கூந்தல் ப்ரெளவ்ன் நிறத்தில் பொன்னென ஒளிர்ந்தது.
ஸாரா ஓர் ஒளிமிகு பெண். கண்களில் கனவு. இதழ்கள் மெரூன் அமிழ்தம்.
வெண்ணிற பனியனில் Dragon Zone எனப் பொறிக்கப்பட்ட வாசகம்.
இடையில் அணிந்திருந்த நீலநிற The Ragged Priest Jean சிறு சிறு திட்டென வெண்தொடைகளையும் முழங்கால் பொன்னிறத்தையும் கர்வமாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
ஹேய்.. நான் கேட்ட கேள்விக்கு பதில சொல்லாம என்னது இது visual stalking?
தலையசைத்து மநு கேட்டான்.
என்ன சொல்றே நீ?
இது என்ன?
என் இன்ஸ்டா பேஜ்.
அது தெரியுது. இது என்ன?
உன் ஃபோட்டோ.
அப்றம் என்ன எழுதிருக்கே?
என் இனிய தேவதைக்கு பிறந்த நாள்.
யாரிந்த இனிய தேவதை?
அவள் கண்களைப் பார்த்தான். ஒரு கவிதை தெரிந்தது.
முதல்ல என்கிட்ட சொல்லணும் பாஸ். அதவிட்டு ஊருக்கே சொல்லிருக்கே.
அது.. வந்து..
முதல்ல என் கிட்ட ப்ரொபோஸ் பண்ணு. அப்றம் ஊருக்கு தமுக்கடிச்சு சொல்லலாம்.
அப்டின்னா?
அப்டித்தான். டூ யூ வாண்ட் டு ப்ரொபோஸ் மீ?
தலையசைத்தான்.
பூமர் மாதிரி நெளியாதே.Gen Z மாதிரி பேசு மேன்.
உன்னப்பாத்தாலே Gen Beta மாதிரி ஆகிடறேன்.
அட என் கொழந்தே. சீக்கிரம்… சீக்கிரம்.
இங்கேயேவா ?
இல்ல Taj or ITC அட்லீஸ்ட் Lemon Tree with a Gold ring.
தங்கமா? கிராம் எட்டாயிரம்.
அடே கஞ்சூஸ் மாமா. ஒரு பொக்கே.
எங்கே கிடைக்கும்?
சரிவிடு. பக்கத்து காஃபி ஷாப்ல ஒரு காஃபி வாங்கி கொடுத்து சொல்லு?
எதை?
I fall in Love with You.
குறைந்த செலவில் நிறைந்த காதல்.
குறைந்த செலவில்ல மாமே. Starbucks ல.
தலையைச் சொறிந்து கொண்டே Dragon Zone ஐ பார்த்தான்.
யோவ்.. எல்லா ஆம்பிளைங்கலும் அங்கதான் பாப்பிங்களா?
பேபி அது ஆதாம் ஏவாள் காலத்துலேர்ந்து இருக்கற Visual treat.
m.. visual treat? கொன்னுடுவேன். மவனே உன்ன வச்சிக்கிறேன்.
வச்சுக்கோ என்ன மட்டும் நெஞ்சுக்குள்ள.
கர்மம்டா சாமி.
காஃபிக்கடையில் கூட்டமில்லை..
கீழ் உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு சொன்னாள்.
Two Vanilla Bean Custard Danish and Two Caramel Brulee Latte.
எனக்கும் சேத்து ஆர்டர் பண்றியா?
தலையசைத்தாள்.
லவ் ப்ரொபோஸ் பண்ணப் போறேல்ல.. இனிமே இப்டிதான். வலது கைவிரல்களை நீட்டினாள்.
அவளின் நீண்ட நகங்கள் வித்தியாசமாக ஓளிர்ந்தன.
இது என்ன டிசைன்?
இது Aura Nails .
எனக்கு அதெல்லாம் தெரியாது.
தெரிச்சுக்கோ.
ஓக்கே. விரல்கள் பற்றி மிருதுவாக தடவினான். சிறுமலரிதழ்கள் போல் மெத்துமெத்தென்றிருந்தன.
I Love You Zara. I want you in the name of Love.
அவன் விரல்களில் லேசாக முத்தமிட்டள். வெண்பட்டு துகில் ஸ்பர்சம்.
சரி ஸாயா நம்ப பிளான்?
நம்ப ஐடியாஸைத் தின்னு தின்னு நம்ப பாஸ் கொழுத்துட்டான். எனக்கு ஒரு ஸ்டார்ட் அப் ஐடியா இருக்கறது உனக்குத் தெரியுமில்ல.
ஃபண்ட்?
நீ பண்ண மாட்டியா?
உதடு பிதுக்கினான்.
உன் கோடி ரூவாக் கனவு எவ்ளோ தூரத்துல இருக்கு மநு?
Jusat a meter away. இன்னும் ஒரு வருஷம்ல தொட்டுடுவேன்.
ஏன் இவ்ளோ பெரிய ஆசை?
எனக்கு நிறைய ஆசை இருக்கு ஸாரா.நான் ஒண்ணும் புத்தனில்லை.
அப்ப சித்தார்த்தன்?
தலையசைத்தான்.
யசோதரையையும் ராகுலையும் விட்டுட்டு போன மாதிரி போய்ட மாட்டியே? சிரிப்புடன் கேட்டாள்.
எந்த போதி மரம் அடிலேயும் உக்கார்ற மாதிரி ஐடியா இல்ல. அதே புன்னகையுடன் சொன்னான்.
தலையசைத்தாள்.
முதல்ல எங்க அப்பா, அம்மாவைப் பாப்போம். அப்றம் உங்க ஃபேமிலி.
எப்ப?
இப்பவே?
ஆபிஸ்?
வொர்க் ஃப்ரம் ஹோம்.
கூந்தல் கலைத்து சிரித்தாள். ஒரு லட்சம் டாலர் சிரிப்பு.
ஸாராவின் மேல் வர்ஷன் மாதிரி இருந்தார் அவள் அப்பா.
பரஸ்பர அறிமுகம் முடிந்ததும் சுவர்களில் இருந்த படத்தைப் பார்த்து விட்டு கேட்டான்..
இந்த ஃப்ளாட் காஸ்ட் எவ்ளோ சார்?
ஆச்சர்யமாக பார்த்தார். கால் மீ அப்பா ஆர் அங்கிள். வாங்கி அஞ்சு வருஷம் ஆய்டுச்சு. அப்ப ட்டூ சி.
டூ க்ரோர்?
சின்ன புன்னகையுடன் தலையசைத்தார்.
இந்த ஓவியம்?
Blue Dancers by Edgar Degas .
இதெல்லாம் ஒண்ணும் எனக்குத் தெரியாது.
So whattt?
அம்மா கண்கள் விரிய சொன்னார். மநு மநுன்னு டெய்லி நூறு தடவ உங்க பேரச்சொன்னப்பவே எனக்கு டவுட்டு.
நோ மா.
அம்மாவின் கையை பிடித்து இழுத்தாள்.
என் பேரா?
அமாம் மாப்ளே?
ஓ.. மை காட்.. இன்னும் அப்பா ஓக்கே சொல்லலை. அவங்க விட்டுல பேசலை. அதுக்குள்ற மாப்ளே?
அப்பா சிரித்தார்.
அம்மா என் பதிலை அவள் பாணில சொல்றா.
ஸாரா அப்பாவைக் கட்டிக் கொண்டாள்.
ஏய் என்னயும் சேத்துக்கோ.
அம்மா கூவிக்கொண்டே அருகில் வந்தாள்
ஸாரா கண்கள் விரிய கிட்டதட்ட கத்தினாள்.
இதென்ன வீடா இல்ல நந்தவனமா?
வீடென்று சொல்வது அந்த வீட்டுக்கு செய்யும் வார்த்தைத் துரோகம்.கை தேர்ந்த ஓர் ஓவியனின் வர்ணத்தைல ஓவியம் மாதிரி இருந்தது.
இதெல்லாம் அம்மா வேலை. கிறிஸ்டியடன் காலேஜ்ல பாட்டனி புரொஃபஸர்.
அப்பா?
ஒரு பப்ளிஷர். அபார்ட் ஃப்ரம் ரைட்டர்.
வாவ். செம காம்போ. அப்றம் எப்டி நீ டாலர் ச்சேஸரா இருக்கே?
அதனாலதான்.
சிரித்தான்.
அம்மா ஆர்வமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
இது செர்ரி மலர்.. இது மேப்பிள் மரம்.. இது பாவோ பாப். நெஃபெந்தெஸ்.
Styphnolobium japonicum. அது ஜின்கோ?
ஜின்கோ?
இலைகளே பொன்னாக பூத்துக் குலுங்கும். இப்ப சீஸன் இல்ல. ஜெனிவாலேருந்து இங்க கொண்டு வந்து வச்சேன்.
இங்க இந்த ஸ்பீசிஸ்லாம் வருமா?
அந்த சூழலை உருவாக்கினா வரும்.
ஹாலில் தேக்குமரஅலமாரியில் புத்தகங்கள்.
இதெல்லாம் அப்பா கலெக்ஷன்.
இவ்ளோ படிப்பிங்களா அங்கிள்?
எல்லாத்தையும் படிக்கிறாரோ என்னமோ எல்லாத்தையும் வாங்கி அடுக்கிடுவார். அம்மா சிரித்துக் கொண்டே சொன்னார்.
ஒரு தடவை படிச்சது. திரும்ப திரும்ப படிப்பது. படிக்க நினச்சு படிக்காம போனது எல்லாம் இருக்கு. எல்லாத்தையும் படிச்சுடலாம்கிற கனவு இருக்கு.
நான் எடுத்து பாக்கலாமா?
ஸ்யூர்.
விரல் தடவி ஒரு மெல்லிய புத்தகத்தை உருவினாள்.
Jorge Luis Borges.
The Perpetual Race of Achilles and the Tortoise.
இது எதைப் பற்றி?
Essays about existence or non-existence of Hell.
ஓ.
ஓக்கே. உங்க பிளான் என்ன?
டின்னர் உங்களோட சாப்பிடறோம்.
நான் அதைக்கேட்கலை? உங்க மேரேஜ்?
ஸாரா குறுக்கிட்டாள்.
ஆஃப்டர் டூ இயர்ஸ்.
ஏன் அவ்ளோ நாள்?
ஸ்டார்ட் அப் ஐடியா பற்றி சொன்னாள்.
Aru you Ok with it Manu?
மநு தலையசைத்தான்.
Then well and good.
அம்மா அருகில் வந்து ஸாராவை அணைத்துக் கொண்டாள். அப்பா மநுவின் கைகுலுக்கினார்.
மிகச் சரியாக 1221 நாட்கள் கழித்து சென்னை குடும்ப நல நீதின்மன்றத்தின் தலைமை நீதிபதி திருமதி.லாவண்யா பாஸ்கரன் ஸாரா காஸ்மெட்டிக்ஸ் சிஇஓ ஸாரா ஜோஸப்புக்கும், மநு கேப்பிடல் எம் டி மநு பிபின்சந்திராவுக்கும் அவர்களின் திருமண ஒப்பந்த முறிவு பத்திரத்தை கையெழுத்திட்டு அளித்தார்.
***************