நிர்வாகக் காரணங்களுக்காக செப்டம்பர் மாத இதழினை பதிவேற்றம் செய்ய இயலவில்லை. பொறுத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அடுத்த இதழ் அக்டோபர் 18 அன்று வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சமகாலத்தின் முதன்மையான தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவரான எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் படைப்புகள் சார்ந்து சிறப்பிதழ் இம்மாதம் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
எம்.கோபால கிருஷ்ணன் சிறந்த நாவலாசிரியர் , குறிப்பிடத்தகுந்த சிறுகதைகள் எழுதியுள்ளார். ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருந்து தமிழுக்கு முக்கியமான மொழியாக்கங்களை செய்துள்ளார். சொல் புதிது இதழினை ஜெயமோகனுடன் இணைந்து நடத்தியுள்ளார். ஏறக்குறையை முப்பதாண்டுகளாக இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.
அவர் இதுவரை எழுதியுள்ள நாவல்கள்
1.அம்மன் நெசவு
2.மணல்கடிகை
3.தீர்த்த யாத்திரை
4.மனை மாட்சி
5.வேங்கை வனம்.
மேற்கண்ட அனைத்தும் தமிழினி பதிப்பக வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.
குறுநாவல் தொகுப்புகள்
1.வால்வெள்ளி
2.மாயப்புன்னனை
சிறுகதைத் தொகுப்புகள்
பிறிதொரு நதிக்கரை,முனிமேடு, சக்தி யோகம், அமைதி என்பது
கவிதைத் தொகுதி
குரல்களின் வேட்டை
கட்டுரைத் தொகுப்புகள்
மொழி பூக்கும்நிலம் மற்றும் ஒரு கூடைத் தாழம்பூ
தமிழினிபதிப்பத்தில் எம்.கோ.வின் அனைத்துப் படைப்புகளும் கிடைக்கின்றது.
அக்டோபர் 2023 மாத இதழ் எம்.கோ.சிறப்பிதழாக வெளியிடப்பட உள்ளது. அவரின் ஆக்கங்களை வாசித்து எழுதும் ஆர்வம் உள்ளவர்கள் இவ்விதழின் [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.