மங்கை

நீண்ட கைகளை முன்னும் பின்னும்
ஒரு புறமாக
பனையில் செய்த சந்தன காத்தாடி சுழல்வது போல்
வீசி நடந்து
வந்தாள்
நடனம் ஆடும் பெண்கள்
ஆட்டத்தின்
நடுவே
நடப்பதும்
ஓடுவதும்
பின் ஆட்டத்தை
தொடர்வது போல் நடந்தாள் ஓடாமல்
எதுவும் கூறாமல்
அமைதியான முகத்தில்
எங்கோ
ஒரு ஓரத்தில் சிறு புன்னகை
முகம் முழுவதும்
பயணம் செய்து கொண்டே இருந்தது
நிறுத்தாமல்
கண்ட முகம் சற்று
தன் முடிச்சுகளை அவிழ்த்த கொடுக்கும்
நன்றாக கவனித்தால்
மட்டுமே தெரியும் கம்பல்
ஜிம்மி ஆடுதா என்று
தெரிந்து கொள்ள முடியாத உருவத்தில்
இருந்தது

காலை வேகமாக ஊன்றி
நின்று நிதானமாக
அடுத்த காலை நிலத்தில்

மிதித்து
நிலத்தில் அதிர்வலைகளை
எழுப்பி
நேராகவும் இல்லை
விரைப்பாகவும் இல்லை
எதோ ஒரு நலினத்தில்
நடந்தாள்
தன் இரண்டடுக்கு
பாரத்தை
தன் தலையிலிருந்து
நிலத்திற்கு கால்கள்
வழியாக
கடத்தி கொண்ட சென்றாள்
வெல்லையிலும்
சிவப்பிலும் இருந்தாள்
வேர்வை துளிகள்
அவள் நடந்த வந்த நேரத்தையும்
தூறத்தையும்
கூறியது
அவள் யாருக்கும்
விற்கவில்லை
அவளாகவே அவ்வப்போது நின்றாள்
அவர்களாக வங்கி குடித்தார்கள்
ஏதோ காசு கொடுத்தார்கள்
என்ன விலை
எவ்வளவு காசு கொடுத்தார்கள்
என்று பார்க்கவில்லை
பையில் போட்டு கொண்டே
அமுதத்தை ஊற்றுவதிலே
குறியாக இருந்தாள்
தெரிந்தவர்களிடம்
ஏதோ இரண்டு மூன்று
சொற்கள்

கொடுத்து விட்டு சென்றாள்
மகிழ்ச்சியுடன்
அமுதம் பெற்றவர்கள்
சொர்க்கம் சென்று
திரும்பினார்கள்
கொஞ்ச நேரத்தில்
அசைந்த கொண்டு இருந்த
கானல் நீரில்
அலைகளாக மாறி
கண்ணிலிருந்து மறைந்தது
விட்டாள்
நாளை இதே நேரத்திற்கு
முன்பாகவே வருவாள்
பார்க்கலாம்
நீலத்தில்
அவளிடம் நீலமும் உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *