கடிக்கும் காலணி

 

காலுக்கு உதவாத காலணி.
கழற்றி வீசிவிட்டு
வேறு வாங்கினேன்.
அதுவும் கடிக்கிறது.
காலம் மாறித்தான் போய்விட்டது.
என் அப்பா, தாத்தா காலங்களில்
கடிக்கும் காலணிகள் அரிது;
இப்போது தலைகீழ்.
எனக்கு கடி என்பது
ஒரு பொருட்டே இல்லை;
இதுவும் சிலநேரக் கடிதான்;
ஆனால் தாளமுடியாத கடி.
காலணி வசதி வேண்டியிருக்கிறது —
அவ்வப்போதுதான் என்றாலும்;
காலணி கடியோ தாளமுடியவில்லை;
முரண், ஆனால் உண்மை.
துறவிகளுக்குக்கூட
காலணி வேண்டியிருக்கிறது.
துறவுக்கும் எனக்குமோ
சம்பந்தமேயில்லை.
வீசி எரியும்போது
ஏளனமாகச் சிறித்து
ஒரு கேள்வி கேட்டது:
செருப்பு, செருப்பு என்கிறாய்,
இருந்துவிட்டுப் போகட்டும்.
ஆனால் சிக்கல்
செருப்பிலா, காலிலா?
இதுதான்
தாளமுடியாத கடி என்பது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *