவங்க கேக்குறது, சரியாயிடுவா விடுங்க,”
“என்னா இவ்ளோ பொறுப்பில்லாமல் பேசுற?” மதியின் வார்த்தையில் திருப்தி அடையாதவர் சட்டையை மாட்டிக்கொண்டு அவள் படிக்கும் பள்ளிக்குக் கிளம்பினார். போகும் வழியில் ராணியின் உற்ற தோழியைச் சந்தித்து விசாரிக்க அவள் வீட்டின் முன் நின்றாள். அவளிடம் ராணியின் தற்போதைய நிலையைச் சொன்னார்.
“அங்கில், ஸ்கூல் இன்னிக்கி சீக்கிரம் விட்டுட்டாங்க, வரும்போது ராணி சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டுதான் வந்தா. ஸ்கூல்லியும் நல்லத்தான இருந்தா?”.
“எங்கிட்ட ஏதும் மறைக்கிறியாம்மா? எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு.”
“ஐயோ அங்கில். சாமி சத்தியமா சொல்றேன் ராணி நிக்கி முலுதும் எப்போதும்போலத்தான் இருந்தா. எங்கூடத்தான் இருந்தா!” அவள் கண்களில் உண்மை பளிச்சிடிட்டது.
அதற்குமேல் அவளிடம் கேட்க ஒன்றுமில்லாமல் அவர் ராணி படிக்கும் பள்ளிக்குப் புறப்பட்டார்.
ஆசிரியர் ராமானுஜத்திடம் ராணியைப்பற்றி சொன்னார். அவர் சொல்லச் சொல்ல அவர் பேசும் சொற்களே அவரை மேலும் கலவரப்படுத்தியபடியே இருந்தது.
“நல்லாதான் பேசிட்டு இருந்தா, இன்னைக்கு அவள் குருப் ப்ரொஜெக்ட டீம் லீடரா இருந்து அவதான பிரசண்ட் பண்ணா. நல்ல செஞ்சாளே.” கதிரவனுக்கு ஆசிரியரின் பதிலில் மகிழ்ச்சி உண்டானாலும், அவள் வீட்டில் திடீரென்று அன்று முழுதும் பேசாமலிருப்பது வியப்பை ஊட்டியது. அதனால் கொஞ்சம் பயமும் அதிகரித்தது.
மனைவியிடம்,”ராணிய உடனே டாக்டர்ட்ட கூட்டிட்டு போவணும். எனக்கென்னெவோ பயமா இருக்கு.” அவர் ராணியை அழைத்தார். அசையவில்லை. கைப்பிடித்து இழுத்து காருக்குள் கொண்டுபோனார். கார் கிளினிக்கை நோக்கிப் போனது. ராணி பின்சீட்டில் அசைவற்று அமர்ந்திருந்தாள். அவள் கண்கள் ஒரே இடத்தைக் குத்தி நின்றன. நான் வரவில்லை என்றோ எனக்கு ஒன்றுமில்லை என்றோ அவள் வாய்த் திறந்து பேசவேவில்லை! வேண்டா வெறுப்பாய்தான் காருக்குள் நுழைந்தாள்.
டாக்டர் ராணியை வாயைத் திறக்கச் சொல்லி மினி டோர்ச்சை அடித்து அடித்தொண்டையைப் பார்த்தாள். ராணி எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.
டோர்ச்சை அடைத்துவிட்டுச் சொன்னார்.
“சார் அவளோட வோக்கல் கோர்டல் ஒரு பிரச்னையும் இல்லை. நீங்க எதுக்கும் லேரிங்கோலோஜிஸ்டுக்கிட்ட கூட்டிடட்டு போங்க. அவர் வோக்கல் கோர்ட் ஸ்பெசலிஸ்ட். ஒன்னும் பயப்படும்படி இல்லை,” என்று சொல்லிக்கொண்டே ஒரு கடிதத்தை எழுதி முத்திரையிட்டு கையொப்பமிட்டு நீட்டினார்.
ஸ்பெசலிஸ்ட் என்றதும் கதிரவனுக்கு அச்சம் அதிகமாகிக்கோண்டே இருந்தது. காரில் போகும்போதெல்லாம் ராணியை மன்றாடிக் கேட்டபடி இருந்தார். ராணி பொருட்படுத்தியதாய்த் தெரியவில்லை. பாறை மாதிரி இறுகி இருந்தாள். அவளைவிட மதி இருப்புக்கொள்ளாமல் தென்பட்டாள்.
இரண்டு நாள் கழித்துதான் அப்போய்ட்மண்ட் கிடைத்தது. அந்த இரண்டு நாளிலும் ராணியிடம் எந்தப் பெரிய மாற்றமுமில்லை.
