நடு ராத்திரி வந்த போன் அழைப்பில் தூக்கம் கலைந்து எழுந்த நான் டிஸ்பிளேயில் யார் என்று பார்த்த போது அருணா என்று காண்பித்தது. “இப்பொழுது இவள் ஏன் போன் செய்கிறாள், என்னவாக இருக்கும்? ஒரு வேளை பிரசவ வலி வந்து விட்டதா ? நாட்கள் கூட நெருங்கி விட்டதே.“
தூக்கம் கலைந்தது எழுந்து போய் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு தலையணையை ஒன்றின் மேல் ஒன்றை குறுக்காக கட்டிலின் தடுப்பில் வைத்து சாய்ந்தபடி போனை எடுத்துப் பார்த்தேன்.
அருணா அறிமுகமானதே ஒரு விபத்துதான். நாட்டுக்கறுப்பாக கொஞ்சம் பூசினாற் போல உடம்பும் உயரமாயும் சிரிக்கும் போது யாரையும் கவரும் முகமும், சரிக்கு சரியாக பேசுவதிலும் கெட்டிக்காரி. எனக்கும் அவளுக்கும் எப்படியும் இருபது வயது இடைவெளியாவது இருக்கும் .எனது கடையை அடுத்த மொபைல் கடையில் வேலைக்கு சேர்ந்து மூன்று வருடமிருக்கும். பொதுவாக எனக்கு கூச்ச சுபாவம். பெண்களிடம் சட்டென்று பேசக்கூடியவனல்லன் .
ஒரு வருடத்திற்கு முன்பு மொபைல் கடை ஓனர் செந்தில் இல்லாத போது கஸ்டமர் ஏதோ கேட்க சரியாக காதில் வாங்காமல் ,அதற்கு சொன்ன பதிலால் கடுப்பான கஸ்டமர் பச்சை பச்சையாக திட்ட ஆரம்பித்தான். அவளும் சரிக்கு சரியாக திட்ட ஆரம்பிக்க கஸ்டமர் அவளை அறைந்து விட்டான்.
இதை எதிர்பாராத அருணா தடுமாறி கடையையொட்டி உட்கார்ந்து மோட்டர் வைண்டிங் செய்து கொன்டிருந்த என் மீது விழுந்துவிட்டாள் .நானும் தடுமாறி கடை வாசலில் விழுந்துவிட, என் காலின்மேல் மோட்டர் விழுந்து விரலில் அடிபட்டு ரத்தக் காயமானது. ரத்தம் ஒழுக மொபைல் கடை கஸ்டமரை நான் அடிக்க, ஒரு சின்ன கைகலப்பு ஏற்பட ,அக்கம் பக்கம் கடையில் உள்ளவர்கள் வந்து என்னையும் அந்த நபரையும் பிரித்து விட்டு, அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பி விட்டு எனக்கு உண்டான காயத்திற்கு மருந்திட்டு ஆசுவாசபடுத்தினர்.
நடந்ததை பார்த்த அருணா கொஞ்ச நேரம் கழித்து என் கடைக்கு வந்து, என் காயத்தை பார்த்து விசாரிக்க ஆரம்பித்தாள்.
ஐந்தடிக்கு ஐந்தடி பர்மா பஜார் கடைகள் போல உள்ள கடைகளை, இரண்டு கடைகளின் நடுவே இருக்கும் குறுக்கு சுவரை எடுத்து விட்டு ஒரே கடையாக செய்தது, எனது கடை. கொஞ்சம் நீளம் அதிகமாகவும் அகலம் குறைவாக இருக்கும் கடை முழுக்க மோட்டார்களும் ,பேன் , மிக்ஸி , கிரைன்டர் போன்ற பல தரப்பட்ட எலக்ட்டிரிக் சாமான்கள் பிரித்து போட்டு உள்ளே அமர முடியாத அளவுக்கு இருக்கும். அதனால் வாசலில் அமர்ந்து மோட்டர்வைண்டிங் ரிப்பேர் வேலைகள் செய்வேன் .
அருணா வந்து “என்னாங்க வலி அதிகமா இருக்கா ?“இப்படி ரத்த காயம் உண்டாயிடிச்சே, அடி ரெம்ப பலமா?“ என்று கொஞ்சம் தயங்கி தனிவாக விசாரிக்க ஆரம்பித்தாள்.
“இல்லம்மா ரெம்ப அடியல்லாம் இல்ல, எனக்கு சூட்டு ஒடம்பு சீக்கிரம் ஆறிடும் கவலபடாதே, சரி கடையில் போயி ஒக்காரு செந்தில் வந்து திட்ட போறாப்புல.”
இப்படி ஏற்பட்ட விபத்தால் கொஞ்சம் கெஞ்சமாக நெருக்கம் அதிகமாகி போன் நம்பர் வாங்கிபேசி சிரிக்கவும் வாட்சாப்பில் சேட் செய்யவும் ஆரம்பித்தேன்.
அருணாவுக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உண்டு. சொல்லியிருக்கிறாள் போனில் போட்டோவும் காட்டியிருக்கிறாள்.
புருசன் சரியான குடிகாரன். வேலைக்கு போவதே அபூர்வம். தினமும் குடித்து விட்டு அடி, உதை வேறு. கூடவே உடலின்பத்துக்கு அழைத்து ஏறக்குறைய வன்புணர்வுக்கு உட்படுத்தி, போதையினால் நீண்ட நேரம் இயக்கத்தில் ஈடுபட்டு ரணமயமாகி எப்பொழுதும் கவலைப்பட்ட முகமாகவே இருப்பாள். அதையும் அடிக்கடி என்னிடம் அழுதபடியே சொல்வாள்.
அதனாலேயே அடிக்கடி புருசனிடம் சண்டை போட்டு அம்மா வீட்டுக்கு போய் விடுவாள்.
அவனும் வாரம் பத்து நாள் கழித்து மாமியார் வீட்டுக்கு போய் கெஞ்சி, கூத்தாடி ,அழுது கால்லவிழுந்து கூட்டிக்கிட்டு போவான்.
எனக்கு கல்யாணமாகி இரண்டு பையன்களும் அவர்களுக்கு கல்யாணமாகி பேரப்பிள்ளைகள் உண்டு, ஆனாலும் எனக்கும் சில நேரங்களில் பெண் துணை தேவைப்படும் .நானும் மனிதன் தானே, வீட்டுல மனைவி உடல் நலக் கோளாரினால் ஒத்துழைப்பது இல்லை. நானும் வற்புறுத்துவதும் இல்லை.
ஒரு வழியா தட்டுத் தடுமாறி கொஞ்ச கொஞ்சமா பேசி என்னோட நிலமைய விளக்கி “உனக்கு விருப்பமிருந்தா எனக்கு நீ வேணுமின்னு“ கேட்டும்புட்டேன்.
அருணா மொதல்ல பேசி பாப்போங்க. அப்புறம் போகப் போக பாப்போம்ன்னா.
சரி அப்படியே செய்வோம்ன்னு சொல்லி கொஞ்ச நாள் பேசிக்கிட்டிருந்தோம் .
பிறகு முத்தத்தில் ஆரம்பித்தது. கொஞ்ச நாள் கழித்து என்னவோ தெரியல ஒத்துகிட்டு கூட ஆரம்பித்தோம்.
கடைக்கு பின்புறமிருந்த காலியான குடோனை வாடகை்கு பிடித்தேன். குடோன் ஒதுக்குபுறமாவும் ரெம்ப வெளியே தெரியாதபடி கடைகள் மறச்சிருக்கும், பத்துக்கு பத்தடி நல்ல சதுரமான அமைப்போட அட்டாச்சிடு பாத்ரும் வசதியா இருந்தது. சந்து வழியா வந்தா அவ்வளவா யாருக்கும் தெரியாது வரலாம் போலாம்.
ஞாயிறு மதியத்திற்கு மேல் சாய்ந்தரம் ஆறு மணி வரைக்கும் , சந்துல குடியிருக்குற யாரும் அதிகமா வெளிய வர மாட்டாங்க, ஆள் நடமாட்டம் கூட இருக்காது மொத்தத்துல ஒரு ஈ காக்கா கூட இருக்காது.
இரண்டு மணிக்குள் சாப்பிட்டு விட்டு பின்புறம் குடோன்ல ரெண்டு பேரும் பேசிகிட்டும் உறவில் ஈடுபட்டும் வந்தோம் மொதல்முறையா கூடி முடிச்சதும் நா கேட்டது.
“இப்படி இருக்கோமே குழந்தை பொறந்துட போவுதுடி“.
“அதெல்லாம் பொறக்காது. கவலபடாதீங்க காப்பர் டி போட்டுருக்கேன். இல்லேன்னா எம் புருசனால இந்நேரம் இன்னும் ரெண்டு பொறந்திருக்கும்னு“ சிரிப்பா.
“சரி புருசனுக்கு தெரிஞ்சா என்னாகும்“.
“அதெல்லாம் தெரியாது. அவன் இங்கேயெல்லாம் வர மாட்டான்.“
“குடிச்சிட்டு எவவூட்டுலயாவது கடப்பான்.“
“உனக்கு எங்கூட இருக்குறது தப்பா தெரியலயா ?“
“இதுல என்ன தப்புருக்கு , உங்களுக்கு நா தேவ எனக்கு நல்லா பாத்துக்குற ஆம்பள வேணும். அதுலேயும் மனச கொல்லாம பாத்துக்குற ஆம்பள வேணுங்க. அது நீங்கதான்.“
“இப்ப நா திடீர்னு வேணாமுன்னு ஒதுங்கிட்டா என்னா பண்ணுவே ?“
“சரி நமக்கு கெடச்சது அவ்வளவுதான்னு ஒதுங்கிப் போய்டுவேன் , நாம முன்னாடியே பேசின படி நடந்துக்குவேன். வேற யாரையும் இனி சேத்துக்கவே மாட்டேங்க ,நா அந்தமாறி ஊர் மேயுறவ கெடையாது, ஒங்களுக்கும் அது தெரியும் மூனு வருசமா பாக்குறீங்கல்ல.“
“சரிடி ஒன்னு கேக்கனும். வாடி போடின்னு கூப்புர்றேனே. ஒனக்கு ஒகேவா.“
“எனக்கு புடிக்குங்க அதும் நீங்க கூப்டா ஒகே “.
“உனக்கு புள்ளவேணும்ன்னு ஆச இருக்கா இல்லையா. எனக்கு ரெண்டும் பையன் அதனால எனக்கு பொண்னு வேணும் . பெத்து குடுக்கிறியாடி?” .
“இப்ப அதெல்லாம் முடியாதுங்க. கொஞ்ச நாளாவுட்டும், அத்தோட பணங்காசு வேணும் புள்ள பொறந்தா ஒரு வருசமாவது வேலைக்கு வர முடியாது பாப்போங்க” .
இப்படியே நாட்கள் போய் இரண்டு வருசமா எங்க தொடர்பு நீடித்தது .
வாரம் ஒருமுறை இருந்தது மாதம் இருமுறை அல்லது ஒரு முறையானது அப்படியும் ரெண்டு பேரிடமும் நாட்டம் குறையவில்லை.
வாட்சாப்பில் மெசேஜ் போடுவதும் சேட் செய்வதும் குறைந்தது .
புருசன் குடிபோதையில் மொபைலை ஒடைத்ததினாலும் சண்டையாலும் இரண்டு மாதம் வேலைக்கு வரவில்லை .
வந்தவளை பார்த்து அதிர்ந்தேன். அதிகம் கவலையினாலும் சோர்ந்தும், புருசன் கண்மூடித்தனமாக அடித்ததில் கையில் ஆழமான காயமும் கன்னத்தில் லேசான வீக்கமும் இன்னமும் இருந்தது .கண்கள் ஒளியிழந்து ஆழத்தில் வறட்சியாக இருந்தது , உதடுகள் வெடித்து நாகப்பழ கலருக்கு மாறியிருந்தது. அவளுடன் பழகிய காலத்தில் அது தான் மிக அதிகமான காயமாக இருந்தது.
“என்னாடி ஆச்சி ஆள காணும், போனும் பண்ணல, அப்டியென்ன பிரச்சன சொலியுடவேண்டியது தானே, சே என்னா ஒரு சுயநலம்”.
“உங்களுக்கும் தெரிய வேணாம்ன்னு தான் சொல்லல ,வரல ”.
“மறுபடி சண்டையாயி போலீஸ் வரைக்கும் போயிடிச்சிங்க. என்னா செய்றது பாடா படுத்திவச்சான், அவங்க அம்மா வந்து காப்பாத்தி அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சாங்க இப்ப திருந்திட்டேன் குடிக்க மாட்டன்னு வந்து அழுதுகால்ல உளுந்து கூப்டான்னு வந்துட்டேன்.”
“ஒகே டி வேலைய பாரு, அப்புறமா பேசுவோம்”.
“வேற மொபைல் வாங்கி தாங்க பெறவு பணம் தர்றேன்.“
“சரி டி போவும் போது வாங்கி தாரேன்.“
பழைய செல் போன் ஒன்னு வாங்கித் தந்தேன்.
பத்து பதினைந்து நாள் இருக்கும். பழையபடி புருசன் குடித்துவிட்டு அடிச்சிட்டான்னு அம்மா வீட்டுக் போய்ட்டா , அங்கிருந்து போன் பண்ணி சொன்னாள்.
“நா அம்மா வீட்டுலர்ந்தே வேலைக்கு நாளையிலிருந்து வருவேன் அப்போ பேசலாம் மாமா.”
“என்னாடி புதுசா மாமான்னு கூப்புடுற சரிவா நேர்ல பேசுவோம்”.
“ஒகேங்க கட் பண்ணிடுறேன்.”
நேர்ல பேசும் போது அழ ஆம்பித்தாள் , “என்னால முடியலங்க ரெம்ப ஓவரா பண்றான் ஒரு வாரம் சும்மா இருந்தான். அப்புறம் பழையபடி தண்ணிய போட்டுட்டு தெனம் செய்யுறான் ,அதும் ரெம்ப நேரம் செய்யுறான். தாங்க முடியெல அன்னக்கி தண்ணிய போட்டுட்டு, செய்யுற தோட அடிக்கவும் செஞ்சான், அதான் போலீசுக் சொல்லிட்டு அம்மா விட்டுக்கு போய்ட்டேன். பாப்போம் நாளைக்கு ஸ்டேசன்ல கூப்ட்டு கேப்பாங்க அப்ப முடியாது வெட்டி வுடுங்கன்னு சொல்ல போறேன்”.
“சரிடி பாத்துக்க, வாழ்க்க உன்னுது அத நல்லபடியா வச்சிக்க .”
“சரிங்க இனிமே நா உங்கள மாமான்னு தான் கூப்டுவேன், ஒகே வா மாமா“.
“சரிடி ஒம் விருப்பம்.”
இம்மாதிரியான சிக்கலான வாழ்க்கையா போயிகிட்டிருந்திச்சி, ரெண்டு மாசம் எங்கூடவே இருந்தா, புருசன் வீட்டுக்கு போவாம அம்மா வீட்டுலர்ந்து வேலைக்கு வந்தால எனக்கும் அது சவுரியமா இருந்திச்சி. ரெண்டு மாசம் கழிச்சி, அவ புருசன் வந்து திரும்பவும் கூப்டவும் முடியாதுன்னு சொல்லியும் கேக்காம போலீசுக்கு போய் கேட்டு, அவங்க இவள கூப்டு இப்போ போய் வாழு திரும்பவும் ஏதாவது பிரச்சன பண்ணா வந்து சொல்லுன்னும், அவன் தராம உனக்கு டைவர்ஸ் கெடக்காது அதனால பேசாம சேந்து வாழுங்கன்னு சொன்னதால திரும்பவும் புருசன் வீட்டுக்கு போய்ட்டா.
வழக்கம் போல வேலைக்கு வர்றதும் எங்கூட பேசுறதும் ஒன்னா இருக்குறதுமா பொழுது போச்சு.
திடீர்னு ஒருநா “என்னாங்க மாமா நா இன்னொரு புள்ள பெத்துக்கலாம்னு இருக்கேன் , நீங்க கேட்டீங்களே, பொம்பள புள்ளவேனுமின்னு பெத்துக்கலாமா?”
கொஞ்சம் அதிர்ச்சியோட நல்லா “யோசிச்சிதாம் சொல்றியா , இப்ப இருக்குற இருப்புல இது முடியுமா? பணங்காசு இருக்காடி , ஒரு புள்ளாக்கே ஸ்கூல் பீசு கட்டமுடியலன்னு சொன்ன ,புருசன் காசு தர்றதில்லைன்னு சொல்ற, ஏதோ என்னால முடிஞ்சத தந்து கிட்டிருக்கேன். பைனான்ஸ் வேற வாங்கி வச்சிருக்க, நல்லா யோசிச்சியா?“
“நல்லா யோசிச்சிட்டேன் மாமா. ஒரு புள்ளக்கி இன்னான்னு தொனையா இருக்கும் நானும் எங்கக்காவும் போல பின்னாடி நல்லாருக்கட்டும்“
“சரிடி என்னமோ சொல்ற, ஒரு கேள்வி உண்மையாவே எனக்கு பெத்து தரப்போறியா , முடிவே பண்ட்டியா ?”
“ஆமா மாமா இந்த மாசம் குளிச்சதும் காப்பர் டிய எடுத்துடுவேன், அப்புறம் ஒங்க கூட இருந்துதான் பெத்துக்க போறேன்”
சொன்னமாரி காப்பர் டிய எடுத்துட்டேன்னு சொன்னா. இரண்டு வாரம் ஒன்னா இருந்தோம்
அந்த மாசம் ஒருநாள் வாட் சாப்பில் மெசேஜ் பண்ணா
“மாமா வேலயா?”
“இல்ல சொல்லுடி”
“எப்டி சொல்றதுன்னு தெரியல தப்பா நெனக்க மாட்டிங்களே”
“இல்லடி சொல்லு ரொம்ப பீடிக போடுற என்னா சேதி.?“
“ஒங்க கிட்ட தான் மொதல்ல சொல்றேன் சொல்லவா ?”
“சொல்லுடி செல்லம்.”
“நா மாசமா இருக்கேன் மாமா. சாயங்காலமா பேசுறேன், இல்லேன்ன வழக்கமா ஞாயித்துகெழம வரும் போது பேசுவோம் .”
“சரிடி …அப்டியா சந்தோசம். எனக்கு தானே“.
பதிலு வரல. கடையில பாக்கும் போது அதிகமா பேச முடியல, ஞாயித்து கெழம ஒன்னு சேந்த பின்னாடி பேசுனோம்.
“என்னாடி உண்மையாவா சொல்ற மாசமா இருக்கியா?“
“ஆமா மாமா மெசேஜ் பண்ணத்துக்கு மொதநாளு ஒடம்பு சரியில்ல ,டாக்டர போயி பாக்கும் போது சந்தேகம் வந்து செக் பண்ணேன் அப்போதான் தெரிஞ்சது.”
“உறுதியா தெரியுமாடி எத்தனை நாளாவுது .”
“தெரியும் கன்பார்ம் பண்ணியாச்சி. ஒரு மாசம் ஆவுது.”
“ ம்” எனக்குத் தானே ?”.
“அது சரியா தெரியல மாமா, ஒங்ககூட இருந்தப்பறம் அவன் கூடவும் இருந்தேன்.சரியா தெரியல?”