இராமானுஜம் மேகநாதன் கவிதைகள்

 

  1. தூக்கம் போயின் துக்கம்

 துக்கம் போயின் தூக்கம்

தூக்கம் வராதபோது

துக்கம் வருகிறது.

தூக்கம் ஏன் வரவில்லையென

தூக்கத்திற்கு தொரியவில்லை

துக்கம் ஏன் வருகிறது?

துக்கத்திற்கு தெரியவில்லை.

இரண்டுமே

துக்கத்திலிருக்கின்ற

தூங்காதவனுக்கு தெரியவில்லை.

துக்க(ம்) பிரச்சினனை

துக்கத்திற்கு மட்டுமல்ல

துக்கத்திலிருக்கின்ற எனக்குதான்.

துக்கப்படுவதற்கு ஆயிரமாய் பிரச்சினைகள்.

மனைவி சொல் முதல்

மத்திய பிரதமர் செயல்  வரை

துக்கமாகிப்போன

துக்கம் தரும் ஆயிரம் பிரச்சினைகள்.

துக்கமறிய துக்கம்

தூக்கமில்லா துக்கம்.

துக்கங்களின் இடைவெளியிடையே

தூக்கம் வருகிறது

இல்லை! இல்லை!

துக்கம் தூங்கும்போது

தூக்கம் வருக்கிறது.

தூக்கம் போயின் துக்கம்.

துக்கம் போயின் தூக்கம்.

 

  1. என்னை விட்டு என்னால் வெளி வரமுடியவில்லை

என்னை விட்டு

என்னால் வெளி வரமுடியவில்லை.

எனக்குள் ஓர் பயம்

என்னவாகுமோ

என்று ஒரு நடுக்கம்.

என்னை விட்டு

என்னால் வெளி வரமுடியவில்லை.

எனக்குள் ஓர் வெட்கம்

என்னைவிட்டு வெளியே வந்தாலும்

என்லுல் ஓர் பதட்டம்

என்னை நான் தொலைத்து விடுவேனோ என்று.

என் பெயர்

என் அழகு

என் படிப்பு, பட்டம்

என் பதவி

என் பேச்சு

என் சாதுர்யம்

என் அகங்காரம்

என் உறவு

என் சாதி

என பல சதிகள்

என்னை சதி செய்ய

என் நான் என்ன செய்ய.

என் எனது எல்லாம்

என்னை அடித்துடைக்கவே

என் என்னை விட்டு

என்னை எடுத்துவரவேண்டும்.

என் உடல்

என் மொழி

என்  நாடு

என் எண்ணம்

என் கொள்கை

என என்

எனது என்

எனது எல்லாம்

என்னைவிட்டு போய்விடும்

என்கிற என் பயம் .

என் தொலைந்தால்

நான் தொலைந்து விடுவேனோ?

நான்

என்னால் என்னுளுள்ள

என்னை

என்னைவிட்டு

என்னிலிருந்து

எட்டி இடிக்கும்போது,

எட்டி எடுக்கும்போது,

என்னுளுள் ஓர் துக்கம்.

அது என்னை

என்னுள்ளே

இறக்கவைத்துவிடுமோ என்று.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *