1.
உணர்வுகள் உள்தறித்து கொள்ளும் ஆடை
புதிய வர்ணம் தேடி அலைகிறது
பாலின பேதமை கொள்ளாத ஆடைகள்
தூரத்தில் தூங்கிக்கொண்டே இருக்கின்றன
ஆடை அடையாளமணிந்து திரிந்து அலைகிறது வேட்கைகள்
வெளியில் புரிதலின்றி வீடு இழந்து புலம்புகிறது ஆடை
கிழிந்த ஆடைகள் தொங்கும் சாபம் உதிரவேண்டி
பிரிந்த நூல் பறக்கும் பிரிதலின் கணத்தில் உதிரம் கொட்டி
ரூபம் இழுக்கிறது ஆடைகள்
2.
நிழல்பரப்பி நீள்கிறது
மரம்
வேர்பருக்க விசாலம் காணும்
காற்றுக்குள் ஊடுருவி இசைக்கும் இலை
இட்டக்குஞ்சாய் விதை சுமக்கும் பழமரங்கள்
முழுமையுற்று கனிகள் விடைசொல்லி போகும்
காய்த்தலும் உதிர்தலும் நிகழும் மரவீட்டில்
இலையுதிர்த்து
தன்னைத்தான் பார்த்துக்கொண்டே புதுபித்துக் கொள்கிறது
ஒற்றை மரம்