லேரிங்கோலோஜிஸ்ட்டிடம் சொன்னர்,” வோக்கல் கோர்டல் எந்த வகை இன்பெக்கசனும் இல்லை. இஞ்ரியும் இல்லை. சி இஸ் பெர்பெக்லி ஆல்ரைட். அவள் எதிர்பார்க்காத அதிர்ச்சி தரும் சம்பவம் ஏதும் நடந்துருந்தா, அந்த அதிர்ச்சில பேசமுடியாம போறதும் உண்டு. ஆனாலும் அப்படி நடப்பது வெரி ரேர். நாள் பட நாள்பட நல்லாயிடும். வேணுமின்னே பேசப்பிடிக்காம இருக்கிறமாரி இருக்கு.”
கதிரவனுக்கு டாக்டரின் பதிலில் நிறைவில்லை.“என்ன டாக்டர், எல்லா டாக்டரும் ஒரே மாரி சொல்றீங்க. மூனு நாளாச்சி அவக்கிட்ட எந்த முன்னேற்றமும் இல்லை.”
மதியும் ராணியும் வெளியே நிற்கச் சொல்லிவிட்டு, மீண்டும் டாக்டரின் ரூமுக்குள் நுழைந்தார்,தயங்கிய குரலில் “டாக்டர்….” என்றார்.
டாக்டர் ஏறிட்டுப் பார்த்தார். “சொல்லுங்க மிஸ்டர் கதிரவன்.”
கதிரவனின் குரல் தழுதழுக்க,” டாகடர், எனக்கொரு…… சந்தேகம் இருக்கு. அதுக்கு உங்க அட்வைஸ் வேணும். பசங்க முத்தறுதுக்கு முன்னயே பழுத்துக்கிடக்கறானுங்க. கண்ட கருமத்தையெல்லாம் காட்டுற ஹாண்ட்போன் எக்ஸ்போசர் வேற.எம்பொண்ணுக்கு ஏது அசம்பாவிதம் நடந்திருக்குமோன்னு பயமாயிருக்கு. அப்படி நடந்த பொண்ணுங்க அதிர்ச்சியல இருப்பாங்கன்னு சினிமால பாத்திருக்கேன்.”
டாக்டர் சற்றும் யோசிக்காமல் சொன்னார். அப்படியிருந்தா,ஒங்க ஒய்ப்புகிட்டயாவது சொல்லியிருக்கணுமே.”
“இல்லிங்க டாக்டர் அவ ஒன்னுமே சொல்லலியாம்”
“சரி டெஸ்ட் பண்ணி பாத்திரலாம்.சாதாரணமா எம் ஓ கூட இந்த டெஸ்டை செய்யலாம். எங்கிட்ட லேடி டாக்டர் இருக்காங்க. அவங்கள டெஸ்ட் பண்ண சொல்றேன், ஒங்க டாட்டர கூட்டிட்டு வாங்க.
ஒரு சிறிய அறை. ராணியை ஒரு லேடி டாக்டர் உள்ளே அழைத்துப் போனார். மதிக்கு நிலைகொள்ளவில்லை. பிறடியில் முதுகுதண்டிலும் வியர்க்கும் ஈரத்தை உணர்ந்தாள்.
கொக்கியில் மாட்டப்பட்ட திரை கட்டிலைச் சுற்றிலும் இழுத்து மூடப்பட்டது. ராணி கொஞ்சம் திமிறினாள். டாக்டர் அவளை ஆசுவாசப்படுத்தி பொறுமையாக இருக்கும்படி தோளைத் மெல்லத் தட்டினார்.
சற்று நேரத்தில் ஒவ்வொரு விரல்களின் நுணியில் எஞ்சியிருந்த ரப்பர் நுணியை இழுத்து உறையைக் கழற்றி குப்பைத் தொட்டியில் போட்டபடியே திரையிலிருந்து வெளியே வந்தார்.
டாக்டர் மெல்லிய புன்னகையோடு சொன்னார். “சார் பிள்ளைக்கு நீங்க நெனைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் நடக்கல. நத்திங் டு வொரி, அவள் கண்களில் நிஜம் தென்பட்டது ஹைமென்ல இஞ்சரி ஏதுமில்லை. கிளீனா இருக்கா.” கதிரவனுக்கு மறுமூச்சு வந்தது. ஆனாலும் அவள் பேசா மடந்தையானது அவருக்குப் புரியாத புதிராக இருந்தது.
மதியின் முகம் விம்மிச் சிவந்திருந்தது. பதட்டம் நெஞ்சை கனமாக்கியது..
பரிசோதனை அறையிலிருந்து வெளியே வந்த ராணி தன் தாயை நோக்கி அக்கினிப் பார்வை ஒன்றை வீசினாள்.