தலைநகரில் சந்திரசேகரின் அரசு தள்ளாடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை. தென்தமிழகத்துக் கல்லூரி விடுதி ஒன்றில் அதைப்பற்றிய எந்த உணர்வுமின்றி, ‘விடாத…நீலா…கார்த்தி விடாதடா..’ என்று மாணவர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து உசுப்பேத்திக் கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொருவாரமும் நீலன் துணி குடுக்க வரும்போதும் இந்தச் ‘சண்டை‘ தவறாமல் நடப்பதுண்டு. நீலனின் கையை மடக்கவேண்டும். அவ்வளவுதான் போட்டி. போட்டி விதிகளின்படி அந்த வாரம் ஜெயித்தவன் போடும் துணிகளை வெளுக்க பணம் வாங்கமாட்டான் நீலன். தோற்றால் வெளுத்த துணிகளுக்கு எவ்வளவு பணமோ அதுபோல ரெண்டு மடங்கு பணம் தரவேண்டும். இதுவரை ‘சும்மா‘ வெளுத்துக் கொடுக்கவேண்டிய அவசியம் வரவில்லை நீலனுக்கு. இப்படியான மேற்படி வருமானம் அவனுக்குத் தவறாமல் கிடைத்துக் கொண்டிருந்தது. மாணவர்கள்தான் வருடாவருடம் புதிது புதிதாக வந்துகொண்டே இருக்கிறார்களே?
அந்தக் கல்லூரி ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக இருந்தது. நகர பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் ஏறினால் அரைமணிநேரத்தில் அடையும் தூரம். விரிந்து பரந்த மரங்களடர்ந்த கல்லூரி வளாகம். விடுதி மாணவர்களுக்காக பிரத்தியேகமாக ஒரு கடை, மருந்தகம் உண்டு. ஞாயிறு நீங்கலாக தினமும் ராவணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஒரு வயதான மருத்துவர் அவரைவிட வயதான ‘ஆஸ்டின்‘ காரில் வருவது வழக்கம். காப்பி,டீ,நொறுக்குத்தீனி விற்கும் சிறு ‘கேன்டீனு‘ம், முடிவெட்ட ஒரு சலூனும் உண்டு. ஆனால் அங்கு முடிவெட்டும் கருத்தப்பாண்டியின் திறமையின் மீது சந்தேகம் உள்ளவர்கள் வார இறுதியில் நகர்வலம் செல்லும்போது முடிவெட்டிக்கொள்வர். துணி வெளுக்கும் நீலன் ஒவ்வொரு ஞாயிறு காலையும் வரும்போதுதான் மேற்கூறிய அலப்பறைகள் நடப்பது வழக்கம்.
நீலனுக்கு வயசு நாற்பது இருக்கலாம். கேட்டால் ‘இன்னொரு பொண்டாட்டி கட்டுற வயசுதான்‘ என்பான். நரை கிடையாது. காலம்காலமாக துணிகளைத் துவைத்து முறுக்கேறிப்போன இரும்பைப் போன்ற கரங்கள். நீலனோடு போட்டிக்கு முன்வருபவர்கள் மிகக்குறைவுதான். ராமசுப்பு போன்றவர்கள் அந்தத் திசைக்கே வருவதில்லை. வருமானத்திற்கு இப்படி ஒரு வழி இருப்பதை எப்படித்தான் கண்டுபிடித்தானோ?
போட்டி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. சாதாரணமாக ஐந்து முதல் பத்து வினாடிகளில் முடிந்துவிடும் போட்டி இன்னும் இழுத்துக்கொண்டிருந்தது. கார்த்தியும் சாதாரணமாக விடுவதாகத் தெரியவில்லை. கையை முழுதாக மடக்கி தரையோடு தரையாகக் கிடத்தவேண்டும். ஆனால் இரண்டு கைகளும் எந்தப்பக்கமும் சாயாமல் நேர்கோட்டில் நின்றபடி உதறிக்கொண்டிருந்தன. அப்போது ‘திடுதிடு‘ வென வேகமாக அறைக்குள் நுழைந்தான் ஜெல்பி “போதும்..போதும் நிப்பாட்டுங்க…குருசாரு செக்கிங் வருது..” என்றபடி. நல்லவேளையாக சற்றுமுன்புதான் “கொழுக்கு மொழுக்கு என்று திமிறி நின்ற அவளுடைய முலைகளைப் பார்த்து அவனுக்கு குபுக்கென்று….” என்று சரியான பாவங்களோடு ஏத்த இறக்கமாக பக்கத்து அறையில் ராமசுப்பு வழக்கமாக நடத்தும் வாராந்திரப் பிரவசனத்தில் ‘பருவக்கால‘த்திலிருந்து படித்துமுடித்திருந்தான். இங்கிருந்து பக்த கேடிகள் அனைவரும் சென்றிருந்தனர்.
ஜெல்பி குரு சாருடைய ‘செஸ் பார்ட்னர்‘. நீலன் “சரி..அடுத்தவாரம் பாப்போம்…சார் பாத்தா நான் தொலைஞ்..சேன்” என்றபடி எழுந்து வேட்டியை விரித்து துணிகளை அள்ளிக்கட்ட ஆரம்பித்தான். மாணவர்கள் வேகவேகமாகக் கலைந்து பதுக்க வேண்டியவைகளைப் பதுக்க ஆரம்பித்தார்கள். பழைய புத்தகக்கடையில் வாங்கிய ‘டெபோனைர்‘ நினைவுக்கு வர, தன்னுடைய ‘ரேக்‘ கை நோக்கி ஓடினான் கார்த்தி.
அந்த அவசரத்திலும் “அமுதால பதினொன்றை என்ன படம் ஓடுது நீலா?” என்றான் மரியதாஸ்.
“சாரவலயம்”
“பிட் ஓட்டுவானா?”
“அதெல்லாம் தேவையில்ல. படத்துலயே இருக்கு…”
பாவம் கொடூரன், பிடிகிட்டாப் புள்ளி, அஞ்சரைக்குள்ள வண்டி, உக்கான் ஓர்மிக்கான், மழு (இதற்கு தமிழக சினிமா வினியோகஸ்தர்கள் வைத்த பெயர் ‘மாமனாரின் இன்பவெறி’) என்று ஒரு தமிழ்–மலையாள கலாசாரப் பரிவர்த்தனையே நடந்து கொண்டிருந்த காலம் அது. வேறென்ன, கிளுகிளு திரைப்படங்கள்தான். “விநாயகனே வினை தீர்ப்பவனே…” என்ற சீர்காழியின் பாட்டோடு ‘டிக்கெட்’ கொடுக்க ஆரம்பிப்பார்கள். வழக்கமான படங்களுக்கு முன்னால் போடப்படும் விக்கோ டர்மரிக், நிர்மா விளம்பரங்கள், ‘பீகாரில் வெள்ளம்..’ போன்ற ‘நியூஸ் ரீல்’ எல்லாம் கிடையாது. நேரேயே படம்தான். படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யவில்லையென்றால் இடைவேளைக்குப்பின் படம் ஆரம்பிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருக்கும். திரையில் பளிச் பளிச் என்று இரண்டு முறை விளக்கு அணைந்து எரியும். ‘பதறாதே திகையாதே நான் உன்னுடனேயே இருக்கிறேன்’ என்று ‘ஆபரேட்டர்’ கொடுக்கும் சமிங்ஞை அது. பிட் எனப்படும் ஆபாசக்கட்சிகளின் தனித்தொகுப்பு அப்போது ஓட்டப்படும். சரியான ‘பிட்’ டைப் போட்டு அனைவரையும் மலர்ந்த முகத்தோடு அனுப்பி வைப்பார் ‘ஆபரேட்டர்’ என்கிற ‘கிரியேட்டர்’.
“நான்லாம் படத்துக்குப் போயி ரொம்பநாளாச்சு. பூராம் ‘டெக்’குத்தான். சரி பாக்கலாம். சாரு வராரு…” என்று துணிமூட்டையை எடுத்துக்கொண்டு ஓட்டமெடுத்தான் நீலன்.
“நீலா..துணி இருக்கு….ரூமுக்கு வந்துட்டுப்போ” என்றபடி உள்ளே நுழைந்தார் குரு. வார்டன் குரு இப்படி மாதத்திற்கொரு ‘செக்கிங்‘ வருவதுண்டு. சிகரெட்டு, பீடி, பலான புத்தகங்கள் மாட்டினால் முதல் முறை ‘வார்னிங்‘, இனிமேல் செய்யமாட்டேன் என்று எழுதிக்கொடுக்கவேண்டும். இரண்டாம்முறை என்றால் பெற்றோர் அழைக்கப்படுவார்கள். லாகிரி வஸ்துக்கள் மாட்டுவது வெகு அபூர்வம். அதெற்கெல்லாம் முதல் முறையே பெற்றோரோடுதான் வரவேண்டும். பொதுவாக எப்போதும் மாட்டுவது ஆபாசப் புத்தகங்கள்தான்.
“எல்லாரும் அந்தந்த ‘ரேக்‘ க மூடிட்டு நடுவுல வந்து நில்லு” என்று சத்தத்தோடு அறையின் உள்ளே நுழைந்தார் ‘வார்டன்‘ குருசாமி. முதலில் சண்முகத்தின் முறை. பெட்டியைத் திறக்கச் சொன்னார். பாடப்புத்தகங்களை, இஸ்திரிபோட்டு வந்திருந்த துணிமணிகளை கீழே வைத்து திரும்ப அடுக்கச் சொன்னார். தலையணை உறைகளைக் கழட்டிக்காட்டச் சொன்னார். ஒன்றும் பிரச்சனையில்லை. ‘தாளி…எந்தப்புத்தகம் நல்லா இருக்கும்னு இவன்ட்டகேட்டுத்தான் தெரிஞ்சுக்கிடணும், அம்புட்டு வெச்சுருக்கான்…கைல பாத்தியா…அடுத்த ரூமுல புடுங்குனது…’ என்று கார்த்தியின் காதில் முனகிக்கொண்டிருந்த சேது அடுத்து அவன் முறை என்று தெரிந்ததும் வேகமாகச் சென்று பணிவாக ‘சார்..’ என்றபடி அவனுடைய ‘ரேக்‘கைத் திறந்தான். வரிசைக்கிரமமாக அதே சோதனைகள்.
மரியதாஸ், ஜெல்பி இருவருக்கும் அதே சோதனைகளை முடித்து கடைசியாக கார்த்தியை பார்வையால் அழைத்தார் குரு. கார்த்திக்கு சிறிது கூடநேரம் பிடித்தது. விரிவான சோதனை. “புக், துணியெல்லாம் எடுத்துட்டு கீழ விரிச்சிருக்குற பேப்பரை எடுறா‘ என்றார். ‘மாட்டுனாம் போ..’என்பது போல சேதுவைப் பார்த்தான் மரியதாஸ். ‘அதெல்லாம் பையன் கில்லாடி…’ என்பது போல உடல்மொழி காட்டினான் சேது. ‘நான் மட்டும் என்ன சார் ஸ்பெஷலு‘ என்றபடி எல்லாவற்றையும் எடுத்து பேப்பர்களை உதறிவிரித்தான் கார்த்தி. ‘நீ ஸ்பெஷலுதாண்டா..எவனாவது ஒன்னையமாதிரி முடிவெட்டிருக்கானா..’ என்றபடி சோதனை செய்தார் குரு. எல்லாம் சுத்தம். ‘லைட்டெல்லாம் எரியுதா, டோபி ஒழுங்கா வரானா‘ என்று பொதுவாக விசாரித்தபடி வெளியே சென்றார் குரு. அவர் தலை மறைந்ததும் கெக்கெக்கே… என்று சிரித்தபடி கைலிக்குள்ளிருந்து ‘டெபோனைர்‘ ஐத் தூக்கித் தரையில் போட்டுவிட்டு ‘யார்கிட்ட..’ என்றான் கார்த்தி. ‘தூக்கி உள்ள வெய்யி வெண்ண..திரும்பவந்தார்னா என்ன பண்ணுவ…’ என்றான் சேது பதற்றத்துடன் .
சாப்பாட்டுக்கு நேரம் நிறைய இருந்தது. பேச்சு எங்கெங்கெல்லாமோ சுற்றி இதே ‘டாப்பிக்‘கிற்கு வந்து சேந்தது. ‘இன்னும் எத்தனை நாளைக்குடா புத்தகம் படிச்சுட்டே கெடக்குறது..’ என்றான் கார்த்தி. ‘நம்ம என்ன கருப்பா ..ஊருக்குப்போனா ‘அஜால் குஜால்‘ பண்றதுக்கு..அதுக்கொரு யோகம் வேணும்டா..’ என்று அங்கலாய்த்தான் மரியதாஸ். பக்கத்து ரூம் கருப்பசாமிக்கு கிராமத்தில் வயது வாரியாக தொடுப்புகள் உண்டு. மரியதாசும் அதே ஊர்தான்.
“டே..ஜெல்பி, இங்கேர்ந்து கொண்டுட்டுபோற புத்தகத்தையெல்லாம் என்னடா பண்ணுவாரு?” என்றான் மரியதாஸ் அடங்கிய குரலில்.
“சக்திவேலுட்ட குடுத்து அடுப்புல போடச்சொல்லுவாரு…..” – சக்திவேல் தலைமைச் சமையற்கலைஞன்.
“ஆமா…ஒடனே போட்டுட்டுத்தான் மறுவேலை பாப்பாரு….அதையும் நம்பிக்கிட்டிருக்கான்பாரு, சக்திவேல் .ஒங்கூர்க்காரன்தானடா….கேட்டுப்பார்றா…உண்மையான்னு….” என்றான் சண்முகத்தைப் பார்த்து மரியதாஸ்.
“அவ்வவன் என்னென்ன பண்ணிக்கிட்டிருக்கான்….சும்மா புத்தகத்தைப் படிச்சுக்கிட்டு…சீன் படம் வீடியோ டேப் நிறைய கிடைக்குதுன்றானுக..என்னைக்குடா அதெல்லாம் பாக்குறது” என்றான் கார்த்தி எச்சிலைத்துப்பி ‘ஷூ பாலிஷ்‘ செய்தபடி. கார்த்தி கல்லூரி என்.சி.சி காப்டன். தலைநகர் டெல்லியில் நடந்த குடியரசுதினவிழாவில் அணிவகுப்பில் செல்ல இந்தமுறை கலந்துகொண்டு வந்திருந்தான்.
உடனே சேது ‘ஏ..சீனியர் ஃபேர்வெல்லுக்கு ஒரு ஐடியா இருக்கு…பேசாம கார்த்தி சொன்ன ‘டேப்‘ எடுத்து ஓட்டுவோமா…’ என்றான்.
“எங்கவெச்சு ஓட்டுறது…குருசார் ரூம்புலயா..” என்றான் ஜெல்பி.
“கல்யாணமண்டபம் பிடிப்போம்..நம்ம சுந்தரபாண்டிட்ட சொன்னா அவங்க மண்டபத்தை குடுக்கமாட்டானா…”
“ஆனா ரிஸ்க் இருக்கு…போலீசு புடுச்சான்னா..அசிங்கமாயிரும்..”
