மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்து நம்பிக்கை Trust கண்ணுக்குத் தெரியாத ஒரு நூலிழை. அது தனிமனித உறவுகளையும், சமூகக் கட்டமைப்புகளையும் பிணைத்து வைத்திருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டின் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில், நம்பிக்கையின் ஊற்றுக்கண் மனிதனிடமிருந்து இயந்திரத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. இந்த மாற்றத்தின் மய்யப்புள்ளியாக உருவெடுப்பதுதான் அல்கோ நம்பிக்கை AlgoTrust.
அல்கோ நம்பிக்கை கணினி நிரல்களை நம்புவதுமட்டுமில்லை. தகவல்களின் அடிப்படையில் இயங்கும் நிழல் வழி நமது வாழ்வின் தீர்மானங்களை எடுக்க அனுமதிக்கும் ஒரு சமூக ஒப்பந்தம். முன்பெல்லாம் ஒரு முடிவை எடுக்க நாம் அனுபவம், உள்ளுணர்வு, அல்லது நம்பிக்கைக்குரிய மனிதர்களின் ஆலோசனையை நாடினோம். இன்று, நாம் கூகுள் மேப்ஸ் காட்டும் பாதையை, அமேசான் பரிந்துரைக்கும் புத்தகத்தை, அல்லது நெட்ப்ளிக்ஸ் காட்டும் திரைப்படத்தை எந்தவித தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்கிறோம். இங்கே, ஒரு தனிமனிதனின் அறிவுத்திறனை விட, பில்லியன் கணக்கான தகவல்களைச் செயலாக்கம் செய்யும் நிழல் வழியின் துல்லியத்தின் மீது நாம் வைக்கும் அபாரமான நம்பிக்கையே அல்கோ நம்பிக்கை.
நிழல் வழி தகவல்களின் அடிப்படையில் இயங்குகின்றன. குப்பையை உள்ளீடு செய்தால் குப்பையைத்தான் வெளியே எடுப்போம் என்ற விதிப்படி, தகவல்கள் எவ்வளவு தூய்மையானவையோ, அவ்வளவு தூரம் அல்கோ நம்பிக்கை வலுப்படுகிறது.
மனித உள்ளுணர்வை விட, கடந்த காலத் தகவல்களை வைத்து வருங்காலத்தை முன்னரே கணிக்கும் நிழல் வழியின் திறன், நம்மை வியப்பில் ஆழ்த்தி நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
நிழல் வழி எப்படி ஒரு முடிவை எடுத்தது என்ற தர்க்கம் புரியும் போது, அந்த நம்பிக்கை உறுதியாகிறது. எந்தவொரு நம்பிக்கையும் துரோகத்தால் சோதிக்கப்படுவதுதான் இயல்பு. அல்கோ நம்பிக்கையின் மிகப்பெரிய அச்சுறுத்தல் அல்கோ சார்பு ஆகும். இன, மொழி, அல்லது பாலினப் பாகுபாடுகளை உள்ளடக்கிய தகவல்களால் ஒரு நிழல் வழி இயங்கும்போது, அது அளிக்கும் முடிவுகளும் பாரபட்சமானதாகவே இருக்கும். இது பலருக்குத் தெரியாமல் நடக்கும் ஒரு மின்னணு துரோகம்.
உதாரணமாக, ஒரு நிதி நிறுவனம் கடனளிக்க நிழல் வழியைப் பயன்படுத்தும் போது, அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரை அல்லது வர்க்கத்தினரைத் திட்டமிட்டுத் தள்ளிவைத்தால், அதை யாராலும் எளிதில் கேள்வி கேட்க முடியாது. மனிதனிடம் நாம் நியாயம் கேட்கலாம், ஒரு கருப்புப் பெட்டி போலச் செயல்படும் சிக்கலான நிழல் வழியிடம் நாம் எப்படி நீதியைப் பெற முடியும்? இதுவே அல்கோ நம்பிக்கை எதிர்கொள்ளும் மிகச் சிக்கலான தார்மீகச் சவால்.
எதிர்காலத்தில், மனித உறவுகள் கூட நிழல் வழிகளால் தீர்மானிக்கப்படும் அபாயம் உள்ளது. எந்தத் துணையைத் தேர்ந்தெடுக்கலாம், எந்த நண்பருடன் பழகலாம் என்பதைக்கூட மேட்ச்மேக்கிங் அல்காரிதங்கள் முடிவு செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். இங்கே நம்பிக்கை இரண்டு இதயங்களுக்கு இடையே நிகழ்வதல்ல. அது இரண்டு பயனர் கணக்குகளுக்கு இடையே நிகழும் தகவல்ப் பரிமாற்றம்.
அல்கோ நம்பிக்கை நம்மைச் சோம்பேறிகளாக்குமா அல்லது கூர்மையான முடிவெடுக்கும் ஆற்றல் மிக்கவர்களாக மாற்றுமா ஒரு விவாதம். நாம் கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால், இயந்திரங்களுக்கு நாம் கொடுக்கும் நம்பிக்கையை விட, நிழல் வழிகளை உருவாக்கும் மனிதர்களின் நெறிமுறைகள் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நம்பிக்கை மனித உணர்வுகளின் உச்சம். தொழில்நுட்பம் நம் வாழ்வை எளிதாக்கலாம், அது ஒருபோதும் அறநெறி கொண்டதாக மாற முடியாது. நாம் அல்கோ நம்பிக்கையை வளர்த்துக் கொள்வோம். அந்த அல்காரிதங்களுக்குப் பின்னால் இருக்கும் தகவல்களையும், அதை இயக்கும் நோக்கத்தையும் கேள்வி கேட்கும் துணிச்சலையும் இழந்துவிடக் கூடாது.
இயந்திரம் நமது கால்குலேட்டர் மட்டுமே. நம் வாழ்வின் திசைகாட்டி இல்லை. அல்கோ நம்பிக்கை ஒரு கருவி மட்டுமே என்பதை உணர்ந்து இயங்குவதே, தொழில்நுட்ப அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்கும் ஒரே வழியாகும். எதிர்காலத்தின் நம்பிக்கை மின்னணு திரைகளில் இல்லை.அதை இயக்கும் மனித நேயத்தில்தான் இருக்கிறது.
இந்த நூற்றாண்டின் இரண்டாம் கால் பகுதியில், மனிதகுலம் ஒரு விசித்திரமான சந்திப்பில் நிற்கிறது. ஒருபுறம், மூளைக்கு இணையான செயற்கை நுண்ணறிவு. மறுபுறம், அந்த நுண்ணறிவின் பரிந்துரைகளைத் தன் விதியாக ஏற்கும் மனித மனநிலை. இங்கேயே அல்கோ நம்பிக்கை என்ற கருத்துருவம் பிறக்கிறது.
அல்கோ நம்பிக்கை கணினித் தொழில்நுட்பம் சார்ந்தது மட்டுமில்லை. அது ஒரு தத்துவார்த்த மாற்றம். நாம் எதை உண்ண வேண்டும், யாரைக் காதலிக்க வேண்டும், எதை நம்ப வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை நிழல் வழிகளிடம் ஒப்படைத்துவிட்டோம்.கவிதை வெளியில் குறிப்பாகத் தமிழ் சூழலில், இந்தத் தொழில்நுட்ப ஆதிக்கத்தை எப்படிப் பார்க்கிறார்கள், தகவல் மற்றும் மனித உணர்வு ஆகியவற்றுக்கு இடையேயான மோதலைக் கவிதைகள் எவ்வாறு பதிவு செய்கின்றன என்பதை விரிவாக வாசகன் அறிந்துகொள்வது முக்கியம்.
கவிதை எப்போதும் காலத்தின் நிழல். ஒரு காலத்தில் இயற்கையைத் துதித்த கவிதை, பின் நகரத்து நெருக்கடியைப் பேசியது. இன்று, அது மின்சாரப் பிரதிகளையும் ‘தகவல்ச் சங்கிலிகளையும் தன் கருப்பொருளாக மாற்றிக்கொள்கிறது.
நம்முடைய விருப்பங்களை நிழல் வழி முன் கூட்டியே கணிக்கும்போது, தனிமனித சுதந்திரம் என்னாகிறது என்ற கேள்வி. அல்கோ நம்பிக்கை குறித்து நேரடியாகவும், மறைமுகமாகவும் பல கவிஞர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, நவீனத் தமிழ் கவிதைகளில் தகவல் மற்றும் இயந்திரம் சார்ந்த குறியீடுகள் மிக நுட்பமாக வருகின்றன.
சமூக வலைதளங்களில் நாம் உருவாக்கும் பிம்பத்தை விட, நிழல் வழி நமக்காக உருவாக்கும் பிம்பத்தை அச்சத்துடன் பார்க்கிறார்கள். நாம் எதை விரும்புகிறோம் என்பதைவிட, நம்மை எதை விரும்பச் செய்கிறார்கள் என்பதில் கவிஞர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.
கவிதைப் பிரதிகளில் இது சுயத்தின் இழப்பு என்று குறிப்பிடப்படுகிறது. ஜமீல் ,எ.நஸ்புள்ளாஹ் போன்ற கவிஞர்களின் படைப்புகளில் காணப்படும் ஆடு என்ற குறியீடு, இன்றைய அல்கோ நம்பிக்கைக்கு மிகச்சிறந்த உதாரணம். மேய்ப்பன் கையில் இருக்கும் கத்தியை விட, அவன் காட்டும் புல்லின் நுனியை நம்பிச் செல்லும் ஆடு, நவீன அல்காரிதங்களை நம்பிச் செல்லும் மனிதனின் குறியீடே.
தகவல் துரோகம் கவிஞர்களுக்குப் புதிய வலியைத் தந்துள்ள ஒரு கருப்பொருள். நம்முடைய ஆழ்மன ரகசியங்களை, நமது தேடல் வரலாற்றைக் கொண்டு நிறுவனங்கள் விற்பனை செய்வதை, கவிஞர்கள் ஆத்மாவின் விற்பனை என்கிறார்கள்.
இந்தச் சூழலில், கவிஞர்கள் மௌனத்தை ஒரு ஆயுதமாகக் கையில் எடுக்கிறார்கள். அல்காரிதத்தால் கணிக்க முடியாத ஒரே விஷயம் மனிதனின் தர்க்கமற்ற மௌனம் மட்டுமே. கவிதை அல்காரிதத்திற்குப் பிடிபடாத ஒரு பிழை கவிஞர்கள் தங்களின் பிரதிகளில் அல்காரிதத்தை முறியடிக்க அல்லது அதை மழுங்கடிக்க முயற்சி செய்கிறார்கள்.
அல்கோ நம்பிக்கை நமது வாழ்நிலையை எப்படிப் பாதிக்கிறது? இதை கவிஞர்கள் பின்வரும் புள்ளிகளில் அடையாளப்படுத்துகிறார்கள்.
நிழல் வழிகள் நமக்குத் தேவையானதை மட்டும் காட்டும்போது, உலகின் பரந்த சாத்தியக்கூறுகளை நாம் இழக்கிறோம். கவிஞர்கள் இந்த சுருக்கத்தை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஒரு மனிதனின் துக்கத்தைக்கூட ஒரு ஏஐ பாட் கையாளும் போது, அந்தத் துக்கம் உண்மையானதா அல்லது கணிக்கப்பட்டதா? இந்தக் கேள்வி நவீன கவிதைகளின் மய்யத்தில் இருக்கிறது. வருங்காலத்தில், கவிஞர்கள் அல்கோ எதிர்ப்பு கவிதைகளை உருவாக்கக்கூடும். தொழில்நுட்பத்தை நிராகரிப்பது கவிஞரின் வேலையில்லை. தொழில்நுட்பத்தால் மழுங்கடிக்கப்படும் மனிதத்தன்மையை மீட்பதே கவிஞரின் பணி.
கவிதைகள் இனி, கோட் கவிதைகளாக மாறலாம். கம்ப்யூட்டர் மொழியையும், மனித உணர்வுகளையும் இணைத்து ஒரு புதிய கலவை உருவாகலாம். உதாரணமாக, ஒரு அல்காரிதத்தின் பிழையான தகவல்களைப் பற்றிப் பேசும் ஒரு கவிதை, அதே அல்காரிதத்தைப் பயன்படுத்திப் பிரசுரிக்கப்படும் விசித்திரம் நடக்கலாம்.
அல்கோ நம்பிக்கை தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தம். அதை நாம் முற்றிலுமாகத் துறக்க முடியாது. நாம் கவிஞர்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றுதான். இயந்திரங்களுக்குக் கொடுக்கப்படும் நம்பிக்கையை விட, நமக்குள் இருக்கும் அற உணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கவிதை பிரதிகள் இனி, தகவல்களின் பெருவெளியில் தொலைந்துபோகும் மனிதத் துடிப்பைக் கண்டெடுக்கும் கருவிகளாக இருக்கும். அல்காரிதம் நமக்கு என்ன தர வேண்டும் என்று நினைக்கிறதோ, அதைத் தாண்டி மனிதன் எதை கனவு காண வேண்டும் என்று விரும்புகிறானோ, அதை உரக்கச் சொல்வதே நவீன கவிஞர்களின் பணி.
நாம் அல்கோ நம்பிக்கையை வளர்த்துக் கொள்வோம், மனித நம்பிக்கையை தொலைத்துவிடக் கூடாது. அந்தப் பாதுகாப்பான கோட்டைதான் கவிதை. அதுவே தகவல்களுக்கு அப்பாற்பட்ட உண்மையை, நம் வாழ்வின் கடைசிப் பசியை, நம் காயங்களை, நம் நம்பிக்கைகளை உலகுக்கு உணர்த்தும்.
அல்கோ நம்பிக்கை பற்றியதான தளத்தை இங்கு இரு கவிதைகள் உரையாடுகின்றன.
ஜமீல் கவிதை
ஆடு ஜீவிதம்
~
கழுத்தறுபடும் நொடியிலும்
ஆடுகளின் கண்களில்
மிதந்து கொண்டிருக்கிறது
ஒரு பச்சைக் கொத்து
தொழுவத்தின் அரவணப்பை விட
மிக அடர்த்தியானது
பசியின் கண்ணீர்
பலி பீடத்திற்கு
அழைத்துச் செல்பவன் கைகளில்
கூர் மழுங்கா கத்தியிருப்பதை
அவை கவனிப்பதே இல்லை
எல்லா ஓநாய்களையும்
மேய்ப்பர்களாக நம்புவதுதான்
ஆடுகளின் பலவீனமாகும்
காலமொரு கசாப்புக் கடைக்காரன்
அது நீட்டும் புல்லின் நுனியில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
ஆடுகளின் மரணம்
ஏ.நஸ்புள்ளாஹ் கவிதை
கடைசிப் பசி
~
கொல்லும் கரத்தின்
வெப்பத்தை உணராமலே
தலை சாய்க்கின்றன ஆடுகள்.
தினமும் அரவணைத்துத் தீராத அன்பு என நினைத்த கைகள்
அறுக்கத் துணிவதைப் பார்த்தும்
சற்றும் அறிந்திராது
அக்கைகளை முத்தமிடுகின்றன.
கத்தியின் கூர்மையை விட – இங்கே
நம்பிக்கையின் மழுப்பலே
அதிகம் காயப்படுத்துகிறது.
பலியாகப் போவது
கழுத்து மட்டுமல்ல
மேய்ப்பாளன் மீது கொண்ட நம்பிக்கையும்தான்.
இதோ
இரத்தக் கறை படிந்த புல்வெளியில்
அப்படியே உறைந்து போகிறது
அதன் கடைசிப் பசி.
மனித நாகரிகத்தின் தொடக்கத்தில் நம்பிக்கை கண்ணுக்குத் தெரியாத ஒரு நூலிழை. அது மனிதர்களுக்கு இடையேயான பிணைப்பு. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில், நம்பிக்கை என்ற சொல்லின் இலக்கணமே மாறிவிட்டது. இன்று நாம் ஒருவரை நேருக்கு நேர் பார்த்து நம்புவதை விட, நம் கைகளில் இருக்கும் திரையில் தோன்றும் ஒரு அல்காரிதம் பரிந்துரைக்கும் தகவலை, அல்லது ஒரு நிறுவனத்தின் டிஜிட்டல் ஒப்பந்தத்தை அதிகம் நம்புகிறோம். கவிஞர் ஜமீல் மற்றும் ஏ.நஸ்புள்ளாஹ் ஆகியோரின் கவிதைகள், ஆட்டை ஒரு குறியீடாகக் கொண்டு, இந்த நவீன கால அல்கோ நம்பிக்கை எப்படி மனிதனை ஒரு பலிக்கடாவாக மாற்றுகிறது என்பதை மிகத் துல்லியமாகப் பதிவு செய்கின்றன.
ஜமீலின் ஆடு ஜீவிதம் மற்றும் நஸ்புள்ளாஹ்வின் கடைசிப் பசி ஆகிய இரு கவிதைகளும் வெவ்வேறு தளங்களில் பயணித்தாலும், அவற்றின் மய்யப்புள்ளி ஒன்றுதான். தெரியாத ஆபத்தை இனம் காண முடியாத அப்பாவிகளின் நம்பிக்கை.
ஜமீல் கவிதையில் வரும் எல்லா ஓநாய்களையும் மேய்ப்பர்களாக நம்புவதுதான் ஆடுகளின் பலவீனம் என்ற வரி, இன்றைய டிஜிட்டல் யுகத்தின் மிகச்சரியான விமர்சனம். நாம் எந்தெந்த செயலிகளை எந்தெந்த தளங்களை நம்பி நம் வாழ்வின் தகவல்களைத் தருகிறோம்? அவை நம்மை மேய்ப்பவையா அல்லது வேட்டையாடுபவையா என்று உணராத ஒரு சமூகமாக நாம் மாறிவிட்டோம்.
நஸ்புள்ளாஹ்வின் கவிதையில், கத்தியின் கூர்மையை விட நம்பிக்கையின் மழுப்பலே அதிகம் காயப்படுத்துகிறது என்ற வரிகள், இயந்திரங்கள் மீது நாம் வைக்கும் அப்பட்டமான நம்பிக்கையை விமர்சிக்கின்றன. நாம் பயன்படுத்தும் அல்காரிதங்கள் நம்மை வழிநடத்துவதாக நினைக்கிறோம், உண்மையில் அவை நம்மை ஒரு பலிபீடம் நோக்கி அழைத்துச் செல்கின்றன.
இன்றைய வாழ்நிலைச் சூழலில் அல்கோ நம்பிக்கை ஒரு தவிர்க்க முடியாத நிழல்.
நாம் என்ன வாங்க வேண்டும், என்ன பார்க்க வேண்டும், யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை ஒரு பரிந்துரை அல்காரிதம் முடிவு செய்யும் போது, அங்கே தனிமனிதத் தேர்வு சாகடிக்கப்படுகிறது. கவிஞர் ஜமீல் குறிப்பிடும் காலமொரு கசாப்புக் கடைக்காரன் என்ற வரி, இங்கே நிழல் வழியை குறிக்கிறது. அது காட்டும் அந்த புல்லின் நுனி நமக்குத் தரப்படும் போலிச் சலுகைகள் அல்லது தற்காலிகத் தேடல்கள். அதன் நுனியில் மரணம் தொங்கிக்கொண்டிருக்கிறது என்பது, தகவல்த் திருட்டு மற்றும் தனியுரிமை இழப்பைக் குறிக்கும் குறியீடே.
ஏ. நஸ்புள்ளாஹ்வின் கவிதையில் ஆடுகள் கைகளை முத்தமிடுகின்றன. இது ஒருவிதமான டிஜிட்டல் அடிமைத்தனம். நம்மை ஆளுகின்ற அல்காரிதங்களை, அவற்றின் நுட்பத்தை உணராமல், அதை ஒரு ‘அன்புக்கரமாக நினைத்து நாம் முத்தமிடுகிறோம். இந்த முத்தம் நமது தனிப்பட்ட தகவல்களை மகிழ்வுடன் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக நாம் பெறும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட அடிமைத்தனம்
முந்தைய காலத்தில் நம்பிக்கை துரோகம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குச் செய்வது. எதிர்காலத்தில் அது சிஸ்டம் நமக்குச் செய்யும் துரோகமாக இருக்கும்.
நிழல் வழி குறிப்பாக மருத்துவமனையை உங்களுக்குப் பரிந்துரைக்கிறது என்றால், அது உங்கள் நலம் கருதியா? அல்லது நிறுவனத்தின் கமிஷன் கருதியா? இங்கே நம்பிக்கை முறியும் இடம் பலிபீடம். கவிஞர் நஸ்புள்ளாஹ்வின் மேய்ப்பாளன் மீது கொண்ட நம்பிக்கையும்தான் என்ற வரிகள், நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது நாம் வைக்கும் பெரும் நம்பிக்கையைச் சுட்டிக்காட்டுகின்றன. அந்த மேய்ப்பாளன் நமக்குத் தீமை விளைவிக்க மாட்டான் என்று நம்பி, நமது டிஜிட்டல் கழுத்தை நீட்டுகிறோம்.
கவிதைகளில் வரும் ஆடுகள் சத்தம் போடாமல் பலியாகின்றன. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நம்முடைய தனியுரிமை மற்றும் தகவல்கள் திருடப்படும் போது, அதை எதிர்த்து நாம் சத்தமிடுவதில்லை. அது ஒரு மௌனமான மரணம். கடைசிப் பசி நாம் எதையோ தேடி ஓடி, இறுதியில் எதையும் அடையாமல் தகவல்களாக மட்டுமே எஞ்சி நிற்கும் ஒரு கையறு நிலை.
ஜமீல் மற்றும் நஸ்புள்ளாஹ்வின் கவிதைகள் தமிழ்க் கவிதையியலில் ஒரு புதிய திறப்பை உருவாக்குகின்றன. இது தொழில்நுட்பப் படிமங்களின் வழி பேசும் வாழ்வியல் கவிதை.
ஜமீலின் வரிகளில் ஆடுகளின் கண்களில் மிதந்து கொண்டிருக்கிறது ஒரு பச்சைக் கொத்து இன்றைய மனிதனின் திரையில் தெரியும் நோட்டிபிகேஷன் போன்றது. பசியால் துடிக்கும் ஆடுக்கு அந்தப் பச்சைத் துண்டுதான் உலகம். அதேபோல், டிஜிட்டல் உலகில் தொலைந்துபோன நமக்கு, அல்காரிதம் காட்டும் ஒரு சிறிய லைக் அல்லது கமெண்ட் அந்த பச்சைத் துண்டுதான். அந்தத் துண்டுக்கு பின்னால் ஒரு கசாப்புக் கடை இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
ஏ. நஸ்புள்ளாஹ்வின் கவிதையில் இரத்தக் கறை படிந்த புல்வெளி என்பது இணையத்தின் இருண்ட பக்கத்தைக் குறிப்பதாகப் பொருள் கொள்ள முடியும். மனிதர்களின் உணர்வுகளைப் பணமாக்கும் தகவல்ச் சந்தையைவிட ஒரு பெரிய கசாப்புக் கடை உலக வரலாற்றில் இருந்ததில்லை.
ஜமீல் மற்றும் நஸ்புள்ளாஹ்வின் கவிதைகள் எச்சரிக்கை மணி அடிக்கின்றன. இந்த அல்கோ நம்பிக்கை என்ற மாய வலையில் இருந்து நாம் எப்படி மீள்வது?
மீட்சி தொழில்நுட்பத்தை மறுப்பதில் இல்லை. அதைச் சந்தேகிப்பதில் இருக்கிறது. அல்காரிதம் ஒரு கருவி, அது மேய்ப்பன் அல்ல. நாம் எதை நம்புகிறோம், யாருடைய கைகளை முத்தமிடுகிறோம் என்று சிந்திப்பதே, இந்த டிஜிட்டல் கசாப்புக் கடையில் இருந்து நம் கழுத்தை விடுவிக்கும் ஒரே வழி.
நவீன கவிதைகள் இன்று ரசனைக்கானவை இல்லை. அவை எதிர்காலத்தைப் பற்றிய பெரும் எச்சரிக்கைகள். ஜமீலின் ஆடுகளும், நஸ்புள்ளாஹ்வின் கடைசிப் பசியும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அந்த அப்பாவியான நம்பிக்கையின் அடையாளங்கள். நாம் மேய்ப்பர்களாக நம்பும் ஓநாய்களை அடையாளம் காண வேண்டிய காலம் இது.
தொழில்நுட்பம் வளர வளர, மனிதத்தன்மை சுருங்குகிறது. இந்தப் போராட்டத்தை, கவிதை தனது கூர்மையான சொற்களால் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும். நாம் கவனிக்கத் தவறினால், புல்வெளியில் உறைந்து கிடக்கும் ஆடாக நமது கனவுகளும், நம்பிக்கைகளும் மாறிப்போகும் என்பதே இந்த இரண்டு கவிதைகளும் நமக்குத் தரும் தீர்க்கதரிசனமான பாடம்.
ஜமீலின் கவிதைகள், நவீன தமிழ்க் கவிதைப் பரப்பில் மிக அழுத்தமான மற்றும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன. ஆடு ஜீவிதம் போன்ற கவிதைப் பிரதியின் அடிப்படையில், அவரது கவிதைகளின் போக்கையும், அவற்றின் பாடுபொருளையும் பின்வருமாறு வகைப்படுத்த முடியும்
ஜமீலின் கவிதைகள் வாழ்வின் மென்மையான பக்கங்களை விட, அதன் அதிகாரக் கட்டமைப்புகளையும், ஒடுக்குமுறைகளையும் நேரடியாகப் பேசுகின்றன. அவர் இயற்கையையும், விலங்குகளையும் இயற்கை , மிருகங்களை குறியீடுகளாகக் கொண்டு, மனித சமுதாயத்தின் அடிமைத்தனத்தை மிகத் துல்லியமாகச் சித்தரிக்கிறார்.
ஜமீலின் கவிதைகள், நவீன தமிழ்க் கவிதைப் பரப்பில் மிக அழுத்தமான மற்றும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன
இந்த இரு கவிதைகளும், வாழ்நிலை சூழலின் நெருக்கடியை மிக அழகாகத் தமிழ்க் கவிதைப் பரப்பில் நிலைநிறுத்தியுள்ளன. இயந்திரங்களுக்கு அடிமைப்படும் இந்த நூற்றாண்டில், மனிதன் தன் சுயத்தை இழக்காமல் இருக்க கவிதை ஒரு கேடயமாகத் திகழ்கிறது.
22/06/2026