“ஏண்டா அவனா ஓனரு…நல்லா குடுப்பார்றா அவங்கப்பா..நம்ம என்ன கல்யாணமா பண்ணப்போறோம்..”
“எந்தக் கல்யாணமா இருந்தாலும், இந்த வைபவம் இல்லாம இருக்குமா…”
“சேது சொன்ன மாதிரி ஒரு மறக்கமுடியாத ‘ஃபேர்வெல்‘ குடுப்போம், என்ன?” என்றான் கார்த்தி.
“பாத்து…போலீசுல பிடிபட்டு எல்லாருக்கும் மறக்கமுடியாம ஆயிரப்போகுது…நமக்கு ‘சீனியர்ஸ்‘ என்னாடா ‘வெல்கம்‘ குடுத்தாங்க…சினிமாக்கு கூட்டிட்டு போனாங்க..அவ்ளதான..நம்மளும் கூட்டிட்டு போவோம்….”
“என்ன படம்டா போனோம்..மறந்து போச்சு”
“அதுமாதிரி நம்மளும் படத்துக்கு கூட்டிட்டுப்போவோம், ஹோட்டல்ல சாப்பிடுவோம். ஒரு மீட்டிங்க வெச்சு பேசி அனுப்புவோம். அத விட்டுப்புட்டு … மண்டவம் புடிக்கிறானுவளாம் மண்டவம்…மண்டவத்துக்குள்ளயே வெச்சு நொங்கக் கழட்டப் போறாய்ங்கடியேய்…”
என்று பலவாறாக பேசப்பட்டு முடிவு எட்டப்படாமலே நின்றது. முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் முதல் வருட இறுதியில் கல்லூரியை விட்டுச்செல்லும் சீனியர்களுக்கு ‘ஃபேர்வெலு‘ம், இரண்டாம் வருட மாணவர்கள் புதிதாகச் சேர்ந்த முதல்வருட மாணவர்களுக்கு ‘வெல்கம்‘ பார்ட்டியும் கொடுப்பது என்று எப்படியோ வழக்கமாகிவிட்டிருந்தது. வரிசையாகக் கொட்டாவிகள் கிளம்ப, காலையில் சாப்பிட்ட தோசையின் ‘எண்ணைச் சொக்கி‘ல் எல்லோருமே கிறங்க ஆரம்பித்திருந்தனர். மதிய உணவிற்கு இன்னும் நேரம் இருந்தது.
**********
இதோ…அந்த நாளும் வந்துவிட்டது. அந்த ஞாயிற்றுக்கிழமை பிரிவுபச்சார விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நீலப்படம் போட்டு அண்ணன்களை ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளாக்க விழாக்கமிட்டியால் முடிவுசெய்யப்பட்டு விட்டிருந்தது. ‘என்ன ஏற்பாடுடா பண்ணிருக்கிறீங்க?’ என்று சீனியர்கள் கேட்க ‘ராஜா சின்ன ரோஜா மாஸ்டர் பிரிண்ட் எடுத்து வெச்சிருக்கோம்ண்ணே… ‘ என்று நீண்டநாட்களாகவே கலாய்த்துக்கொண்டிருந்தார்கள் கார்த்தி&கோ. அந்தப்படத்துக்குத்தான் ‘வெல்கம்‘ பார்ட்டிக்கு தியேட்டருக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள் சீனியர்ஸ்.
மாலை ஆறுமணிக்கு பிரிவுபசாரவிழா ஆரம்பம். ஒளிப்படக்கருவி உபயம் ஜேம்ஸ். இரவு எட்டுமணிக்கு மண்டபத்திற்கு கொண்டுவந்துவிடுவதாக சொல்லியிருந்தான். கார்த்தியும் சேதுவும் ஒளிநாடாக்களைக் கொண்டுவர ‘பூபதி எலக்ட்ரானிக்ஸ்‘ சில் நுழையும்போது ஐந்து மணி. நீலன்தான் ‘என் பேரச்சொல்லு.. செந்திலோட மச்சான்னு சொல்லு…தெரியும். நல்ல பாரின் பிரிண்டாக் கேளு‘ என்று முகவரி கொடுத்திருந்தான். ஸ்டீரியோபோனிக் ஒலியில் ‘புதிய பூவிது பூத்தது…’ மெல்லிதாகக் கசிந்துகொண்டிருந்தது. பாட்டு எப்படி? என்பதுபோல சேதுவை நோக்கி புருவத்தை உயர்த்தினான் கார்த்தி. ‘நான் ஏற்கனவே பாத்துட்டேன்‘ என்பதுபோல அங்கு ஓரத்தில் அமர்ந்திருந்த பெண்ணைத் தொட்டு மீண்டன சேதுவின் கண்கள். ‘தம்பீ, இந்த இந்த பாரத்துல கையெழுத்துப்போடு‘ என்று பூபதி மேசையின்மீது தள்ளிய பாரத்தில் படிக்காமலேயே கையெழுத்துப்போட்டான் கார்த்தி. தான் கடையிலிருந்து ஆபாச ஒளிநாடா எதுவும் பெற்றுக்கொள்ளவில்லையென்றும், அவ்வாறு ஆபாச ஒளிநாடா எதுவும் வாடிகையாளரிடமிருந்து கைப்பற்றப்படும் பட்சத்தில் வாடிக்கையாளரே அதற்குப் பொறுப்பு என்றும் அதில் கண்டிருந்தது. ஆபாச ஒளிநாடா விற்றவகையில் சிறைசென்ற அனுபவம் பூபதிக்கு உண்டு. அதற்குப்பிறகுதான் இதுபோல ஒரு பொறுப்புத்துறப்பு ஏற்பாடு. மற்ற ஒளிநாடாக்களைப் போல இரண்டுமடங்கு வாடகை மற்றும் மக்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாக பூபதியால் இந்தச் சேவையைத் தொடராமலிருக்க முடியவில்லை.
‘நாகு, ராஜா சின்ன ரோஜா, ஒலியும் ஒளியும் பில்லு போட்டுக்க‘ என்றான் பூபதி சற்றுதள்ளி அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்து. நாகு என்றதும் கார்த்திக்கு அவனுடைய ஆச்சி ஞாபகம் வந்தது. அவள் பெயரும் நாகுதான். ‘கெட்ட பயக கூடலாம் சேரக்கூடாது பாத்துக்க..’ என்று விடுமுறைக்குப்பின் கல்லூரிக்குக் கிளம்பி வரும்போதெல்லாம் விபூதி பூசிவிடுவாள். ‘யார் அந்தக் கெட்டபயக?’ என்று மனதுக்குள் சிரித்துக்கொள்வான். ‘லூகோடெர்மா‘ பாதிப்பால் வெள்ளைக்காரியைப் போன்ற நிறம் ஆச்சிக்கு . ‘என்ன இருந்து என்ன, ஒன்நெறம் வந்துச்சா ஒன் மகனுக்கு‘ என்று கிண்டலடிப்பான் கார்த்தி.
‘உள்ளவாங்க‘ என்று அந்த நீண்டவீட்டினுள் அழைத்துச் சென்றான் பூபதி. பருத்தி தரகு, லாட்டரி என்று பல பிசினஸ் பூபதிக்கு. அது சம்பந்தமான சாமான்கள் அறையெங்கும் நிரம்பிக்கிடந்தன. ஒதுக்குப்புறமான இன்னொரு அறையில் இருவரும் நுழைந்ததும் கதவை அடைத்தான் பூபதி. ஒரு அலமாரியைத் திறந்து இரண்டு கேசட்டுகளை எடுத்து, ஒன்றை அங்கிருந்த ஒளிப்படக்கருவியில் நுழைத்து சுவிட்ச்சை இயக்கினான். திரை உயிர்பெற்றதும் சிறிதுநேரம் வேகமாக ஓடவிட்டு டேப் பை நிறுத்தினான் பூபதி. கூட்டுக்கலவியில் ஈடுபட்டிருந்தது ஒரு வெள்ளைக்காரக் கூட்டம். கார்த்தியும், சேதுவும் அனிச்சையாக அறைக்கதவை நோக்கினார்கள். தாழ்பாள் போட்டிருந்தது. ‘அப்பறம் கேசட்டு சரியில்லன்னு கொண்டுவரக்கூடாது. வந்தா பணம் ரிட்டன் கிடையாது‘ சற்று நேரம் பார்த்தபின், அடுத்த கேசட்டை மாற்றினான் பூபதி. ஒரு இளம்பெண்ணும், வயதான ஆணும் கலவி செய்து கொண்டிருந்தார்கள். ‘இருக்குறதிலேயே பெஸ்ட் இந்த ரெண்டும்தான். தமிழ் கூட இருக்கு, அதாவது நம்மாளுங்க நடிச்சது, ஆனா ஏண்டா பாத்தோம்னு இருக்கும். இன்னொரு முக்கியமான விசயம். போலீஸ் ஏதும் புடிச்சான்னா நீங்கதான் பொறுப்பு. இந்தக் கேசட்டெல்லாம் நான் கொடுக்கல. அப்பிடித்தான் உங்ககிட்ட கையெழுத்து வாங்கியிருக்கேன். பத்திரம்‘ என்றபடி கேசட்டுகளை கார்த்தியிடம் கொடுத்தான்.
‘என்னண்ணே, ஜூ..வைக்குடுக்குறீங்க?’ என்றான் கார்த்தி. “பின்ன யாரு உள்ளபோயி ஒக்கார்றது?” என்றான் பூபதி. சேதுவுக்கு ஒருமாதிரி வந்தது. இருந்தாலும் பொறுப்புணர்வோடு அந்த கேசட்டுகளை எப்படி இயக்குவது என்று மறுபடியும் ஒருமுறை கேட்டுக்கொண்டான். நாலு கேசட்டையும் ஒரு துணிப்பையினுள் வைத்த சேதுவை இந்த இரண்டு கேசட்டுகளையும் எடுத்து ‘இன்‘ செய்திருந்த சட்டைக்குள் வைக்கச் சொன்னான் பூபதி.’நீங்க இங்க வாங்குனது ரெண்டே கேசட்டுதான். ராஜா சின்ன ரோஜா, ஒலியும் ஒளியும். அது மட்டும்தான் கையில இருக்கணும். சூதானம்‘ என்று பூபதி சொல்லியது ஏதோ கடை வாசலிலேயே போலீஸ் மறிக்கப்போவதுபோல் இருந்தது. வெளியே வரும்போது ‘பாய்’ அப்போதுதான் போட்டுவிட்டுப்போயிருந்த சாம்பிராணிப்புகையிடையே சற்றே பெரிய மூக்குத்தியோடு அம்மனைப்போலச் சிரித்தாள் நாகு. இதெல்லாம் ஒருவேளை நாகுவுக்கும் காண்பித்திருப்பானோ?
கடையை விட்டு வெளியே வந்ததுமுதல் திக் திக் என்றிருந்தது சேதுவுக்கு. ‘பயமா இருக்குது கார்த்தி‘ என்றபடி சிரித்தான் சேது. ‘அப்ப நீ பாக்காத… போடா வெண்ண. இந்தா அஞ்சு நிமிசம். மண்டபத்துக்குள்ள போயிட்டோம்னா என்னடா பிரச்னை..’ என்று எரிச்சல்பட்டான் கார்த்தி. ‘தம்பீ, இன்னொரு முக்கியமான விசயம். ஒருவேளை போலீஸ் வந்தாய்ங்கன்னா, ‘கரண்ட்‘ டை கட் பண்ணிட்டுத்தான் வருவாய்ங்க. ஜாக்ரத‘ என்று நீலன் எச்சரித்திருந்தது காதில் ஒலித்தது. அதைப்பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தான் கார்த்தி. பார்த்துக்கொண்டிருக்கும்போது போலீஸ் வந்தால் எப்படித் தப்பிப்பது? ச்சை…பிடித்தால் என்ன செய்வார்கள் என்று பூபதியிடம் கேட்க நினைத்து மறந்துபோனதை நினைத்து எரிச்சலாக வந்தது.
இருவரும் சுந்தரபாண்டி கல்யாண மண்டபத்திற்குள் நுழையும்போது பலரும் இருக்குல்ல? என்பதுபோல புருவத்தை உயர்த்த கண்ணை மூடி தலையைச் சாய்த்து அவர்களை ஆசுவாசப்படுத்தினான் சேது. சிறிய மண்டபம்தான். இருவருக்கும் சமோசா,தேநீர் உபசரிப்பு பலமாக இருந்தது. பிரிவுபசாரவிழா ஆரம்பிக்கும்போது ஆறரை ஆகிவிட்டிருந்தது. விசாலமான பட்டாசாலையில் பெரிய ஜமுக்காளங்கள் விரிக்கப்பட்டு அந்தக்காலத்து காங்கிரஸ் காரியக்கமிட்டி அலுவலகம் போல தலையணைகளும் நிறையப் போடப்பட்டிருந்தன. ஆங்கிலம் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்கள் இருபது பேர், முதலாமாண்டு மாணவர்கள் பதினைந்துபேர் என்று சிறுகூட்டம். மரியதாஸ் வரவேற்புரையாற்றியபின் ராமசுப்புவும், நச்சினார்கினியனும் அண்ணன்கள் அவர்களின் படிப்புக்கு எப்படியெல்லாம் உதவி செய்தனர் என்று பாதி உண்மையும், பாதி இட்டுக்கட்டியும் குறைவான தப்புக்களோடு ஆங்கிலத்தில் பேசி, கைதட்டு வாங்கினார்கள்.
அண்ணன்களில் ஒருவர் வேலை, மேல்படிப்பு சம்பந்தமாக சில தகவல்களைக் கூறி அவற்றை குறிக்கோளாகக் கொண்டு செய்யவேண்டியவற்றைக் கூறினார். எல்லோரும் தீவிரமாக கவனித்தனர். பின்னர் முதலாமாண்டு மாணவர்கள் சார்பில் கார்த்தி நன்றி கூறி சற்று நேரத்தில் உணவு எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அதுவரை நமது பாடகர்கள் நம்மை மகிழ்விப்பார்கள் என்று கூற எஸ்.பி.பிக்களும், ஜேசுதாஸ்களும் வரிசையாகப் பாட ஆரம்பித்தனர். ஆஸ்தானப்பாடகன் முருகன் அனைவரின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ‘ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா‘ என்ற டப்பாங்குத்துப் பாடலைப்பாடி மகிழத்தயாராக இருந்த மொத்தக்கூட்டத்தையும் எளிதாக மகிழ்வித்தான். பாட்டு முடியவும் சாப்பாடு வரவும் சரியாக இருந்தது. அசைவம், சைவம் இரண்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலாமாண்டு மாணவர்கள் சிலர் தங்கள் வீடுகளிலிருந்தே உணவு தயாரித்து வரவழைத்திருந்தார்கள். சுவையான உணவு முடிந்ததும் ஐஸ்க்ரீம். தண்ணியடிக்கக்கூடாது என்ற உத்தரவோடு மண்டபம் விழாவுக்காக வழங்கப்பட்டிருந்ததால் அவ்வாறே கடைப்பிடிக்கப்பட்டது.
ஒன்பது மணிக்கு ஜேம்ஸ்சும் அவனுடைய தம்பியும் ‘டெக்‘ கை ஒரு டிவிஎஸ்50 யில் கொண்டுவந்து சேர்த்தார்கள். பங்குத்தந்தையின் கடிதம் கிடைத்தால் ஜேம்ஸுக்கு இறையியல் கல்லூரியில் அடுத்தவருடம் அனுமதி கிடைப்பதில் பிரச்சினை இருக்காது என்று அறிந்திருந்தார் ஜேம்ஸின் தந்தை. அதனால் தோத்திரப்பாடல்கள் ஒளி,ஒலி பரப்பிற்காக ‘சர்ச்‘ சில் ஞாயிறுதோறும் பிரார்த்தனைக்கு ஜேம்ஸ் வீட்டிலிருந்துதான் ‘டெக்‘ போவது வழக்கம். இன்று திரும்பிவர சற்று தாமதமாகிவிட்டது. ஜெல்பியும்,ஜேம்ஸும் ‘டெக்‘ கைக் கொண்டுவந்து கல்யாணமண்டபத்தின் நடு ஹாலில் வைத்தபோது சேதுவுக்கு ஏனோ ஊரில் தேரடிக் கருப்பினுடைய நகைப்பெட்டியை கொண்டுவரும் சடங்கு நினைவுக்கு வந்தது. “மகிழ்ந்து களி கூறுங்கள், கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்” என்று ‘டெக்‘ கின் மேல் ஒட்டப்பட்டிருந்த வாசகத்தைப் பார்த்து சிரித்துக்கொண்ட கார்த்தி முதலில் ‘ஒலியும் ஒளியும்‘ கேசட்டை ஓடவிட்டான். அடுத்தடுத்து கமல், ரஜினி பாடல்கள். அந்தந்த ரசிகர்கள் ஆரவாரித்துப் பார்த்தார்கள். சீனியர்களை கலாய்ப்பதற்காக பத்துமணி போல ‘ராஜா சின்ன ரோஜா‘ படத்தைப் போட்டான் கார்த்தி. ‘என்ன தம்பிகளா, பழிக்குப் பழியா?’ என்றார்கள் அண்ணன்கள். ஒரே ஆரவாரம். ‘சும்மா லந்தைக் குடுக்குறாய்ங்க பங்கு. இருக்கு…கண்டிப்பா இருக்கு. இன்னைக்கி ஒன் ஆத்மா சாந்தியடைஞ்சிரும்‘ என்றார் ஒரு அண்ணன். அடுத்து வருவது என்ன என்று அநேகமாக அனைவருக்கும் தெரிந்துவிட்டிருந்ததனால் அந்த நகைச்சுவை வெகுவாக ரசிக்கப்பட்டது. ஜேம்ஸ் காலில் விழாத குறையாக அவனுடைய தம்பியை வீட்டிற்கு அனுப்பிவைத்தான்.
‘அண்ணே, சத்தம் போடாதீங்க, அமைதி‘ என்றான் கார்த்தி. ‘அமைதியா இருக்கணும்னா அந்தப் படத்தப் போடு…’ என்று சவுண்டு விட்டார்கள் விஷயமறிந்தவர்கள். சற்றே அமைதியானதும் ‘அண்ணே, சத்தம் போட்டு போலீசைக் கூப்பிட்றாதீங்க..ரிஸ்க் எடுத்து வாங்கியாந்திருக்கேன்..’ என்ற பீடிகையோடு முதல் கேசட்டைப் போட்டான் கார்த்தி. பாதுகாப்பு கருதி ஒலி அமைதிப்படுத்தப்பட்டது. பூரண அமைதிக்கிடையே ஓரிருவர் சத்தமாக மூச்சுவிடும் ஒலியும், ஒளிநாடா இயங்கும் மெல்லிய ஒலியும் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.
ஒரு இளைஞனும் இளைஞியும் ஓட்டல் வரவேற்பறையில் சந்தித்துக்கொண்டு முத்தங்களைப் பரிமாறிக்கொண்டு, ‘லிப்ட்‘ டிலேறிச் சென்று ஒரு அறையில் நுழைந்தனர். கதவைச் சாத்தியதும் வெறித்தனமான ஆலிங்கனங்களும், முத்தங்களுமாக உடைகளைக் களைய ஆரம்பித்தனர். இதுவரை பதினோரு மணிக்காட்சியில் கேப்டன் ராஜ், பாலன் கே. நாயர் முதலியோர் பேண்டைக் கழட்டாமல் செய்த ‘ரேப்‘ காட்சிகளைப் பார்த்து சலித்துப்போயிருந்த கண்கள் எந்தச் சந்தேகத்திற்கும் இடமில்லாத துல்லியமான கலவிக்காட்சியை நோக்கி விரிந்து நின்றன. நீட்சி திரட்சிகளைக் கண்டு சற்றே மிரட்சியோடு மலர்ந்திருந்தன. கலவி உச்சத்தில் இருக்கும்நேரம் அறையின் பாத்ரூம் கதவைத் திறந்துகொண்டு ஒரு தூய்மைப் பணியாளர் வந்து ஏதோ கூற, ஒரு அண்ணன் ‘குத்துங்க எசமான் குத்துங்க‘ என்று சத்தம் போட்டுக் கூறவும் அனைவரும் சிரித்தனர். ‘சிகப்பு ரோஜாக்கள்‘ படத்தில் வேறொரு சந்தர்ப்பத்தில் வரும் வசனம் அது. மட்டுறுத்துனர் கார்த்தி ‘அண்ணே..’ என்று இழுக்க அமைதி திரும்பியது.
சற்று நேரத்தில் மேலும் ஒரு ஆணும் பெண்ணும் அறையில் நுழைய கூட்டுக்கலவி ஆரம்பித்தது. ஜேம்ஸும் ஜெல்பியும் ‘சர்ச்‘ சில் மட்டுமே அப்பிடியொரு அமைதியைப் பார்த்திருந்தனர். அந்த அமைதியில் ‘லெட்சுமிபதி இதெல்லாம் நான் பாத்ததே.. யில்ல லெட்சுமிபதி‘ என்று ஒரு அண்ணன் ‘அக்கினி நட்சத்திரம்‘ வி.கே.ராமசாமி குரலில் சொல்ல எல்லோரும் சத்தம்போட்டுச் சிரித்தனர். கார்த்தி ‘அண்ணே..’ என்றவுடன் மறுபடியும் அமைதி. ஒரு அண்ணன் எழுந்து கழிப்பறை நோக்கிச் செல்ல சுற்றியிருந்தவர்கள் சிரித்தனர். “சுப்புரமணியா? அடுத்து போறவுக பாத்துப்போங்க. வழுக்கும்” என்றார் ஒரு அண்ணன் சிரிப்புக்கிடையே. “ஒண்ணுக்கு வருதுடா..மயிறு” என்று திட்டு விழுந்தது சுப்புரமணியிடமிருந்து. முதல் கேசட்டு முடிந்தவுடன் ‘மண்டபத்தைவிட்டு யாரும் வெளியே செல்லவேண்டாம்‘ என்ற அறிவிப்போடு பத்துநிமிட இடைவேளை விடப்பட்டது. கொல்லைப்புறத்திலிருந்த வேப்ப மரத்தடியில் அனைவரும் குழுமினர். ‘சூப்பர் ப்ரிண்டு தம்பி..’, ‘நல்ல ஏற்பாடு தம்பி‘ என்று சிகரெட் புகை நடுவே பாராட்டுமழையில் நனைந்து கொண்டிருந்தான் கார்த்தி.
எல்லோரும் திரும்பிவிட்டார்களா என உறுதிசெய்துகொண்டு சள சள வென்ற பேச்சுக்கிடையே இரண்டாவது கேசட்டைப் போட்டு திரும்ப அமைதியை நிலவச் செய்தான் கார்த்தி. முதலில் ஒரு ஆசிரியர் தன்னுடைய மாணவியை வசியம் செய்து உறவுகொள்ளும் காட்சி. ‘போனா கேர்ள்ஸ் ஹைஸ்கூல்ல வாத்தியாரா போகணும்டா தம்பி..’ என்றார் ஒரு அண்ணன். முடிந்ததும் அதன் ‘உல்டா’வாக ஒரு முதிய ஆசிரியை தன் இளம் மாணவனை வசியம் செய்து உறவுகொள்ளும் காட்சி. எல்லோருமே வசியம் செய்ததுபோல அமர்ந்திருந்தனர். மானசீகமாக அனைவருமே அந்த மாணவனாக மாறியிருந்தது நகர்ந்து உட்காருவதும், பெருமூச்சு விடுவதுமான அவர்கள் உடல்மொழியிலேயே தெரிந்தது. படம் ஓடிமுடிந்ததும் ஜெல்பி மதபோதகரின் குரலில் “ஆத்துமத்துறையும் ஆண்டவரே, ஜேம்ஸ்சையும், அவனிண்டே ‘டெக்‘ கையும் மன்னிப்பீரா? ஜெபத்தோட்ட கீதங்கள் பாடின டெக்காக்குமே? எண்ட கர்த்தாவே” என்று சொல்ல, எல்லோரும் ‘ஓ‘ வென்று ஆரப்பரித்தனர். அப்போதுதான் சேது கவனித்தான் கார்த்தி அங்கில்லாததை. சத்தம் கேட்டு கொல்லைப்புறத்திலிருந்து வந்து கொண்டிருந்தான் கார்த்தி.
“எங்கடா போன, பாக்கலையா நீயி, சூப்பர் கேசட்டுறா, கெளவி என்னா ஆட்டம் போடுறா?” என்றான் மரியதாஸ். கார்த்தி அந்தப் படத்தின் இடையிலேயே கிளம்பி பின்னால் வந்துவிட்டிருந்தான். படத்தில் வந்த வயதானவள் அச்சசலாக அவனுடைய ஆச்சியைப் போலவே இருந்தாள்.